இல்லத்தரசிகளுக்கு ஏற்ற 6 சமையல் குறிப்புகள்

water
- Advertisement -

தெரிந்தே எண்ணெயையும் தண்ணியையும் ஒன்றாக கலக்கப்போவது கிடையாது. ஆனால் ஒரு சில சமயங்களில் எதிர்பாத விதமாக கடாயில் இருக்கும் எண்ணெயில் தெரியாமல் தண்ணீரை ஊற்றி விடுவோம். அதை அப்படியே அடுப்பில் வைத்து சூடு படுத்தினால் எண்ணெயில் இருக்கும் தண்ணீர், வெடித்து சிதறும்.

அவ்வளவுதான், இப்படி எண்ணெயுடன் தண்ணீர் ஒன்றாக கலந்து விட்டால் என்ன செய்வது. எண்ணெயையும் தண்ணீரையும் தனித்தனியாக பிரிக்க ஒரு சூப்பர் ஐடியா இருக்குது. அதைப்பற்றிய வீட்டு குறிப்பு. இதோடு சேர்த்து இல்லத்தரசிகளுக்கு தேவையான இன்னும் சில பல வீட்டுக் குறிப்பையும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

குறிப்பு 1:

எண்ணெயும் தண்ணீரும் ஒன்றாக கலந்து விட்டால் அதை ஒரு டம்ளரில் ஊற்றி ஃப்ரீசரில் வைத்து விடுங்கள். 1/2 மணி நேரத்தில் எண்ணெய் எல்லாம் அடியில் தங்கிவிடும். தண்ணீர் மேலே தெளிந்து வந்து விடும். மேலே இருக்கும் தண்ணீரை மட்டும் வடிகட்டி சுலபமாக, எண்ணெயையும் தண்ணியையும் தனித்தனியாக பிரித்து எடுத்து விடலாம்.

குறிப்பு 2:

எதிர்பாராமல் கொஞ்சமாக பால் கெட்டு விட்டால், அதை தூக்கி கீழே ஊற்றி விட வேண்டாம். அந்த கெட்டுப்போன பாலில் கருத்து போன வெள்ளி பொருட்களை சிறிது நேரம் போட்டு வைத்து, பிறகு லேசாக பிரஷ் போட்டு தேய்த்து கழுவினாலே பழைய வெள்ளி பொருட்கள் புதுசு போல மாறிவிடும்.

- Advertisement -

குறிப்பு 3:

இடியாப்பத்திற்கு மாவு பிசையும் போது அதில் 1 ஸ்பூன் நெய் சேர்த்து பிசஞ்சு பாருங்க. இடியாப்பம் பஞ்சு போல அப்படியே சாஃப்ட்டாக கிடைக்கும். ஆறி போனாலும் இடியாப்பம் முறப்பாக மாறாது.

குறிப்பு 4:

கொஞ்சமாக புழுங்கல் அரிசியை நன்றாக சூடாக இருக்கும் கடாயில் போட்டு படபடவென பொறியும்படி வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த அரிசியை நன்றாக ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்து பாட்டிலில் ஸ்டோர் செய்யவும். பொறியலுக்கு தேங்காய் துருவல் இறுதியாக போடுவோம் அல்லவா, அதற்கு பதில் இந்த அரிசி பொடியை பொரியலில் தூவி விடுங்கள். தேங்காய் போட்ட பொரியல் சீக்கிரம் கெட்டுப்போகும். தேங்காய்க்கு பதிலாக இந்த அரிசி பொடியை போட்டால் பொரியல் சீக்கிரம் கெட்டுப் போகாது.

- Advertisement -

குறிப்பு 5:

இட்லி மாவு ரொம்பவும் புளித்து போய்விட்டதா. அதை தூக்கி கீழே கொட்டாதிங்க. அந்த மீதம் இருக்கும் இட்லி மாவுக்கு ஏற்ப துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, மூன்றையும் ஊறவைத்து கொள்ளவும். இதோடு காரத்திற்கு ஏற்ப வரமிளகாய், வரக்கொத்தமல்லி, இவைகளையும் ஊற வைத்து இதை மிக்ஸி ஜாரில் கொரகொரப்பாக அரைத்து மீதம் இருக்கும் இட்லி மாவோடு சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு கொஞ்சம் வெங்காயம் பச்சை மிளகாய், கருவேப்பிலை எண்ணெயில் வதக்கி இந்த மாவில் கொட்டி கலந்து அடை தோசை வார்த்தால் சூப்பராக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: சாதத்தை 10 நிமிடத்தில் வேகவைத்து வடிக்க சூப்பரான வீட்டு குறிப்பு.

குறிப்பு 6:

கொஞ்சம் அவல் இருந்தால் அதை எடுத்து லேசாக வானொலியில் வறுத்து விட்டு பொடியாக அரைத்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். தோசை செய்யும் போது தோசை மாவில் சிறிதளவு இந்த அவல் பொடியை சேர்த்து கலந்து தோசை வார்த்தால் பஞ்சு தோசை சுலபமாக கிடைக்கும்.

- Advertisement -