சிங்கை 24 மணி நேரமும் சுத்தமாக வைத்துக் கொள்ள இல்லத்தரசிகளுக்காக வீட்டு குறிப்பு

shink1
- Advertisement -

சமையலறையில் இருக்கக்கூடிய சிங்க் 24 மணி நேரமும் சுத்தபத்தமாக இருந்தால் தான் சமையலறை பார்ப்பதற்கு லட்சணமாக இருக்கும். பெண்களுடைய மனதும் எப்போதும் சந்தோஷமாக இருக்கும். இது ஆரோக்கியத்திற்கு ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். சமையலறை சிங்க் எப்போதும் சுத்தமாக இருக்க, அதில் இருக்கும் வழுவழுப்புத் தன்மை நீங்க என்ன செய்வது இல்லத்தரசிகளுக்கு தேவையான பயனுள்ள வீட்டு குறிப்பு இதோ உங்களுக்காக.

சிங்க் சுத்தம் செய்ய வீட்டு குறிப்பு

சிங்கை சுத்தம் செய்வதற்கு நாம் எந்த கெமிக்கல் கலந்த பொருட்களையும் இப்போது பயன்படுத்த போவது கிடையாது. உங்கள் வீட்டில் இருக்கும் கோதுமை மாவைத் தான் பயன்படுத்த போகின்றோம். ஒரு கைப்பிடி கோதுமை மாவை சிங்கில் தூவி விட்டு, ஒரு ஸ்டீல் நாரை போட்டு நன்றாக தேய்த்து எடுத்தால் போதும். அந்த சிங்கில் இருக்கும் வழுவழுப்பு தன்மை கொழ கொழப்பு தன்மை அழுக்கு எல்லாமே முழுமையாக நீங்கி வந்துவிடும். உப்பு கறை போகாது. சிங்கில் இருக்கும் அழுக்கையும் கொழகொழப்பு தன்மையையும் நீக்க தான் இந்த குறிப்பு.

- Advertisement -

லேசாக தண்ணீர் தெளித்து இந்த கோதுமை பொடிவை சிங்கில் தூவி, உடனடியாக ஸ்டீல் நாரை வைத்து தேய்த்து தண்ணீர் ஊற்றி கழுவி விட்டு விடுங்கள். கோதுமை மாவை தூவி சிங்கில் ஊற வைத்தால் அது காய்ந்து போய்விடும். சிங்கில் ஒட்டி பிடிக்கும். பிறகு அதை கழுவுவதற்கு உங்களுடைய கைக்கு பலம் பத்தாது அதையும் கொஞ்சம் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

விற்கும் விலைவாசிக்கு கோதுமை மாவை போட்டு சிக்கை சுத்தம் செய்வதா? சப்பாத்தி திரட்ட, பூரி திரட்ட உதிரி மாவை பயன்படுத்தி மீதம் எடுத்து குப்பையில் கொட்டுவீர்கள் அல்லவா. அந்த மாவை சிங்கக் கழுவி சுத்தம் செய்யுங்க. சிங்கை கழுவ எந்த லிக்விடை பயன்படுத்தினாலும் பணம் கொடுத்து தான் வாங்க போறீங்க.

- Advertisement -

ஆகவே அந்த லிக்விட் வாங்கும் பணத்திற்கு இந்த கோதுமை பொடி நிச்சயம் விலை மலிவாகத்தான் இருக்கும். சரி கோதுமை மாவு போட்டு சிங்கை சுத்தம் செய்து பார்த்தால் சிங்கில் இருக்கும் வழுவழுப்பு தன்மை அழுக்கு எல்லாம் நீங்கி விட்டது. சந்தோஷம், ஆனால் இந்த துர்நாற்றம் போகவில்லையே என்ன செய்வது.

துணி துவைக்கும் சோப்பு, குளிக்கும் சோப்பு எல்லா சோப்புகளும் இறுதியில் சின்ன சின்ன துண்டாக மிச்சமாகி இருக்கும். இதையெல்லாம் தூக்கி நிறைய பேர் குப்பை தொட்டியில் தான் போடுவார்கள். அப்படி செய்யாதீங்க அதிலிருந்து ஒரு ரெண்டு துண்டு சோப்பை எடுத்து சிங்குக்குள் போட்டு வையுங்கள்.

- Advertisement -

அந்த தண்ணீர் போகும் ஓட்டையில் இரண்டு சோப்பு துண்டுகள் இருந்தால் துர்நாற்றம் வீசாது. அது மட்டுமல்லாமல் அந்த சோப்புத்தூண்டை வைத்து உங்களுடைய சிங்க் முழுவதும் தேய்த்து கழுவினால் சிங் 24 மணி நேரம் வாசமாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: தங்க நகைகளை சுத்தம் செய்ய எளிமையான வீட்டு குறிப்புகள்

இரவு சிங்கிள் இருக்கும் பாத்திரத்தை தேய்த்து முடித்துவிட்டு, மேல் சொன்ன முறைப்படி சிங்கை சுத்தம் செய்துவிட்டு தூங்கச் செல்லுங்கள். மறுநாள் காலை ரிலாக்ஸ் ஆக உங்களுடைய நாள் தொடங்கும். இல்லத்தரசிகள் சந்தோஷமாக சமையலை தொடங்குவார்கள். இந்த எளிமையான குறிப்பு கெமிக்கல் கலந்த பொருட்கள் வாங்க கூடிய செலவை மிச்சப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இல்லத்தரசிகளுக்கு பிடித்திருந்தால் மட்டும் இந்த குறிப்பு முயற்சி செய்து பார்க்கவும்.

- Advertisement -