ஷிங்கிள் கரப்பான் பூச்சி வராமல் இருக்க வீட்டுக்குறிப்பு.

shink1
- Advertisement -

எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ஷிங்குக்குள் இருந்து வெளிவரக்கூடிய கரப்பான் பூச்சிகள், குட்டி குட்டி பூச்சிகளை கொல்லுவதற்கு தேவையான சூப்பரான வீட்டு குறிப்பு தான் இது. இல்லத்தரசிகளுக்கு இந்த குறிப்பு ரொம்ப ரொம்ப பயன்படும். சிங்கிள் துர்நாற்றம் வீசுது. சிங்க் வழியாக அதிக கரப்பான் பூச்சி சமையலறைக்கு வருது என்றால் இந்த டிப்ஸை எல்லாம் நீங்க மிஸ் பண்ணாம தெரிஞ்சி வச்சுக்கோங்க. இந்த குறிப்புக்கு வெறும் மஞ்சள் தூள் இருந்தா போதுங்க. பெரிய அளவில் செலவு செய்ய வேண்டாம்.

கரப்பான் பூச்சியை விரட்டும் வீட்டு குறிப்புகள்

ஒரு சின்ன கிண்ணத்தில் மஞ்சள் தூள் 1/4 கால் ஸ்பூன், லைசால் 1/4 ஸ்பூன், வினிகர் 1/4 ஸ்பூன், கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இதை கலந்து கொள்ளுங்கள். இந்த லிக்விடை இரவு தூங்க செல்வதற்கும் முன்பு சிங்க் ஓட்டையில் ஊற்றிவிட்டு, சிங்க் ஓட்டைகள் இருக்கும் இடத்திற்கு மேலே ஏதாவது ஒரு கிண்ணமோ அல்லது தட்டையோ வைத்து மூடி விடுங்கள். இப்படி செய்தால் உங்கள் சிங்க் பைப்புக்குள் இரவு நேரத்தில் கரப்பான் பூச்சி வராது. அப்படியே வந்தாலும் அது செத்துப் போயிடும். மேல ஏறி வீட்டிற்குள் நுழைய வாய்ப்பு இல்லை.

- Advertisement -

இப்படி தயார் செய்த லிக்விடை சிங்குக்கு மேல் பகுதி முழுவதும் தெளித்து ஸ்டீல் நாரை வைத்து தினமும் தேய்த்து கழுவினால், சிங்க் கொழ கொழப்பாக மாறி துர்நாற்றம் வீசாமல் இருக்கும். சிங்கிள் கண்ணுக்கு தெரியாத கிருமிகளும் நாசமாகும். இந்த தண்ணீரை தெளித்து விட்டு அரை மணி நேரம் ஊற வைத்து பின்பு தேய்த்துக் கழுவும்.

அசைவம் செய்த பிறகு உங்களுடைய சிங்கிள் இருந்து எப்போதும் துர்நாற்றம் வீசுகிறதா. அந்த சிங்க் ஓட்டைக்கு நடுவே கொஞ்சம் மஞ்சள் பொடியை கொட்டி விட்டு அதன் மேலே, ஒரே ஒரு கற்பூரத் துண்டை கொண்டு போய் அந்த சிங் ஓட்டைக்கு மேலே வச்சிருங்க. துர்நாற்றம் வீசாமல் இருக்கும். சாதாரண கற்பூரத்திற்கு பதில் பூச்சி உருண்டை, அந்து உருண்டை என்று சொல்லப்படும் ரச கற்பூரத்தையும் இதற்கு பயன்படுத்தலாம்.

- Advertisement -

சிங்கில் இருக்கும் பாத்திரங்களை எல்லாம் தேய்த்து முடித்துவிட்டு சிங்கை சுத்தமாக கழுவி விட்டு தண்ணீரையும் துடைத்து எடுத்து விடுங்கள். காய்ந்த சிங்குக்கு நடுப்பகுதியில் இருக்கும் ஓட்டையில் கொஞ்சமாக மஞ்சள் துளை தூவி விடுங்கள். சிங்கிள் இருந்து எந்த பூச்சி பொட்டுகளும் வராது பகல் நேரத்திலும் இதை நீங்கள் செய்து வைக்கலாம்.

ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் மஞ்சள் தூள், 1 ஸ்பூன் தூள் உப்பு, கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை சிங்க் ஓரங்களில் போட்டு வைத்தால் எறும்பு தொந்தரவு இருக்காது. இதே பொடியை சிங்குக்கு கீழ்பக்கத்திலும் தூவி விடுங்கள். அந்த இடத்தில் எறும்பு தொல்லை குட்டி குட்டி பூச்சிகள் தொல்லை இல்லாமல் இருக்கும்.

- Advertisement -

இதே போல சிங்குடைய ஓரங்களில் எல்லாம் சின்ன சின்ன ஓட்டைகள் இருக்கும். அதாவது சிங்க்கை ஒட்டும் போது பூசி இருந்த சிமெண்ட் எல்லாம், நாம் சிங்கை சுத்தம் செய்ய போது ஸ்டீல் நரை போட்டு தேய்க்கும் போது உடைந்து வந்துவிடும். சிங்கிள் சுற்றி இருக்கும் அந்த சின்ன சின்ன ஓட்டைகளை அப்படியே விடக்கூடாது.

இதையும் படிக்கலாமே: இல்லத்தரசிகளுக்கு ஏற்ற 6 சமையல் குறிப்புகள்

கடைகளில் ஒயிட் சிமெண்ட் என்று கேட்டால் உங்களுக்கு கிடைக்கும். அந்த வெள்ளை சிமெண்டை வாங்கி ஒரு கிண்ணத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி கலந்து, இந்த சிமெண்டை அந்த ஓட்டைகளில் எல்லாம் தடவி விடுங்கள். நான்கிலிருந்து ஐந்து மணி நேரம் அது காய்ந்ததும் ஓட்டைகள் அடைந்து விடும். உங்கள் ஷிங்கு பார்ப்பதற்கு சுத்தமாகவும் ஓட்டைகள் இல்லாமலும் அழகாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -