உங்க மனசுக்கு பிடிச்சவங்க, உங்களுடைய பேச்சை கேட்க வேண்டுமா? இதுதான் வழி.

meditation

நம் கணவனாக இருந்தாலும், நம் குழந்தையாக இருந்தாலும், நம் உடன் பணிபுரிபவர்களாக இருந்தாலும், நம் நண்பர்களாக இருந்தாலும் நம்முடைய பேச்சை அவர்கள் காது கொடுத்து கேட்டு நடக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் விரும்புவார்கள். இவர்கள் அனைவருமே நமக்கு மனதிற்கு பிடித்தவர்கள் தான். இவர்களுக்கு நாம் கெடுதல் நினைக்கும் வகையில் எதையுமே கூறப்போவதில்லை. எதிர்பாராத வகையில் ஒருவருக்கு கணவரோ, மனைவியோ, குழந்தையோ, நண்பரோ நம் சொல்படி கேட்டு நடக்காமல் இருந்தாலும், நாம் சொல்லும் பேச்சுக்கு கட்டுப்படாமல், அவர்கள் தீய வழியில் செல்பவர்களாக இருந்தால், அவர்களை மாற்ற வேண்டும் என்றுதான் நாம் நினைப்போம். உங்களுடைய வாழ்க்கை சூழலில் உங்கள் மனதிற்கு பிடித்தவர்கள் யாரேனும் நீங்கள் சொல்லும் நல்லதை தட்டிவிட்டு, கெட்ட வழிக்கு செல்பவர்களாக இருந்தால், நீங்கள் இந்த முறையை பின்பற்றி பார்க்கலாம். இந்த முறையானது நிச்சயமாக நல்லதிற்க்கு மட்டும்தான் பயன்படுமே தவிர, அடுத்தவர்களுக்கு கெடுதல் நினைத்து நம்மால் எதையுமே சாதித்துக் கொள்ள முடியாது என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

scold

ஒருவரிடம் நேரடியாக சென்று நீ செய்வது தவறு இந்த தவறை மீண்டும் செய்ய வேண்டாம் என்று சுட்டிக் காட்டினால், சிலர் அதை காதில் வாங்கி கொள்ளமாட்டார்கள். அந்த நபர் ஏதோ ஒரு கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கலாம். அவர் நமக்கு கெடுதல் செய்பவராக இருந்தாலும் சரி. அவரை நாம் சரி செய்ய வேண்டும் என்றால் என்ன செய்வது? எடுத்துக்காட்டாக உங்களது கணவரை நீங்கள் ஏதோ ஒரு கெட்ட பழக்கத்திலிருந்து மீட்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். உங்கள் கணவர் உங்களை துன்பப்படுத்தும் கணவராக இருந்தாலும் சரி. மனைவி என்ன செய்ய வேண்டும்?  கணவன் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது அவரின் உருவத்தை உங்களது கண்களுக்கு முன்பாக கொண்டுவந்தோ அல்லது அவரின் அருகிலேயே அமர்ந்தோ, அவர் மேல் உங்களுக்கு வெறுப்பு இருந்தாலும் கூட அதையெல்லாம் சுத்தமாக மறந்துவிட்டு, அவர் நன்றாக இருக்கவேண்டும் என்ற முழுமனதோடு, அவரை வாழ்த்த வேண்டும். அதன் பின்பு ‘என் கணவர் கெட்ட பழக்கங்களை விட்டு விட வேண்டும். நான் என்ன சொல்கின்றேனோ அந்த வார்த்தைக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். வாழ்க்கையில் அவர் நன்றாக முன்னேற வேண்டும்’ என்று மனதார ஒரு 15 நிமிடம் நினைத்து வேண்டிக் கொண்டால் போதும். இந்த சமயம் உங்களது கணவர் கட்டாயமாக ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க வேண்டும். (உங்கள் கணவர் எந்த சமயம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கின்றார் என்பதை நீங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும். கண்டுபிடிக்க முடியாதவர்கள், ஒரு மனிதன் கட்டாயம் பிரம்மமுகூர்த்தமான 3 மணிக்கு நன்றாக தூங்குவார்கள் என்பது உறுதி.)உங்களது கணவரை நீங்கள் மனதார நினைத்துக்கொண்டு இந்த வேண்டுதலை வேண்டிக்கொண்டாள் நிச்சயமாக அது உங்கள் கணவரது மனதிற்குள் எதிரொலிக்கும் என்பது அறிவியல் சார்ந்த உண்மை.

அறிவியலில், ஆழ்ந்த உறக்கத்தில் ஒருவர் இருக்கும்போது, உண்மையை வரவைப்பதற்கு ஹிப்னாடிசம் எனும் முறையை மருத்துவ ரீதியாக பயன்படுத்தி வருகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்தது உண்டா? மன ரீதியான பிரச்சனை உள்ளவர்களையும் சரிப்படுத்த, ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது பல சிகிச்சைகள் கொடுக்கப்படுவது உண்மை. ஒருவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது போதும்கூட அவர்களை நினைத்து சொல்லப்படும் வார்த்தைகள், எண்ணங்கள் அனைத்தும் அவரது உள்ளுணர்வைத் தொடும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

hipnotism

இதை கணவன் மனைவி இருவருக்கும் மட்டும் தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமா என்று கேட்டால், இல்லை. உங்களுடைய நண்பர்கள் கெட்ட வழியில் செல்பவர்களாக இருந்தால் அவர்களை கூட நம்மால் சரி செய்ய முடியும். நன்றாக தூங்கும் சமயத்தில் அவர் நம்முடைய அருகில் இருக்கும் வாய்ப்பு நமக்கு கிடைக்காது. நண்பர்கள் என்றால் வேறு வேறு இடத்தில் தங்கிக் கொள்பவர்களாக இருந்தால், அந்த சூழ்நிலையில் அதிகாலை பிரம்ம முகூர்த்தம் என்று கூறப்படும் 3 மணி அளவில் கட்டாயமாக உங்களுடைய நண்பர் நன்றாக உறங்கிக் கொண்டு இருப்பார். அந்த சமயம் உங்களது நண்பரின் புகைப்படம் இருந்தாலும் அதை முன்பாக வைத்து, அவர் எப்படி மாறவேண்டுமோ அதன்படி நாம் தியானம் செய்யலாம். புகைப்படம் உங்கள் கையில் இல்லை என்றாலும் பரவாயில்லை. அவரது உருவத்தை மனதார நினைத்துக்கொண்டு அவர் எப்படி மாற வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதை உங்கள் மனதார நினைத்து தியானம் செய்தாலே நல்ல பலனைத் தரும்.

- Advertisement -

sleep1

ஒரு மனிதன் விழித்திருக்கும் போது அவனுக்குள் இருக்கும் மிருக குணமும், கெட்ட குணமும் விழித்திருக்கும். அவன் தூங்கிக் கொண்டிருக்கும் போது கட்டாயமாக அவன் தன்னிலை மறந்து தான் தூங்குவான். அப்படி இருக்கும் பட்சத்தில் நாம் மனதார அவரை நினைத்து வேண்டிக்கொள்ளும் வேண்டுதல்களானது அவரிடம் போய் செல்லும் என்பது மறுக்க முடியாத உண்மை. எவ்வளவு பெரிய கெட்ட மனிதர்களாக இருந்தாலும் தூங்கும் சமயத்தில் அவர்கள் தெய்வத்தன்மை கொண்டவர்களாகவும், புனித தன்மை கொண்டவர்களாகவும் தான் இருப்பார்கள். அந்த நேரத்தில் நாம் வேண்டும் படும் வேண்டுதல்கள் எதுவாக இருந்தாலும் நிச்சயம் அதன் தாக்கம் அவர்களை போய் சேரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

நீங்கள் இதை நம்ப வேண்டாம். ஆனால் உங்கள் மனதிற்கு பிடித்தவரை மாற்றுவதற்கு சில தினங்கள் இந்த தியானத்தை பயிற்சி செய்து பாருங்கள். நீங்கள் யாரை மாற்ற வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அவருக்குள் ஒரு மாற்றம் வருவதை உங்கள் கண்கூடாக நீங்களே காணமுடியும். ஒரு 48 நாட்கள் என்று கணக்கு வைத்து பாருங்கள். அவர்கள் மாறுவதை நீங்கள் உணர்ந்து விட்டு பின்பு உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் இந்த முறையை பரிசீலனை செய்யலாம்.

sleep

எங்கோ இருப்பவர் நம்மை நினைத்துக் கொண்டால், நமக்கு விக்கல் வருகிறது, புரை ஏறுகிறது என்று கூறுவதை நாம் நம்புவது வழக்கம் தானே! சில சமயங்களில் இது உண்மையாகவும் இருக்கும். தூரத்தில் இருக்கும் ஒருவருக்கு ஏதாவது ஆபத்து வரப்போகிறது என்றால், நம் மனதிற்கு உண்மையாக பிடித்தவர் என்றால், அது நம் மனதிற்கு முன்பாகவே தெரிய ஆரம்பித்துவிடும். இதுவும் ஒருவகையில் உண்மைதான். இப்படியாக உண்மையான அன்புடன், அக்கறையுடன் ஒருவரை நம் மனதில் நினைத்து, அந்த நபர் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது அவன் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டுதல் வைக்கின்றோமோ அது கண்டிப்பாக பலிக்கும் என்பது உண்மைதான். உங்கள் குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என்றாலும் இதை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். நம்பிக்கை உள்ளவர்கள், நம்பிக்கையோடு மேற்கொள்ளும் எந்த ஒரு முயற்சியும் தோல்வி அடைந்தது இல்லை.

English Overview:
Here we have Meditation uses Tamil. Meditation benefits in Tamil. Morning meditation in Tamil. Meditation in Tamil.