வேலையும் சுலபமாக இருக்க வேண்டும். அதே சமயம் நாம் செய்யக்கூடிய உணவுப் பொருட்களும் சத்து நிறைந்ததாக சுவையாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் வித்தியாசம் வித்தியாசமாக புதுவிதமாக வெரைட்டியாக சமைக்க வேண்டும். அப்போதுதானே வீட்டில் இருப்பவர்கள் விருப்பமாக சாப்பிடுவார்கள். இப்படி தானே எல்லா பெண்களும் பெரும்பாலும் நினைப்பார்கள். ரொம்ப ரொம்ப ஈசியான, ஹெல்தியான, ஒரு தோசை ரெசிபி உங்களுக்காக. மணக்க மணக்க கொத்தமல்லி தழையை போட்டு சூப்பரான கொத்தமல்லி தோசை செய்வது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்வோமா?
முதலில் ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் இட்லி அரிசி – 1 கப், பச்சரிசி – 1 கப், உளுந்து – 1/2 கப், வெந்தயம் – 1 ஸ்பூன் இந்த நான்கு பொருட்களையும் போட்டு தண்ணீரை ஊற்றி நன்றாக கழுவிவிட்டு, இந்த பொருட்கள் அனைத்தும் மூழ்கும் அளவிற்கு நல்ல தண்ணீரை ஊற்றி 3 மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளலாம்.
இந்த நான்கு பொருட்களும் நன்றாக ஊறி வந்த பிறகு தண்ணீரை வடிகட்டி மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள். இதோடு கொத்தமல்லி தழை – 1/2 கப், பச்சை மிளகாய் – 3, தேவையான அளவு உப்பு, இந்த பொருட்களை சேர்த்து தோசை மாவு போல நைசாக அரைத்துக் கொள்ளவேண்டும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது தோசை மாவு தயாராக உள்ளது. இதை மிக்ஸியில் இருந்து அப்படியே ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, 1/2 ஸ்பூன் அளவு சீரகம் போட்டு மாவை நன்றாக கரைத்து, மூடி போட்டு 1 மணி நேரம் வரை அப்படியே ஊற விட்டால் கூட போதும். ஒரு மணி நேரத்திற்கு மேலே இரண்டு மணி நேரம் ஊறினாலும் தவறு கிடையாது. மாவு நன்றாக புளித்து வரும். ஆனால் மாவு அரைத்த 1 மணி நேரத்திலேயே இதை தோசை வார்த்து சாப்பிடலாம். சுவையாகத்தான் இருக்கும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து கொள்ளுங்கள். தோசை சுடுவதற்கு தேவையான மாவை தோசைக்கல்லில் வார்த்து மெல்லிசாக தேய்த்து உங்களுடைய தேவைக்கு ஏற்ப நெய் அல்லது எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் தோசையை சிவக்க வைத்து எடுத்து சாப்பிட்டு பாருங்கள். கொத்தமல்லி தழை வாசனை நிறைந்த, பச்சை மிளகாய் காரத்துடன் சூப்பரான தோசை தயார்.
இந்த தோசைக்கு தொட்டுக்கொள்ள இட்லிபொடி, தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, சாம்பார், எதை வேண்டுமென்றாலும் பரிமாறலாம். அது நம்முடைய விருப்பம் தான். உங்களுக்கு இந்த சிம்பிளான ஆரோக்கியம் நிறைந்த தோசை ரெசிப்பி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.