புடவை கட்டினா நீங்க ரொம்ப அழகா இருப்பீங்களா? அப்படின்னா இந்த 5 தவறுகளை மட்டும் பண்ணிடாதீங்க!

saree1
- Advertisement -

பெண்கள் பொதுவாக புடவை கட்டும் பொழுது கூடுதல் அழகாக தெரிவது வழக்கம். என்னதான் மாடர்ன் பெண்ணாக இருந்தாலும் புடவை கட்டும் பொழுது அவளுக்கே தெரியாமல் அவளுக்குள் ஒரு தன்னடக்கம் வந்துவிடுகிறது. நம் பாரம்பரிய புடவை நம் பெருமைகளை பல இடங்களில் எடுத்துக் காட்டியுள்ளது. இத்தகைய புடவைகளை விரும்பி அணிபவர்கள் செய்யக் கூடாத 5 தவறுகள் என்ன? அதைத்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம் வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

safety-pin

குறிப்பு 1:
புடவை கட்டும் பொழுது ஆங்காங்கே சேஃப்டி பின்களை குத்திக் கொள்வது உண்டு. அதுவும் புதிதாக புடவை கட்டும் பெண்களை சொல்லவே வேண்டாம் ஆறு முதல் ஏழு பின்கள் வரை அவிழ்ந்து விடாமல் இருக்க எல்லா இடங்களிலும் குத்திக் கொள்வார்கள். இப்படி நீங்கள் புடவையில் பின் குத்தும் பொழுது ஊக்கினுள் புடவை மாட்டிக் கொண்டு சில சமயங்களில் கிழிந்து விடும் அபாயம் உண்டு. அவசரமாக நீங்கள் புடவையை அவிழ்க்கும் பொழுது பிடித்து இழுத்து புடவையை நாசமாக்கி விடுவது உண்டு. இதற்கு நீங்கள் சேஃப்டி பின் வாங்கிய உடன் சிறிய பாசி மணிகளை கம் போட்டு பின்ணிற்குள் நுழைத்து அடிப்பாகத்தில் ஒட்டி விட்டால் போதும். எத்தனை பின் குத்தினாலும் உங்கள் புடவைக்கு ஒன்றுமே ஆகாது.

- Advertisement -

குறிப்பு 2:
புடவையில் பட்டுப்புடவை என்பது ரொம்பவே பெண்களுக்கு இஷ்டமானதாக இருக்கும். தங்களுடைய பட்டுப் புடவைகளை பத்திரமாக பராமரிக்க வேண்டும் என்கிற எண்ணம் எல்லோருக்கும் இருக்கும். பட்டுப் புடவையை துவைக்க சுடு தண்ணீர் பயன்படுத்தக்கூடாது. வெயிலில் உலர்த்த கூடாது. கைகளால் பிழியக்கூடாது. அப்படியேதான் காயப் போட வேண்டும். அதே போல அயர்ன் செய்யும் பொழுது மேலே ஒரு மெல்லிய காட்டன் துணியை விரித்து குறைந்த அளவில் அனலை வைத்து அயன் செய்ய வேண்டும். அப்போது தான் பட்டுபுடவை நீண்ட காலம் உழைக்கும்.

silk-saree

குறிப்பு 3:
பட்டுப் புடவையில் ஏதாவது காஃபி, டீ போன்ற கறை பட்டுவிட்டால் அதனை சுத்தம் செய்வது கடினமாக இருக்கும். சாதாரணமான இந்த கறைகளைப் போக்க டிரை க்ளீனிற்கு கொடுக்காமல் வீட்டிலேயே எளிமையாக சுத்தம் செய்வது எப்படி? முதலில் முக்கால் பக்கெட் தண்ணீரில் 100ml அளவிற்கு ஒயிட் பெட்ரோல், 50ml அளவிற்கு வினிகர், ஒரு மூடி துணி துவைக்கும் லிக்விட் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் பட்டுப் புடவையின் பார்டர் பகுதியை மட்டும் புடவை கட்டும் பொழுது ஃபீளீட் செய்வது போல் மடித்து, அந்த தண்ணீரில் முக்கி எடுக்க வேண்டும். உங்களுடைய பட்டுப்புடவை சாயம் போகாமல் இருந்தால் மொத்த புடவையையும் ஐந்து நிமிடம் ஊற வைத்து கறை இருக்கும் பகுதியை கைகளால் தேய்க்கலாம். சாயம் போகும் புடவையாக இருந்தால் வெவ்வேறு நிறங்கள் இருக்கும் இடங்களை தனித்தனியாக இது போல் தண்ணீருக்குள் முக்கி அலச வேண்டும். இல்லை என்றால் எல்லா இடங்களிலும் சாயம் கலந்துவிடும். ஐந்து நிமிடத்தில் இந்த மாதிரியான சாதாரண கறைகளை எளிதாக நீக்கிவிடும்.

- Advertisement -

குறிப்பு 4:
காட்டன் புடவைகள், காட்டன் சுடிதார் போன்றவற்றை அதிகம் உடுத்தும் நபர்கள் அதற்கு அடிக்கடி கஞ்சி போட்டு காய வைத்தால் எவ்வளவு நாட்கள் ஆனாலும் புத்தம் புதிதாக இருக்கும். கடைகளில் கஞ்சி மாவு என்று தனியாக விற்கப்படுகிறது. இந்த கஞ்சி மாவை ஒரு டம்ளர் அளவிற்கு எடுத்து ஒரு குண்டான் தண்ணீர் ஊற்றி கரைத்து அடுப்பில் வைத்து ஒரு கொதி வரும் வரை காய்ச்சிக் கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் புடவையை முக்கி எடுக்கும் அளவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக கஞ்சியுடன் தண்ணீர் சேர்த்து ஒவ்வொரு புடவையாக முக்கி எடுத்து பிழிந்து நன்கு உதறி காய வைத்தால் அயர்ன் கூட பண்ண தேவையில்லை. மொரமொரப்பாக அயர்ன் செய்த காட்டன் புடவை எளிதாக நமக்கு தயாராகிவிடும்.

saree

குறிப்பு 5:
புடவை கட்டும் பொழுது சிலருக்கு இடுப்பு தெரியாமல் கட்டுவதற்கு இடுப்பு மடிப்பில் இருக்கும் பகுதியை ரவிக்கையுடன் சேர்த்து பின் செய்து விடுவது உண்டு. இப்படி செய்வதை விட நீங்கள் முந்தானையை பிளவுசுடன் சேர்த்து பின் செய்யும் பொழுது முதல் ஃபீளீட்டை விட்டு விட்டு பின் செய்ய வேண்டும். பிறகு அந்த ஃபீளீட்டை எவ்வளவு இழுத்து இடுப்புப் பகுதியில் பின் செய்ய முடியுமோ அவ்வளவு இழுத்து விட்டால் நீங்கள் என்ன தான் ஓடி ஆடினாலும் உங்கள் இடுப்பு பகுதியில் இருக்கும் துணி விலகவே செய்யாது. கழுத்தை ஒட்டிய மடிப்புகள் கழுத்தை நெறிக்கவும் செய்யாமல் நேர்த்தியாக இருக்கும்.

- Advertisement -