உங்க வீட்டு சிங்கிள் படிந்திருக்கும் விடாப்பிடியான உப்பு கறையை போக்க செலவே இல்லாத சுலபமான ஐடியா! தேவைப்பட்டால் ட்ரை பண்ணி பாருங்க.

shink
- Advertisement -

சமையலறையில் இருக்கும் சிங்கை உப்பு கறை படியாமல் பார்த்துக் கொள்வது என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. இல்லத்தரசிகளுக்கு சிங்கை சுத்தம் செய்வது என்பது ஒரு மிகப்பெரிய வேலை. அதுவும் உப்பு தண்ணீர் கொண்ட இடத்தில் சிங்க், சிங்குக்கு பக்கத்தில் இருக்கும் மேடை எல்லாமே வெள்ளை வெள்ளையாக, திட்டுக்கள் படிந்து தான் இருக்கும். என்னதான் சுத்தம் செய்தாலும் அந்த இடம் அசுத்தமாக இருப்பது போலவே நமக்கு தெரியும். இந்த உப்பு கறையை சுத்தம் செய்ய, காசு செலவு செய்தால் நிறைய கிளீனிங் லிங்க் வீடுகள் நமக்கு கிடைக்கும். ஆனால் குறைந்த செலவில் எந்த கெமிக்கல் பொருட்களும் கலக்காமல் அந்த கறையை நீக்க வேண்டும் என்றால் என்ன செய்யலாம். அதற்கும் நிறைய வழி இருக்கிறது. அதிலிருந்து பெஸ்டான ஒரு சில ஐடியாவை தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். உப்பு கறை படித்த சிங்கை சுத்தம் செய்ய ஐடியா.

உப்பு கறை படிந்த சிங்கை சுத்தம் செய்ய சுலபமான வீட்டு குறிப்புகள்:
முதல் ஐடியா உப்பு காகிதம் வைத்து தான். பெரும்பாலும் இது எல்லா எலக்ட்ரிஷன் கடைகளிலும் கிடைக்கும். பத்து ரூபாய் கொடுத்தாலே போதும். நமக்கு தேவையான உப்பு காகிதம் கிடைத்துவிடும். சிங்கை சுத்தம் செய்துவிட்டு அது நன்றாக காய்ந்த பிறகு, ஈரம் இல்லாமல் இருக்கும் சமயத்தில், இந்த உப்பு காகிதத்தை போட்டு தேய்க்க வேண்டும். எந்த இடத்தில் எல்லாம் வெள்ளை நிறத்தில் உப்பு கறை படிந்து இருக்கிறதோ, அந்த இடத்தை எல்லாம் நன்றாக தேய்த்துக் கொடுத்தால், வெள்ளை ஆக அந்த அங்கு படிந்திருக்கும் உப்பானது கொஞ்சம் கொஞ்சமாக நீங்கிவிடும். பிறகு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அந்த இடத்தை கழுவி விடுங்கள்.

- Advertisement -

இரண்டாவது குறிப்பாக, ஷிங்கை சுத்தம் செய்ய நமக்கு தேவைப்படப் போகும் பொருள் செங்கல் தூள். எல்லா இடங்களிலும் செங்கல் கிடைக்கும். நீங்கள் காசு கொடுத்து வாங்கினாலும் சரி, பக்கத்தில் வீடு கட்டக்கூடிய இடத்திலிருந்து ஒரு செங்கலை தூக்கிட்டு வந்தாலும் சரி, அதை நன்றாக உடைத்து நசுக்கி தூள் செய்து கொள்ளுங்கள். செங்கல் தூளாக நமக்கு கிடைக்க வேண்டும். அந்த செங்கல் தூளை ஷிங்குக்கு மேலே தூவி, கொஞ்சம் வினிகரை ஊற்றிவிட்டு ஸ்டீல் நாரை வைத்து நன்றாக தேய்த்துக் கொடுத்தால் மீதம் இருக்கும் உப்பு கறையானது நீங்கி இருக்கும்.

மூன்றாவது குறிப்பாக சிங்கை சுத்தம் செய்ய நாம் எடுக்கப் போகும் பொருள் பல் தேய்க்கும் பேஸ்ட். 1 ஸ்பூன் பேஸ்ட் எடுத்து சிங்கில் ஆங்காங்கே தடவி விட்டு, ஒரு ஸ்டீல் நாரை வைத்து நன்றாக தேய்த்து சுத்தம் செய்துவிட்டு தண்ணீரை ஊற்றி கழுவி விடுங்கள். அப்போது கொஞ்சம் உப்பு கறை நீங்கும்.

- Advertisement -

இது அல்லாமல் எலுமிச்சை பழச்சாறு, பேக்கிங் சோடா, வினிகர், போன்ற பொருட்களை எல்லாம் சிங்கிள் போட்டு ஸ்டீல்நாரை கொண்டு நன்றாக தேய்த்து சுத்தம் செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: பாட்டி காலத்து பழைய கரி பிடிச்ச பாத்திரத்தை கூட புதுசு போல பளப்பளன்னு மாத்த இதோ இந்த சூப்பர் ஐடியாவை ட்ரை பண்ணுங்க.

நல்லா கவனிச்சுக்கோங்க. ஆசிட் ஊத்தாம நீண்ட நாள் படிந்த உப்புக் கறையை நீக்குவது அவ்வளவு சுலபமல்ல. ஒரே நாளில் எல்லா உப்பு கறையையும் நீக்கவும் முடியாது. இந்த குறிப்புகளை எல்லாம் படிப்படியாக நீங்கள் ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொன்றாக முயற்சி செய்து கொண்டே வரும் பட்சத்தில் உங்களுடைய சிங் ஒரு சில நாட்களில் சுத்தமாகிவிடும். பிறகு இதையெல்லாம் வாரம் ஒரு முறை, ஒவ்வொரு குறிப்பாக மாற்றி மாற்றி பயன்படுத்திக் கொண்டே இருந்தால், மீண்டும் மீண்டும் உப்பு கறை படியாமலும் நம்முடைய சிங்கையும் சமையல் மேடையையும் பாதுகாத்துக் கொள்ளலாம். மேலே சொன்ன எளிமையான இந்த வீட்டு குறிப்பு உங்களுக்கு பயனுள்ளபடி இருக்கும் என்றால் ட்ரை பண்ணி பார்க்கலாம்.

- Advertisement -