சிக்கல்கள் நீங்க விநாயகர் வழிபாடு

vinayagar deepam
- Advertisement -

வாழ்க்கையில் பிரச்சனைகள் என்பது இருக்கத்தான் செய்யும். போராட்டங்கள் நிறைந்தது தான் வாழ்க்கை என்று பெரிய தலைவர்கள் முதற்கொண்டு ஏழை எளிய மக்கள் வரை கூறுவார்கள். கண்டிப்பான முறையில் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு போராட்டமோ தடைகளோ சிக்கல்களோ இருக்கத்தான் செய்யும். அதையும் தாண்டி நாம் வாழ்க்கையில் முன்னேறினால் தான் அது வெற்றிகரமான வாழ்க்கையாக திகழும். அப்படி நம் வாழ்வில் ஏற்படக்கூடிய சிக்கல்களையும் தடைகளையும் நீக்குவதற்கு விநாயகப் பெருமானை எப்படி விளக்கேற்றி வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

முழுமுதற் கடவுளாக விளங்கக்கூடிய விநாயகர் பெருமானை நாம் தினமும் வழிப்பட வேண்டும். எந்த ஒரு காரியத்தை நாம் செய்வதாக இருந்தாலும் விநாயகரை மனதார நினைத்து நாம் செய்யும் பொழுது அந்த காரியங்கள் வெற்றி அடையும் என்பது பலரும் அறிந்த உண்மையே. இதே போல் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய சங்கடங்களை நீக்குவதற்கு சங்கடஹர சதுர்த்தி என்று விநாயகப் பெருமானை வழிபட வேண்டும் என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. இதே போல் தான் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய சிக்கல்கள் அனைத்தையும் தீர்த்து வைப்பதற்கு விநாயகப் பெருமானை வழிபடும் முறையைப் பற்றி பார்க்க போகிறோம்.

- Advertisement -

விநாயகப் பெருமானுக்கு உகந்த திதியாக சதுர்த்தி திதி விளங்குகிறது. இது வளர்பிறை சதுர்த்தியாக இருந்தாலும் சரி தேய்பிறை சதுர்த்தியாக இருந்தாலும் சரி பயன்படுத்திக் கொள்ளலாம். ஆக மொத்தம் விநாயகப் பெருமானை சதுர்த்தி திதி அன்று வழிபட வேண்டும். அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலயத்திற்கு செல்லுங்கள். அவ்வாறு செல்லும் பொழுது புதிதாக மூன்று அகல் விளக்குகளை வாங்கிக்கொண்டு, மூன்று செம்பருத்திப்பூ மற்றும் அருகம்புல் இவற்றை எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும். அங்கு இருக்கக்கூடிய விநாயகப் பெருமானுக்கு அருகம்புல்லையும், செம்பருத்திப் பூவையும் வழங்க வேண்டும்.

அவருக்கு முன்பாக இந்த மூன்று அகல் விளக்குகளையும் வைத்து ஒரு விளக்கில் நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். மற்றொரு விளக்கில் நெய் ஊற்ற வேண்டும். மூன்றாவது விளக்கில் தேங்காய் எண்ணெய் ஊற்ற வேண்டும். இப்படி மூன்று விளக்குகளிலும் மூன்று எண்ணைகளை ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இப்படி வழிபடும் பொழுது நம் வாழ்வில் இருக்கக்கூடிய சங்கடங்கள் என்ன என்பதையும் அவை அனைத்தும் தீர வேண்டும் என்பதையும் மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு விநாயகப் பெருமானை 9 அல்லது 11 முறை வலம் வந்து மூன்று முறை தலையில் கொட்டிக் கொண்டு மூன்று முறை தோப்புக்கரணம் போட்டு எந்திரித்து வீட்டிற்கு வந்து விட வேண்டும். இப்படி தொடர்ந்து 21 சதுர்த்தி நாம் வழிபட்டோம் என்றால் நம் வாழ்வில் இருக்கக்கூடிய தீர்க்கவே முடியாத சிக்கல்களையும் தீர்த்து வைப்பார் விநாயகர் பெருமான்.

இதையும் படிக்கலாமே: தன வரவை ஏற்படுத்தும் கால பைரவர் வழிபாடு

திரும்பும் திசையெல்லாம் வீற்றிருக்கும் விநாயகப் பெருமானை இந்த முறையில் நாம் மனதார வழிபட்டோம் என்றால் நம் வாழ்வில் இருக்கக்கூடிய சிக்கல்கள் அனைத்தும் நீங்கும்.

- Advertisement -