நச்சுனு ஒரு பூண்டு சட்னி. பூண்டு சட்னி இப்படி அரைத்தால் நாலு நாள் ஆனாலும் இதோட சுவை நாக்கை விட்டு போகவே போகாது.

poondu-chutney
- Advertisement -

ஒவ்வொரு வீட்டிலும் விதவிதமாக இந்த பூண்டு சட்னியை அரைப்பார்கள். இன்று ஒரு வித்தியாசமான பூண்டு சட்னி அரைப்பது எப்படி என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த பூண்டு சட்னி ரெசிபி இட்லி, தோசை, சப்பாத்தி, பணியாரம் இவைகளுக்கு தொட்டுக் கொள்ள சூப்பரான சைட் டிஷ் ஆக இருக்கும். ரவா தோசை, ஓட்ஸ் தோசை, பயிறு தோசை என்று இப்படிப்பட்ட சத்து நிறைந்த தோசைகளுக்கும் இதை சைடிஷ் ஆக பரிமாறினால் அசத்தலான சுவை இருக்கும்.

தேவையான பொருள்

தோலுரித்த பூண்டு பல் – 2 கைப்பிடி அளவு, தோல் உரித்த சின்ன வெங்காயம் – 5 லிருந்து 6, இஞ்சிதோல் சீவியது – 1 இன்ச், வெல்லம் – 1 ஸ்பூன், தண்ணீரில் ஊற வைத்த கோலிக் குண்டு அளவு – புளி, தண்ணீரில் ஊற வைத்த வர மிளகாய் – 4 லிருந்து 5, உங்கள் காரத்திற்கு ஏற்ப.

- Advertisement -

செய்முறை

அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் எடுத்து வைத்திருக்கும் பூண்டு, வெங்காயம், இஞ்சி, இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து வதக்க வேண்டும். அடுப்பை மீடியம் ஃப்ளேமில் வைத்துவிட்டு இந்த மூன்று பொருட்களும் பொன்னிறம் வரும் வரை வறுத்து எடுத்துக்கோங்க. கருக விட்டுடாதீங்க. வதக்கிய இந்த பொருட்களை எல்லாம் அப்படியே நன்றாக ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள்.

சட்னிக்கு தேவையான அளவு உப்பு, ஊற வைத்த புளி, மிளகாயையும் போட்டு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, அரைக்கணும். புளியும் வரமிளகாயும் ஊற வைத்த தண்ணீர் ஊற்றி அரைத்தாலே போதுமானதாக இருக்கும். நிறைய தண்ணீர் ஊற்றக்கூடாது. இந்த சட்னி கெட்டியாக நைஸ் ஆக அரைபட்டு கிடைக்க வேண்டும்.

- Advertisement -

அரைத்த சட்னி, மிக்ஸி ஜாரில் அப்படியே இருக்கட்டும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு – 1/2 ஸ்பூன், உளுந்து 1/2 ஸ்பூன், வரமிளகாய் – 1, பெருங்காயம் – 2 சிட்டிகை, கருவேப்பிலை – 1 கொத்து, போட்டு தாளித்து மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் சட்னியை இந்த தாளிப்பில் கொட்டி, ஒரு நிமிடம் போல சூடேற்றி இதில் 1 ஸ்பூன் அளவு வெல்லம் சேர்த்து, நன்றாக கலந்து அடுப்பை அணைத்தால் சூப்பரான பூண்டு சட்னி தயாராக கிடைத்திருக்கும்.

இதையும் படிக்கலாமே: வீட்ல இட்லி மாவு மட்டும் இருந்தா போதும்? அத வைச்சு பத்து நிமிஷத்துல சூப்பரான ஜிலேபி செஞ்சு, இந்த புத்தாண்டை நல்ல இனிப்போட ஆரம்பிச்சிடலாம் வாங்க.

வாரத்தில் ஒரு நாள் இப்படி சட்னி செய்து சாப்பிடுங்க. இது உடலுக்கு ரொம்ப ரொம்ப ஆரோக்கியம் தரக்கூடிய விஷயம். பூண்டு கொலஸ்ட்ராலை குறைக்கக்கூடியது. அரைத்து சட்னியாக கொடுக்காமல் முழுசாக கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அந்த பூண்டினை நிச்சயமாக சாப்பிட மாட்டார்கள். மேல் சொன்ன ஆரோக்கியமான சுலபமான சட்னி ரெசிபி உங்களுக்கு பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -