எரியும் நெருப்பில் படுக்கும் சித்தர் – வீடியோ

Siddhar on fire

சித்தர்கள் பலர் இன்று சாதாரண மனிதர்களை போல மனிதர்களோடு மனிதர்களாக வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்கள். அதில் சிலர் தங்களின் சக்தியை நிரூபிக்கும் வகையில் பல அதிசயங்களை நிகழ்த்தி மக்களை வியக்க செய்கின்றனர். அந்த வகையில் திகு திகுவென எரியும் நெருப்பில் படுத்துக்கொண்டிருக்கிறார் ஒரு சித்தர். இதோ அதன் வீடியோ.

நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என்று போற்றக்கூடிய பஞ்ச பூதங்களையும் கட்டுப்படுத்தும் சக்தி சித்தர்களுக்கு உண்டு என்று நாம் கேள்வி பட்டிருப்போம். அதை மெய்ப்பிக்கும் வகையிலே இந்த நிகழ்வு உள்ளது. பொதுவாக நெருப்பானது சற்று சுட்டாலே மனிதர்களாகிய நம்மால் தாங்க முடியாது அனால் இவர் நெருப்பின் மீதே முழுவதுமாக படுப்பதை பார்க்கையில் பஞ்ச பூதங்களில் ஒன்றான நெருப்பை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதை உணர முடிகிறது.

நெருப்பை கட்டுப்படுத்தும் வல்லமை இவருக்கு எப்படி வந்தது அதற்காக இவர் செய்த தியானங்கள் மந்திரங்கள் என்னென்ன என்பது குறித்த தகவல்கள் நம்மிடம் இல்லை. ஆனால் இவர் நிகழ்த்திய சித்து உண்மையில் ஆச்சர்யப்பட வைக்க கூடிய ஒன்றாக தான் உள்ளது.