இப்படி பக்குவமாக சுவையான தக்காளி சாதம் செய்தால், வீட்டில் உள்ள அனைவரும் கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்

tomato-rice-recipe
- Advertisement -

தக்காளி சாதம் ஒரு காரசாரமான, சுவையான சாதம்,  குறிப்பாக இது லஞ்ச் பாக்ஸ்க்கு ஏற்றதாகும். தக்காளி சாதம்,  தக்காளி புலாவ், தக்காளி பாத், தக்காளி பிரியாணி என பலவிதங்களில் அழைக்கப்படுகிறது.  தமிழ்நாட்டில் தக்காளி சாதம் என்று கூறுகிறோம். பொதுவாக தக்காளி சாதம் செய்வதற்கு காய்கறிகள் தேவையில்லை. வெங்காயம், தக்காளி, மட்டும் போதும்,  நீங்கள் விருப்பப்பட்டால் பட்டாணி, பீன்ஸ், போன்ற காய்கறிகள் சேர்த்துக் கொள்ளலாம்.தமிழ்நாட்டில் பல விதமான  கலந்த சாதம் செய்யப்படுகிறது . குறிப்பாக தேங்காய் சாதம்,  புளி சாதம், எலுமிச்சை சாதம், கத்திரிக்காய் சாதம், கொத்தமல்லி சாதம், கருவேப்பிலை சாதம் ஆகியவை புகழ்பெற்றவை.  கலந்த சாதங்கள் பொதுவாக மிச்சமான சாதத்தை வீணாக்காமல் செய்யப்படுவது, அல்லது காலை நேரங்களில் விரைவாக செய்வதற்காக செய்யப்படுகிறது.  வாருங்கள் இந்த தக்காளி சாதத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
பழுத்த தக்காளி – 2, பெரிய வெங்காயம் – 1, எண்ணெய் – 2 ஸ்பூன், முந்திரி பருப்பு – 10, இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன், பச்சை மிளகாய் – 3, கொத்தமல்லி – சிறிதளவு, மிளகாய் தூள் _ 1 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், மல்லித்தூள் – 1/2 ஸ்பூன், சிவப்பு மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன், கரம் மசாலா – 1/2 ஸ்பூன், உப்பு – 1 ஸ்பூன், நெய் – 1 ஸ்பூன்,

- Advertisement -

தக்காளி சாதம் செய்முறை:
ஒரு பாத்திரத்தில் 2 தேக்கரண்டி  எண்ணெய் சேர்த்து சூடாக்கவும், சூடானதும் ஒரு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.வெங்காயத்தை 2 முதல் 3 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வதக்கிக்கொள்ளவும்.பின்னர் 10 முந்திரிப் பருப்புகளை சேர்த்து முந்திரிப்பருப்பு லேசாக சிவக்கும் வரை வறுத்துக் கொள்ளவும்.

இப்பொழுது 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 3 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு, ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். அதனுடன் 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், 1 ஸ்பூன் மிளகாய் தூள், 1/2 ஸ்பூன் மல்லித்தூள், 1/2 ஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள், 1/2 ஸ்பூன் கரம் மசாலா, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

- Advertisement -

பின்னர் 2 பழுத்த தக்காளி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். தக்காளி மசியும் வரை வதக்கி கொள்ளவும்.1/4 கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 10 முதல் 15 நிமிடங்களுக்கு வேக வைக்கவும் அல்லது எண்ணெய் பிரிந்து வரும் வரை வேகவைக்கவும்.

இப்பொழுது 1 கப் வடித்த சாதம் சேர்த்து மெதுவாக கிளறி விடவும்.கடைசியாக 2 தேக்கரண்டி நெய் சேர்த்து சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்துக் கிளறி  விடவும். அவ்வளவுதான் சுவையான தக்காளி சாதம் தயாராகிவிட்டது.

- Advertisement -