தன வரவை ஏற்படுத்தும் கால பைரவர் வழிபாடு

kala bhairavar
- Advertisement -

சிவபெருமானின் பஞ்ச குமாரர்களில் ஒருவராக திகழக் கூடியவர் தான் பைரவர். எந்த கிரகத்தால் தோஷம் உள்ளதோ? எந்த கிரகம் வலுவாக வேண்டுமோ? எந்த கிரகத்தின் தசா புத்தி நடப்பில் உள்ளதோ அதற்கேற்றார் போல் பைரவரை நாம் வழிபட்டால் நவகிரகங்களால் நமக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாளை அஷ்டமியோடு வரக்கூடிய வியாழக்கிழமை அன்று பைரவரை எப்படி வழிபட்டால் செல்வ வளம் பெருகும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

பைரவரை நாம் வழிபடுவதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும் என்று ஜோதிட ரீதியாக கூறப்படுகிறது. அதோடு மட்டும் அல்லாமல் எதிரிகளின் பாதிப்பிலிருந்தும், கடன் பிரச்சினையிலிருந்தும் நம்மை காப்பாற்றும் ஒரு அற்புத கடவுளாக தான் காலபைரவர் திகழ்கிறார். அப்படிப்பட்ட கால பைரவரை தன வரவிற்காக எப்படி வழிபட வேண்டும் என்று பார்ப்போம்.

- Advertisement -

பைரவருக்குரிய திதியாக அஷ்டமி திதி திகழ்கிறது. இதில் மிகவும் குறிப்பிடத்தக்கது தேய்பிறை அஷ்டமி என்று கூறப்படுகிறது. தேய்பிறை அஷ்டமியில் நாம் காலபைரவரை வழிபடும் பொழுது நமக்கு இருக்கக்கூடிய துன்பங்களும், கஷ்டங்களும், துயரங்களும் நீங்கும். அதே சமயம் வளர்பிறை அஷ்டமியில் நாம் பைரவரை வழிபடும் பொழுது நமக்கு கிடைக்கக்கூடிய நற்பலன்கள் அனைத்தும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் செல்வம் பெருகவும், தன தானியம் அதிகரிக்கவும் நாம் வளர்பிறை அஷ்டமி திதியன்று காலபைரவரை வழிபட வேண்டும். வளர்பிறை அஷ்டமி திதி அன்றுதான் அஷ்ட லட்சுமிகள் அனைவரும் கால பைரவரை வழிபட்டு அவர்களுக்குரிய செல்வ வளங்களை பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. அந்த சமயம் நாமும் கால பைரவரை வழிபட்டால் அவர்களுக்கு கிடைக்க கூடிய அஷ்ட ஐஸ்வர்யங்களும் நமக்கும் கிடைக்கும்.

- Advertisement -

இதோடு மட்டுமல்லாமல் வியாழக்கிழமை என்பது குரு பகவானுக்குரிய கிழமையாக திகழ்வதால் அன்றைய தினம் பைரவரை நாம் வழிபடும் பொழுது நமக்கு பணவரவு என்பது அதிகரிக்கும். இப்படி விசேஷமான இந்த திதியும் கிழமையும் ஒன்றாக சேர்ந்து நாளை வருவதால் கண்டிப்பான முறையில் நாளை காலபைரவரை நாம் வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியதாக திகழும்.

அருகில் இருக்கக்கூடிய பழமையான சிவன் கோவிலுக்கு செல்ல வேண்டும். அங்கு வீற்றிருக்கக்கூடிய கால பைரவருக்கு சந்தன காப்பு செய்ய வேண்டும். பிறகு மஞ்சள் நிற சம்மங்கி மாலையை அவருக்கு சூட்ட வேண்டும். அடுத்ததாக அவருக்கு புனுகு பூச வேண்டும். நெய்வேத்தியமாக சுண்டல், பால் பாயாசம், நெல்லிக்கனி, ஆரஞ்சு பழம், வறுத்த கடலைப்பருப்பு பொடி கலந்த சாதம் என்று இவற்றில் தங்களால் எது முடியுமோ அதை வைத்து அர்ச்சனை செய்து மனதார வழிபட வேண்டும்.

- Advertisement -

எட்டு அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி தாமரை தண்டு திரி போட்டு தீபம் ஏற்றி வழிபட வேண்டும். நெய்வேத்தியம் செய்த பொருட்களை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க வேண்டும். இப்படி தொடர்ந்து எட்டு வளர்பிறை அஷ்டமிகளில் நாம் காலபைரவரை இந்த முறையில் வழிபடும் பொழுது கண்டிப்பான முறையில் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் பெற்று சிறப்புடன் வாழ்வோம். தனவரவில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.

இதையும் படிக்கலாமே: ஜனவரி 18 2024 மைத்ரேய முகூர்த்த பரிகாரம்

முழு மனதுடன் வழிபடுபவர்களின் வாழ்க்கையில் பல அற்புத நிகழ்வுகளை நடத்திய தெய்வமாக திகழக்கூடிய இந்த கால பைரவரை நாமும் வழிபட்டு நன்மைகள் பெறுவோம்.

- Advertisement -