நீங்கள் புதிய வீடு கட்ட, நிலம் வாங்க துதிக்க வேண்டிய மந்திரம்

murugan

பண்டையத் தமிழர்கள் குறிஞ்சி நிலக் கடவுளாக முருகப் பெருமானை வழிபட்டு வந்துள்ளனர். வடமொழியில் சண் என்றால் ஆறு எண்ணை குறிக்கிறது. ஆறு சக்திகளை தன்னுள் கொண்டவராக இருப்பதால் இவருக்கு ஷண்முகம் என்கிற ஓவர் திருப்பெயரும் உண்டு. எளியோருக்கு எளியோராகவும்,வலியோர்க்கு வலியோராகவும் இருப்பவர் முருகன். அவர் ஆயுதமாக கொண்டிருக்கும் வேலானது நம்மை தாக்க வரும் கர்மவினைகளையும், துஷ்ட சக்திகளையும் அழிக்கும் வல்லமை கொண்டதாகும். ஷண்முகராக இருக்கும் முருகனுக்குரிய இந்த மூல மந்திரத்தை துதிப்பவர்களுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Murugan_ Swamimalai

ஷண்முகர் மூலமந்திரம்

ஓம் ஹ்ரீம் ஷம் ஷண்முகாய நம

சண்முகநாதராகிய முருக பெருமானை போற்றும் மூல மந்திரம் இது. முருகப்பெருமான் பூமிகாரகனாகிய செவ்வாய் பகவான் அம்சம் கொண்டவர் எனவே செவ்வாய் கிழமை, மாதந்தோறும் வரும் கந்த சஷ்டி, கிருத்திகை நட்சத்திர தினங்களில் காலை அல்லது மாலை வேளையில் முருகப்பெருமானின் கோவிலுக்கு சென்று, அவருக்கு தீபாராதனை காட்டும் போது இத்துதிகளை வாய்விட்டு சத்தமாகவோ அல்லது மனதிற்குள்ளோ 108 முதல் 1008 முறை வரை துதித்து வர வேண்டும். இதனால் கூடிய விரைவில் சொந்த வீடு, நிலம் இல்லாதவர்களுக்கு அவற்றை பெறும் யோகம் உண்டாகும். அசையா சொத்துக்கள் சம்பந்தமாக இருக்கும் பிரச்சனை நீங்கும். தொழில், வியாபாரங்களில் ஏற்பட்டிருக்கும் போட்டிகள், சூழ்ச்சிகளால் உங்களுக்கு பாதிப்புகள் ஏற்படாமல் காத்து சீரான வருமானத்தை கொடுக்க வழிவகை செய்யும்.

Murugan_ Swamimalai

முருகன் வழிபாட்டிற்குரிய தினங்கள்

- Advertisement -

தினந்தோறும் முருகப் பெருமானை வழிபடலாம் என்றாலும் அவரின் முழுமையான அருளைப் பெறுவதற்கு வழிபாடு செய்ய மாதத்தில் வருகின்ற செவ்வாய்க்கிழமைகள் மற்றும் மாதந்தோறும் வருகின்ற சஷ்டி தினங்கள் ஆகியவை சிறப்பான தினங்களாக இருக்கின்றன. ஐப்பசி மாதத்தில் வருகின்ற சஷ்டி திதியில் கந்த சஷ்டி விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் சிறப்பான பலன்கள் ஏற்படும். குறிப்பாக குழந்தை பாக்கியம் இல்லாதாவர்களுக்கு குழந்தை பாக்கியம் அருளும் விரதம் சஷ்டி விரதம். அதுபோல கார்த்திகை மாதம் முழுவதும் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபடுவது சிறப்பான பலன்களைத் தர வல்லதாகும்.

kantha sasti kavasam lyrics

முருகன் வழிபாடு பலன்கள்

முருகப்பெருமானின் முறைப்படி வழிபடுபவர்களுக்கு நீண்ட நாட்களாக இருக்கும் நோய்கள் நீங்கும். எதிரிகள் தொல்லைகளை நீக்கும். மேலும் எதிரிகள் உருவாகாமலும் தடுக்கும். துஷ்ட சக்திகளின் பாதிப்பிலிருந்து காக்கப்படுகிறார்கள். திடீர் ஆபத்துக்கள் ஏற்படாமல் காக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். சொந்த வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். கணவன் மனைவி கருத்து வேறுபாடு உண்டாகும். குடும்ப பிரச்சனைகள் விரைவில் தீரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிட்டும். நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். வேலை தேடி அலைபவர்களுக்கு தங்களுக்கு ஏற்ற நல்ல வேலை கிடைக்கும். தொழில், வியாபாரங்கள் சிறக்கும். லாபங்கள் பெருகும்.

இதையும் படிக்கலாமே:
குடும்பத்தில் வறுமையை போக்கும் மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Shanmugar moola mantra in Tamil. It is also called as Shanmuga mantra in Tamil or Murugan mantras in Tamil or Moola mantras in Tamil or Sondha veedu katta manthiram in Tamil.