வாஷிங் மிஷினில் துணி துவைக்கும் போது அழுக்குப் போகலைன்னு இனி பீல் பண்ணாதீங்க, துணிக்கு கொஞ்சம் மாத்திரை கொடுத்துட்டு போட்டுங்க துணி வெள்ளையாகிடும். என்ன துணிக்கு மாத்திரையா இப்படித் தானே யோசிக்கிறீங்க வாங்க அது என்னன்னு பார்த்திடலாம்

- Advertisement -

துணியை கைகளால் துவைக்கும் போது கிடைக்கும் திருப்தி மெஷினில் கிடைப்பதில்லை என்று எண்ணம் வாஷிங் மெஷினில் துணி துவைக்கும் பலருக்கும் தோன்றவே செய்யும். இதற்கு காரணம் என்ன தான் மெஷினில் போட்ட துணிகளளின் அழுக்கு முழுவதுமாக போவது கிடையாது. இனி இந்த கவலையே உங்களுக்கு தேவை இல்லை. வாஷிங் மிஷினில் துவைக்கும் போதும் கையால் துவைத்ததைப் போன்ற மன திருப்தியை அடைய இதோ ஆச்சர்யமூட்டும் குறிப்புகள் உங்களுக்காக.

வாஷிங்மெஷினில் துணிகளை போடும் போது எப்பொழுதுமே அதன் கொள்ளவிற்கு (மெஷின் ட்ரம் அளவு ) கொஞ்சம் குறைவாக தான் துணிகளை போட வேண்டும். அதிக துணிகளை போடும் போது துணிகள் நிச்சயமாக அழுக்கு போகாது. இந்த குறிப்பு அனைத்து வகை மிஷினுக்கும் பொதுவானது. இதை தவறாமல் கடைபிடித்தால் தான் நீங்கள் அழுக்குப் போக பயன்படுத்தும் எந்த குறிப்பும் பலனளிக்கும்.

- Advertisement -

வாஷிங் மிஷினில் துணியை போடுவதற்கு முன் அரை மணி நேரம் நல்ல தண்ணீரில் உப்பு சேர்த்து ஊற வைத்த பிறகு மெஷினில் போட்டு துவைத்தால் துணியில் உள்ள அழுக்குகள் நீங்கிவிடும். அதிக அழுக்கு உள்ள துணிகளாக இருந்தால் நல்ல தண்ணீரில் ஊற வைத்த பிறகு அரை மணி நேரம் சோப்புத் தண்ணீரில் ஊறவைத்த பிறகு பிழிந்து உங்கள் மிஷினில் சேர்த்து துவைக்கலாம்.

ஏன் இப்படி மிஷினில் சேர்ப்பதற்கு முன்பு ஊற வைக்க என்றால்? மெஷினில் அதிக அழுக்கு உள்ள துணிகளை துவைக்க அதிக நேரம் ஓட விடு வேண்டும், இதனால் துணிகள் சீக்கிரத்தில் கிழிந்து விடும் வாய்ப்புகள் அதிகம். எனவே கொஞ்ச நேரம் ஊற வைத்த பிறகு போட்டால் அதிக நேரம் ஓட விட வேண்டாம். அழுக்கும் நீங்கி விடும் துணிகளும் நீண்ட நாள் உழைக்கும்.

- Advertisement -

இந்த குறிப்பு பலரும் கேல்வி படாத ஒன்று தான். அலுமினியம் பேப்பர் கடைகளில் கிடைக்கும் அதை வாங்கி கொள்ளுங்கள். மிஷினில் துணிகளை போட்ட பிறகு இந்த அலுமினியம் பேப்பரை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி,  பால் போல் இரண்டு பேப்பரை  உருட்டி எடுத்துக் கொள்ளுங்கள். மிஷினில் துணிகளுக்கு இடையில் இதை போட்டு விட்டு, நீங்கள் எப்பொழுதும் போல் துணி துவைக்க ஆரம்பித்து விடுங்கள். துணிகளில் உள்ள அழுக்குகள் சுத்தமாக நீங்கிவிடும் இதனால் மெஷினுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

இந்த குறிப்பும் கொஞ்சம் வித்தியசமானது, இந்த முறையில் துவைக்க ஆஸ்பிரின் மாத்திரை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் உங்கள் துணிகளின் அளவிற்கு ஏற்றபடி நான்கு அல்லது ஐந்து மாத்திரை எடுத்து நல்ல பவுடர் செய்ய செய்து கொண்டு துணி பவுடர், லிக்விட் எதுவாக இருந்தாலும் போடும் போது அத்துடன் சேர்த்து இந்த மாத்திரை பவுடரையும் சேர்த்து போட்டு விட்டால் போதும். துணிகளில் உள்ள அழுக்குகள் மொத்தமாக நீங்கி விடும். இந்த முறை தான் பெரும்பாலும் லண்டரிகளில் பயன்படுத்துகிறார்கள். குழந்தைகள் இருக்கும் வீடுகளில் இந்த முறையை கொஞ்சம் கவனமாக கையாளுங்கள்.

இதையும் படிக்கலாமே: தொடர் மழையால் ஈரப்பதத்தின் மூலம் பாயில் பூசணம் பிடிக்கிறதா? திடீரென வெயில் வந்து விட்டால் துணி காய போட கிளிப் கூட பற்றவில்லையா? இதோ புது புது ஐடியா எல்லாம் உங்களுக்காக.

இந்த குறிப்புகள் அனைத்தும் உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். ஒரே நேரத்தில் அனைத்து குறிப்பையும் பயன்படுத்த கூடாது. ஒரு சமயத்தில் ஒரு குறிப்பை மட்டும் பயன்படுத்தி உங்கள் துணிகளை வாஷிங் மிஷினில் கூட பளிச்சென்று துவைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -