இந்த சின்ன சின்ன வீட்டு குறிப்புகள் உங்களுக்கு தெரிந்தால் போதும். உங்கள் வேலைகள் அனைத்தும் சுலபமாகி விடும்

gee
- Advertisement -

வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வீட்டை சுத்தம் செய்வது, சமையல் செய்வது, மற்றும் குழந்தைகளை பார்ப்பது என்று பலவித பொறுப்புகள் இருக்கின்றன, ஆனால் இவற்றில் வீட்டு வேலை என்பது ஒரு நாள் முழுவதுமே இருந்துகொண்டிருக்கும் வேலையாகும். அவ்வாறு வீட்டை பராமரிக்கவும் சமையல் செய்யவும் ஒரு சில சிறு சிறு குறிப்புகளை தெரிந்து வைத்துக்கொண்டால் வீட்டு வேலைகளை மிகவும் எளிதாக செய்திட முடியும். அவ்வாறு பயன்தரக் கூடிய எளிய வீட்டுக் குறிப்புகளை பற்றி தாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Home 1

குறிப்பு: 1
ஒவ்வொரு வீட்டிலும் சமையலுக்கு காய்கறி வாங்கி வரும் போது அதனுடன் கருவேப்பிலையையும் வாங்கி வருவோம். கருவேப்பிலை அதிகமாக இருந்தது என்றால் அவை சீக்கிரத்தில் வாடி காய்ந்து விடும். இவ்வாறு காய்ந்த கருவேப்பிலையை தூக்கி எறிந்து விடுவோம். அதற்கு பதிலாக இந்த கறிவேப்பிலையை மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைத்து வைத்துக்கொண்டால் தக்காளி சட்னி, வெங்காய சட்னி போன்றவற்றை செய்யும் பொழுது அதனுடன் ஒரு ஸ்பூன் இந்த கருவேப்பிலை பொடியையும் சேர்த்து அரைக்கலாம். இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை கொடுக்கும்.

- Advertisement -

குறிப்பு: 2
பலவித உணவுகளை சமைக்கும் பொழுது ஒரு சில குறிப்பிட்ட உணவு வகைகளுக்கு எலுமிச்சைப் பழச்சாறு பயன்படும். ஒருசில நேரத்தில் முழு எலுமிச்சம் பழமும் தேவைப்படாது. அதில் பாதி எலுமிச்சை பழத்தை மட்டும் பயன்படுத்தி மீது எலுமிச்சை பழத்தை அப்படியே எடுத்து வைத்து விடுவோம். இந்த பழம் வீணாக அழுகிதான் போய்விடும். இந்தப் பழம் வீணாகாமல் இருக்க ஒரு பிளாஸ்டிக் டப்பாவின் மூடியை எடுத்து அதனுள் இந்த எலுமிச்சை பழத்தை கவிழ்ந்து ரப்பர் பேண்ட் போட்டு பிரிட்ஜில் வைத்து விட்டால் சில நாட்களுக்கு இந்த பழம் அழுகாமல் நன்றாக இருக்கும்.

எலுமிச்சை

குறிப்பு: 3
பலர் வீட்டிலும் சமையலறையில் இருக்கும் சுவிட்ச் போர்டுகள் எண்ணெய் கறையாக தான் இருக்கும். இந்த எண்ணெய் கறையை எளிதில் நீக்க வீட்டில் எப்போதும் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயை சிறிதளவு எடுத்துக் கொண்டு, அதனை ஒரு டிஷ்யூ பேப்பரில் நனைத்து, இந்த சுவிட்ச் போர்டுகளின் மீது லேசாக தடவி விட வேண்டும். பின்னர் மற்றுமொரு டிஷ்யூ பேப்பரை எடுத்து நன்றாக அழுத்தித் துடைத்து விட்டால் அதில் இருக்கும் எண்ணெ கரைகள் முழுவதுமாக மறைந்து விடும்.

- Advertisement -

குறிப்பு: 4
தக்காளி சட்னி, வெங்காய சட்னி செய்வதற்கு தக்காளி வெங்காயத்தை நன்றாக வதக்கி விட்டு, அதனை ஆற வைத்து அதன் பிறகு தான் அறைக்க வேண்டும். அப்படி இவற்றை ஆறவைக்க நேரம் இல்லாத பொழுது இதனை சுடச்சுட மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் இரண்டு மூன்று ஐஸ் கட்டிகளையும் சேர்த்து அரைக்க வேண்டும். அவ்வாறு செய்யும்பொழுது மிக்ஸி ஜாரில் இருந்து சட்னி வெளியே வராமலும் மிக்ஸி ஜார் சீக்கிரத்தில் வீணாகாமலும் இருக்கும்.

switch

குறிப்பு: 5
வீட்டில் வாங்கி வைக்கும் நெய் ஆரம்பத்தில் இருக்கும் மணத்திலும் சுவையிலும் நாட்கள் செல்ல செல்ல இருக்காது. அவற்றில் ஒருவித சிக்கு வாடை வர ஆரம்பித்துவிடும். இவ்வாறு சிக்கு வாடை வராமல் இருக்க நெய்யில் சிறிய துண்டு வெல்லத்தை சேர்க்க வேண்டும். இவ்வாறு செய்வதால் வெகுநாட்களுக்கு நெய்யின் மணம் மாறாமல் இருக்கும்.

- Advertisement -