உங்கள் குடும்ப பொருளாதார நிலை உயர இதை துதியுங்கள்

vishnu

திருமணம் ஆகாதவருக்கு ஒரு கவலை, திருமணம் ஆனவர்களுக்கு ஆயிரம் கவலைகள் என ஒரு சொல்வழக்கு உண்டு. இல்வாழ்க்கை எனும் பந்தத்தில் கணவன் – மனைவி ஆகிய இருவரும் மனமொத்து செயல்புரிந்தால் மட்டுமே அந்த குடும்பம் சிறக்கும். ஆனால் இன்று பலரது வீட்டிலும் தம்பதிகளுக்குள் ஏதாவது மனஸ்தாபங்கள், சங்கடங்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. இவற்றை தீர்ப்பதோடு மேலும் சில நன்மைகளை தரும் “ஸ்ரீ மகாவிஷ்ணு மந்திரம்” இதோ.

vishnu

ஸ்ரீ மகாவிஷ்ணு மந்திரம்

ஓம் க்லீம் ஹரயே நமஹ

காக்கும் கடவுளான ஸ்ரீ மகாவிஷ்ணுவுக்குரிய மந்திரம் இது. இந்த மந்திரத்தை இல்வாழ்க்கையில் இருக்கும் ஆண்களும், பெண்களும் தினமும் காலையில் விஷ்ணு படத்திற்கு முன்பாக நின்று 27 முறை அல்லது 108 முறை உரு ஜெபிப்பது நல்லது. புதன் மற்றும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோயிலுக்கு தம்பதிகள் சென்று பெருமாளுக்கு பூக்கள் சமர்ப்பித்து, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி இந்த மந்திரத்தை 108 முறை தம்பதிகள் இருவரும் சேர்ந்து துதிப்பதால் கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து, என்றும் இணைபிரியாமல் வாழும் அமைப்பு உண்டாகும். குடும்பத்தின் பொருளாதார நிலை உயரும்.

Perumal

ஆதிசேஷன் மீது வீற்றிருந்து யோகநித்திரையிலிருந்த படியே உலகை காத்துக்கொண்டிருப்பவர் நாராயணன் எனப்படும் மகாவிஷ்ணு. செல்வ மகளான லட்சுமியை பத்தினியாக கொண்டவரும், அந்த லட்சுமியை தனது இதயத்தில் கொண்டிருப்பவர் நாராயணனாகிய திருமால். அந்த மகாவிஷ்ணுவின் இந்த மந்திரத்தை துதிப்பவர்களுக்கு இல்வாழ்க்கை சிறந்து வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று இன்புறுவார்கள் என்பது ஆன்மீக சான்றோர்களின் வாக்காகும்.

இதையும் படிக்கலாமே:
காரிய சித்தி உண்டாக மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Shri maha vishnu mantra in Tamil. It is also called as Vishnu mantras in Tamil or Perumal manthirangal in Tamil or Vishnu thuthi in Tamil or Maha vishnu manthirangal in Tamil.