பஞ்சு போல சாஃப்ட் இட்லி செய்ய இனி மாவு அரைச்சு கஷ்டப்பட வேணாம். இதோ இப்படி செஞ்சு வச்சுக்கோங்க கஷ்டமே இல்லாம சுலபமா இட்லி சுட்டு எடுத்திடலாம்.

- Advertisement -

இட்லியை நாம் சாப்பிட வேண்டும் என நினைத்தால் அரிசி ஊற வைத்து அரைத்து அதை புளிக்க வைத்து என அதன் வேலைகள் வெகுவாக நீளும். அப்படி இல்லாமல் இந்த முறையில் நீங்கள் மாவை தயார் செய்து வைத்துக் கொண்டால் போதும் உடனே இட்லி செய்து விடலாம். அதிலும் வேலைக்கு செல்லும் பெண்கள் இது போல அரைத்து வைத்துக் கொண்டால் அவசர காலத்தில் சட்டென்று செய்து விடலாம். வாங்க இப்போது இன்ஸ்டன்ட் இட்லி மாவு எப்படி தயார் செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

சாஃட் இட்லி செய்ய மாவு தயாரிக்கும் முறை: 
இந்த மாவை அரைப்பதற்கு முதலில் 4 டம்ளர் இட்லி அரிசியை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு ஒரு டம்ளர் உளுந்தம் பருப்பு, கால் டம்ளர் ஜவ்வரிசி இவை தான் இந்த மாவு அரைக்க சரியான அளவு. இப்பொழுது அரிசி உளுந்து இரண்டையும் தனித்தனியாக தண்ணீர் ஊற்றி கழுவி எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து நல்ல வெயிலில் மெல்லிய காட்டன் துணி ஒன்றை போட்டு நாம் கழுவிய அரிசி பருப்பு இதை எல்லாம் தண்ணீர் கொஞ்சம் கூட இல்லாமல் வடித்த பிறகு இந்த துணியில் போட்டு ஆற வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அடுப்பில் அடி கனமான கடாய் வைத்து சூடானவுடன் காய்ந்த உளுந்தை சேர்த்த பிறகு ஜவ்வரிசியை சேர்த்து மிதமான தீயில் உளுந்து லேசாக வாசம் வரும் வரை வறுக்க வேண்டும். உளுந்து நிறம் மாறிவிடக் கூடாது கவனமாக வறுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது ஒரு மிக்ஸி ஜாரில் காய்ந்த அரிசியை சேர்த்து நல்ல பவுடராக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த மாவை நாம் இட்லிக்கு அரைப்பதால் லேசான கொரகொரப்பு தன்மையுடன் இருக்க வேண்டும். அதற்கு ஏற்றார் போல் அரைத்துக் கொள்ளுங்கள். அடுத்தது உளுந்தை சேர்த்து நல்ல பைன் பவுடராக அரைக்க வேண்டும்.

- Advertisement -

உளுந்தை அரைத்த பிறகு ஒரு சல்லடையில் சலித்த பிறகு மீதம் இருப்பதையும் மறுபடியும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து சேர்த்துக் கொள்ளுங்கள். அரைத்த அரிசி மாவு உளுந்து மாவு இரண்டையும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாக சேர்த்து தேவையான அளவு உப்பை சேர்த்து தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கரைத்து வைத்து விடுங்கள்.

எட்டு மணி நேரம் வரை இந்த மாவை அப்படியே விட்டு விடுங்கள். மாவு நன்றாக புளித்து வந்து விடும். இப்போது நீங்கள் எப்போதும் போல இந்த மாவில் இட்லி ஊற்றி எடுத்துக் கொள்ளலாம். நல்ல சாப்டான வெள்ளை வெளேரென்று இட்லி தயாராகி விடும். இந்த மாவை கொஞ்சமாக தயாரிப்பதாக இருந்தால் மிக்ஸி ஜாரில் அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை நீங்கள் அதிக அளவில் தயார் செய்து வைத்துக் கொள்வதாக இருந்தால் கடையில் கொடுத்து அரைத்த பிறகு ஜலித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: இனி பூஜை பாத்திரங்களை கையால் தேய்த்தே பளிச்சின்னு மாற்ற செலவே இல்லாத சூப்பரான இந்த டிரிக்ஸை டிரை பண்ணுங்க. செம்பு பித்தளைன்னு எந்த பூஜை பாத்திரமா இருந்தாலும் சும்மா தகதகன்னு மின்னும்.

இந்த முறையில் நீங்கள் மாவை அரைத்து வைத்துக் கொண்டால் அவசர நேரத்தில் ஊற வைத்து அரைத்துக் கொண்டு இருக்க வேண்டியது கிடையாது. காலையில் இட்லி ஊற்ற வேண்டும் என்றால் இரவே தயார் செய்து விடலாம். ஒரு வேளை இரவு வேண்டுமென்றால் நீங்கள் காலை வேலைக்கு செல்லும் பொழுது மாவை கரைத்து வைத்து சென்று விடலாம். மிகவும் சுலபமாகவும் இருக்கும். இந்த முறை உங்களுக்கு பிடித்திருந்தால் பயனுள்ளதாக இருக்கும் என தோன்றினால் நீங்களும் இது போல அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -