ஷாப்பிங் போகும் போது இந்த தவறை நீங்க செய்வீங்களா? உங்க கையில இருக்கும் பணம், நிச்சயமா காத்தா பறந்து போகத்தான் செய்யும்.

cash1
- Advertisement -

சில பேருக்கு மாத வருமானம் கைக்கு நிறைய வரும். நிறைய காசு சம்பாதிப்பாங்க. ஆனால் ஷாப்பிங் போயிட்டு வந்தாங்கன்னா, அதாவது மளிகை பொருட்கள் வாங்குவதாக இருந்தாலும் சரி, அல்லது அவர்களுடைய தேவைக்கு மற்ற அழகு சாதனப் பொருட்கள் வாங்க செல்வதாக இருந்தாலும் சரி, அல்லது குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு பொருட்களை வாங்கிக் கொடுக்க கடைக்கு சென்றாலும் சரி, கையில் இருக்கும் மொத்த பணமும் கரைந்து போகும். ஒரு பைசா கூட மிஞ்சாது. கடைசியில், கைக்கு வந்த வருமானம் அனைத்தும் செலவாகியிருக்கும். மாத இறுதியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இப்படி கையில் இருக்கும் பணம் தண்ணீர் போல கரைவதற்கு ஷாப்பிங் செய்யும்போது நாம் செய்யக்கூடிய இந்த சில தவறுகளும் காரணமாக சொல்லப்பட்டுள்ளது.

shoping

பின் சொல்லக்கூடிய குறிப்புகள் அனைத்தும் பொதுப்படையாக எல்லோருடைய அனுபவத்திலும் சொல்லப்படும் கருத்துக்கள் தான். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் பின் சொல்லக்கூடிய விஷயங்களில் நம்பிக்கை இருந்தால் மட்டும் பின்பற்றி பாருங்கள். நம்பிக்கை இல்லாதவர்கள் இதை கடைபிடிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இந்த விஷயங்களை எல்லாம் இப்படி செய்தே ஆக வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை என்பதையும் இந்த இடத்தில் நாம் பதிவு செய்து கொள்வோம்.

- Advertisement -

முதலாவதாக, செலவுக்காக கையில் எடுத்து செல்லக்கூடிய எல்லா பணத்தையும் செலவு செய்துவிட்டு வரக்கூடாது. தேவைக்கு அதிகமாக பணத்தை எடுத்துச் சென்றாலும் சரி, தேவைக்கு குறைவாக பணத்தை எடுத்துச் சென்றாலும் சரி, நமக்கு தேவையான பொருட்களை வாங்கியது போக மீதம் நம் கையில் பணம் கட்டாயமாக மிச்சம் இருக்க வேண்டும். சில பேர் ஷாப்பிங் முடித்து விட்டு, வீடு திரும்பும் போது பஸ், ஆட்டோவுக்கு கூட கையில் காசு இருக்காது. இது ரொம்ப ரொம்ப தவறு.

shoping1

வீட்டில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு ஷாப்பிங் செய்ய செல்கிறீர்கள். வீடு திரும்பும் போது கையில் ஒரு பைசா கூட இல்லை என்ற வார்த்தைகயை சொல்லவே கூடாது. சில பேர் கையில் காசு பணம் இருந்தால், கண்ணை மூடிக்கொண்டு கைக்கு கிடைத்த பொருளை எல்லாம் வாங்கி பைக்குள் வைத்துக் கொள்வார்கள். இந்த பழக்கம் மிக மிக தவறான ஒன்று. கையில் காசு இருந்தாலும் நமக்கு தேவையான பொருட்களை மட்டும் தான் வாங்க வேண்டும் என்ற பழக்கத்தை உங்களுடைய பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். இது முதல் விஷயம்.

- Advertisement -

இரண்டாவதாக மளிகை பொருட்கள் வாங்குவதாக இருந்தாலும் சரி, தங்க நகை வாங்க செல்லும் போதும் சரி, அல்லது மங்களகரமான வேறு எந்த விஷயத்துக்காக நாம் வாங்கிய பொருளுக்கான பணத்தை மிகச் சரியான அளவில் கொடுக்க கூடாது. 450 ரூபாய்க்கு பொருள் வாங்கி உள்ளீர்கள் என்றால், கடைக்காரரிடம் 500 ரூபாயாக கொடுத்து, 50 ரூபாயை உங்கள் கையில் மிச்சம் வாங்கிக் கொள்ளுங்கள். இப்படி செய்வது என்பது ஒரு சூட்சமம். நம் கையை விட்டு சென்ற மகாலட்சுமி, மீண்டும் நம் கைக்கு வந்து சேருகிறாள் என்பதற்க்கு உண்டான அர்த்தம் இது.

money

நம் வீட்டிற்கு தேவைப்படும் எண்ணெயை வாங்கும் போது மட்டும் நம் கையிலிருந்து சரியான தொகையை மளிகைக் கடைக்காரரிடம் கொடுத்துவிட்டு, எண்ணெயை வாங்க வேண்டும். எண்ணெய் வாங்கும் போது அதிகப்படியான காசை கடைக்காரரிடம் கொடுத்து, அதற்கு மீதம் பணம் வாங்காமல் இருப்பது நன்மை தரும். இப்போதெல்லாம் கையில் பணத்தைக் கொடுக்கும், வாங்கும் பழக்கமுமே குறைந்து விட்டது. பெரும்பாலும் கார்ட் பயன்படுத்திக்கொள்கிறார்கள். பேடிஎம் பண்றாங்க. இருப்பினும் நாம் சம்பாதித்த பணத்தை கொஞ்சமாவது கையில் தொட்டு செலவு செய்து பாருங்கள். அப்போதுதான் அதனுடைய அருமை பெருமைகள் நமக்கு புரியும்.

shoping2

ஒரு பொருளை பார்க்கின்றோம். அந்தப் பொருள் மிக மிக அழகாக இருக்கின்றது. உங்களுடைய மனதிற்கு மிகவும் பிடிக்கின்றது. அந்தப் பொருளை வாங்கவேண்டும் என்று நீங்கள் முடிவு செய்துவிட்டீர்கள். ஆனால் காசு கொடுத்து அந்த பொருளை வாங்குவதற்கு முன்பு அந்தப் பொருள் நமக்கு தேவைப்படுமா, நம்முடைய பயன்பாட்டிற்கு தேவைப்படுமா, என்பதை கட்டாயம் யோசிக்கவேண்டும். நமக்குப் பயன்படாத அடிக்கடி தேவைப்படாத பொருளை காசு கொடுத்து அனாவசியமாக வாங்கி வீட்டில் வைப்பதன் மூலம் எந்த ஒரு பிரயோஜனமும் கிடையாது. இதன் மூலம் வீண் விரையங்கள் தான் அதிகமாகும். நமக்குப் பயன்படாத தேவையில்லாத பொருள் எதுவாக இருந்தாலும், அதை தவிர்த்து விடுவது நம் வாழ்க்கைக்கு நல்லது.

சில பேர் பிடித்து இருக்கு என்பதற்காக, போட முடியாத துணிகளை எல்லாம் கூட வாங்கி அடுக்கி வைத்திருப்பார்கள். இப்படி பயன்படாமல் உங்கள் வீட்டில் வாங்கி பரண் மேல் போட்டு வைத்திருக்கும் பொருட்களின் பட்டியலை எடுத்துப் பாருங்கள் உங்களுக்கே புரியும். மேல் சொன்ன விஷயங்கள் அனைத்தும் பார்ப்பதற்கு சின்ன சின்ன விஷயங்கள் தான். ஆனால் பணத்தை பெரிய அளவில் சேமிக்க வேணும்னா இந்த விஷயங்களை எல்லாம் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -