கடற்கரையில் தோன்றிய அதிசய சிவ லிங்கம் – வீடியோ

Siva lingam
- Advertisement -

ஆதி காலம் முதலே சிவ வழிபாடு என்பது நமது நாட்டில் இருந்து வருகிறது. அதற்கான சான்றுகளும் நம்மிடம் பல உண்டு. இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள சோம்நாத் கோயிலிற்கு அருகில் உள்ள கடற் பகுதியில் சிவ லிங்கல்கள் பல தானாக தோன்றியுள்ள. அதை மக்கள் பலர் தினமும் வழிபடுகின்றனர். இதோ அதற்கான வீடியோ காட்சி.

- Advertisement -
தகவலை வாட்சாப்பில் பகிர கிளிக் செய்யவும்:

குஜராத் மாநிலத்தில் உள்ள பிரபாச பட்டினக் கடற்கரையில் அமைந்துள்ளது சோம்நாத் கோவில். இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க தளங்களில் இதுவும் ஒன்று. கந்த புராணத்தில் இக்கோவிலை பற்றிய குறிப்புக்கள் பல இருப்பதாக கூறப்படுகிறது. இஸ்லாமிய படையெடுப்பின் போது இந்த கோவில் 6 முறை இடிக்கப்பட்டது. ஆனால் அந்த சர்வேஸ்வரனின் அருளால் மீண்டும் மீண்டும் இந்த கோவில் எழுப்பப்பட்டது.

பல சிறப்புக்கள் பெற்ற இந்த கோவிலின் சந்தன கதவுகள் கஜினி முகமதால் ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த கதவுகளை மீண்டு மீட்பதற்கான நடவடிக்கையை 1842 ஆம் ஆண்டில் இந்தியாவின் கவர்னர் ஜெனரல் லார்டு எல்லன்பரோ எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி எல்லா காலகட்டங்களிலும் மிக சிறப்புற்று விளங்கிய கோவில் இது.

காலத்தை கடந்து நிற்கும் சோம்நாத் கோவிலின் கடற்பகுதியில் அனைவரும் அதிசயிக்கும் வண்ணம் சில சிவ லிங்கங்கள் தானாக தோன்றியது. அது எப்படி எப்போது தோன்றியது என சரிவர தெரியவில்லை. ஆனால் அந்த லிங்கங்கள் மிகவும் பழைமையானதாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -