ஒரே கருவறையில் சிவனும் பெருமாளும் காட்சி தரும் அற்புதம் கோவில்

சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை சிவனை வணங்கும் பெரும்பாலானோர் விஷ்ணுவை வணங்காமலும் விஷ்ணுவை வணங்கும் பெரும்பாலானோர் சிவனை வணங்காமலும் இருந்தனர். ஆனால் அத்தகைய கால கட்டத்தில் சிவனும் விஷ்ணுவும் ஒரே கருவறை வீற்றிருந்து மக்களுக்கு அருள்பாலித்த கோவில் ஒன்று உள்ளது. வாருங்கள் அதை பற்றி பார்ப்போம்.

kathali narasimmar temple

தேனீ மாவட்டம் ஆண்டிபட்டியில் இருந்து சுமார் மூன்று கி.மீ. தொலைவில் உள்ள ஜம்புலிபுத்தூரில் அமைந்திருக்கிறது “கதலி நரசிம்மர்” ஆலயம். சுமார் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த கோவிலின் கருவறையில் கதலி என்ற பெயரில் சிவபெருமானும், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வரதராஜ பெருமாளும் காட்சி தருகின்றனர்.

ஆரம்ப காலத்தில் இது சிவனுக்குரிய ஆலயமாகவே திகழ்ந்தது. ஆனால் பிற்கால பாண்டிய மன்னர்கள் சைவ, வைணவ சமயங்களின் இணைப்பை ஊக்குவிக்கு வகையில் இந்த கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாளின் விக்ரகத்தை பிரதிஷ்டை செய்தனர்.

lingam

கோவில் உருவான வரலாறு:
சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் கதலி வடிவில் சுயம்பு லிங்கம் கண்டெடுக்கப்பட்டது. பின் கண்டமனூர் ஜமீன் சார்பில் அங்கு சிவபெருமானுக்கு ஒரு ஆலயம் அமைக்கப்பட்டது. சில காலங்கள் கழித்து அந்த பகுதியில் வாழ்ந்தவர்களின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பாலின் அளவு தினமும் குறைவதை அவர்கள் கண்டனர்.

milk

யாரோ ஒருவர் பாலை திருடுகிறார் என்று எண்ணி ஒருநாள் அனைவரையும் சேர்ந்து யார் திருடுகிறார் என்று கண்காணிக்க துவங்கினர். அப்போது ஒரு பாம்பு வந்து வீடு வீடாக பால் குடித்து செல்வதை கண்டு அவர்கள் கடும் கோபம் கொண்டனர்.

அந்த பாம்பை கொள்வதற்காக அவர்கள் விரட்டி ஓட அந்த பாம்பு சிவபெருமான் கோவில் அருகில் இருந்த புற்றுக்குள் ஓடிவிட்டது. மக்களும் அதை விடுவதாக இல்லை. அந்த புற்றை இடிக்க அவர்கள் முற்பட்டனர். அப்போது அதில் இருந்து பாம்பு ரத்தம் சொட்ட சொட்ட வெளியில் வந்தது.

snake

Advertisement

பாம்பு வெளியில் வந்த அடுத்த நொடியே ஒரு அசரீரி ஒலிக்க துவங்கியது. “இனி என்னால் உங்களுக்கு எந்த துன்பமும் இருக்காது. என்னை மனமுருகி வேண்டும் அனைவருக்கும் நான் கேட்ட வரங்களை தருவேன்” என்று அசரீரி ஒலித்தது. பின் அங்கிருந்து திடீரென பாம்பும் மறைந்தது. அந்த பாம்பிற்கு ஏற்பட்ட காயத்தின் தழும்பு அங்கு இருந்த கதலியின் மேல் பதிந்தது. இன்று வரை அந்த தழும்பு இருக்கிறது.

sivan

இதையும் படிக்கலாமே:
வெள்ளிக்கிழமையில் இதை செய்தால் அதிஷ்டம் நிச்சயம்

இந்த கோவிலில் உள்ள கால பைரவரை வழிபட்டால் கடன் பிரச்சனை தீரும் என்பது நம்பிக்கை. அதோடு பிரச்சனைகளை மனதில் போட்டு குழப்பிக்கொண்டிருப்பவர்கள் இந்த கோயிலிற்கு சென்றால் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்பது ஐதீகம்.