என்னது ஒரே நேரத்துல சாதம், குழம்பு, சைடு டிஷ், மூணும் செய்யலாமா? அட அது ரொம்ப சிம்பிள்ங்க. வாங்க எப்படின்னு பாக்கலாம்.

- Advertisement -

வீட்டில் சமைக்கும் பொருள் ஒவ்வொன்றிலும் வீணாகாமல் பயன்படுத்தும் முறை குறித்து பல குறிப்புகள் இருந்தாலும், இதில் இருக்கும் குறிப்புகள் அனைத்தும் கொஞ்சம் வித்தியாசமாகவும்,புதுமையாகவும் இருக்கும் இந்த குறிப்புகள் அனைத்தும் இல்லத்தரசிகளுக்கு மிக மிகப் பயனுள்ளதாக இருக்கும். அது மட்டுமின்றி இது தெரிந்து கொண்ட பின் அவர்களுக்கு வேலை செய்யும் நேரமும் பாதியாக குறைந்து விடும். பொருட்கள் வீணாகுவதும் இல்லாமல் போய் விடும். இத்தகைய பயனுள்ள குறிப்புகளை கொண்ட பதிவு தான் இது.

குக்கரில் சாதம் வைக்கும் போது அரிசி, தண்ணீர் எல்லாம் வைத்த பிறகு, ஒரு டிபன் பாக்ஸில் உருளைக்கிழங்கு, முட்டை இரண்டையும் ஒன்றாக போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து அந்த டப்பாவை மூடி குக்கரில் வைத்து வேக வைத்து விட்டால் போதும். இதையே பருப்பு வேக வைக்கும் போது பருப்பு வைத்த பிறகு டிபன் பாக்ஸில் அரிசி தண்ணீர் ஊற்றி மூடியும் வைக்கலாம். அப்படியே பருப்பில் உருளை கிழங்கையும் வேக விடலாம். ஒரே நேரத்தில் மூன்று பொருட்களும் வெந்து சாதம் குழம்பு சைடு டிஷ் எல்லாம் ரெடி.

- Advertisement -

குக்கர் கேஸ்கட் சரியாக பொருந்தவில்லை என்றால் குக்கரில் சமைக்கும் போது அதிலிருந்து தண்ணீர் வெளியே வந்து கொண்டே இருக்கும். இது போன்ற சமயங்களில் அதில் இருக்கும் பொருட்கள் வேகாது. கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தால் அடிப்பிடித்தும் விடும். இது போல இனி நடக்காமல் இருக்க குக்கர் கேஸ் கட்டு சமைக்கும் முன்பு ஒரு நிமிடம் வரை தண்ணீரில் வைத்த பிறகு பயன்படுத்துங்கள் இந்த பிரச்சனை வராது.

ஒரு வேளை நீங்கள் அவசரத்தில் கவனிக்காமல் குக்கர் கேஸ் தட்டை இப்படி வைத்து விட்டீர்கள். தண்ணீரில் போட்டு வைக்க நேரமில்லை என்கிறீர்களா? அதற்கும் இனி கவலைப்பட வேண்டாம். நேரடியாக அதை எடுத்து சிங்கில் பைப்பை திறந்து விட்டு குக்கர் கேஸ் கட்டை அதில் சிறிது நேரம் காட்டி உடனே குக்கரில் வைத்து சமைக்க ஆரம்பியுங்கள் தண்ணீர் வெளியே வராது.

- Advertisement -

வீட்டில் புதினா அதிகமாக வாங்கி விட்டால் அதை அப்படியே வைத்தாலும் வாடி விடும். பிரிட்ஜில் வைத்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக அழுகி விடும். அதற்கு இந்த புதினா இலைகளை எல்லாம் பறித்து நன்றாக அலசி வெயிலில் காய வைத்து பிறகு, ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.எத்தனை நாட்கள் ஆனாலும் புதினா கெட்டுப் போகாது இதை ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியம் கூட கிடையாது.

சமைக்கும் போது பாதி வெங்காயம் சமைத்த பிறகு மீதி வைத்தால் அதை ஃப்ரிட்ஜிலும் வைக்க முடியாது. வெளியில் வைத்தாலும் அதில் கொசுக்கள் வந்து உட்கார்ந்து வீணாகி விடும். இந்த பாதி வெங்காயம் வீணாகாமல் இருக்க முதலில் தோலை உரிக்காமல் வைக்க வேண்டும். அதன் பிறகு அறிந்த பகுதியில் கொஞ்சம் எண்ணெய் அல்லது நெய் தடவி கவுத்து வைத்தால் போதும் வெங்காயம் கெடாமல் இருக்கும்.

- Advertisement -

இதையே பிளாஸ்டிக் கவரில் போட்டும் சுற்றி வைக்கலாம் எப்படி வைக்கும் போது பிரிட்ஜில் கூட வைத்து விடலாம்.

இதையும் படிக்கலாமே: வாஷிங் மிஷினில் துணி துவைக்கும் போது அழுக்குப் போகலைன்னு இனி பீல் பண்ணாதீங்க, துணிக்கு கொஞ்சம் மாத்திரை கொடுத்துட்டு போட்டுங்க துணி வெள்ளையாகிடும். என்ன துணிக்கு மாத்திரையா இப்படித் தானே யோசிக்கிறீங்க வாங்க அது என்னன்னு பார்த்திடலாம்

இதில் இருக்கும் குறிப்புகள் அனைத்தும் உங்கள் சமையல் அறை வேலையை மிகவும் செய்து விட உதவியாக இருக்கும். அது மட்டும் இன்றி பொருட்களும் வீணாகாமல் செலவும் குறையும்.

- Advertisement -