சிவ வழிபாட்டிற்கு மிக முக்கியமானதொரு நாளெனில் அது பிரதோஷம் தான். அதிலும் இந்த பிரதோஷங்களில் சனிப்பிரதோஷமானது மிக மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இதற்கு காரணம் ஒரு சனி பிரதோஷம் விரதத்தை மேற் கொண்டால் அது பல வருட சனி பிரதோஷ விரதத்தை மேற்கொள்வதற்கான பலனை கொடுக்கும் என்பதே.
அத்தகைய அற்புதமான பலனை களை அள்ளி தரக்கூடிய இந்த நாளில் சிவபெருமானின் அருளை முழுமையாக பெற செய்யக் கூடிய ஒரு எளிய சூட்சம பரிகாரத்தை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்
சிவன் அருளைப் பெற சனி மகா பிரதோஷம்
பொதுவாகவே பிரதோஷ வழிபாடு என்பது நம்முடைய பாவங்கள், கர்மாக்கள் தீர்ந்து சிவன் அருளை முழுவதுமாக பெற மேற்கொள்வதாகும். அதிலும் முக்கியமாக சனி பிரதோஷ நன்நாளில் நாம் அவரை வழிபடும் பொழுது நிச்சயம் நம்முடைய தோஷங்கள் நீங்கி நல்ல முறையில் வாழலாம் என்பதில் சந்தேகமே இல்லை.
அத்துடன் இதில் கொடுக்கப்பட்டுள்ள இந்த சூட்சும பரிகாரத்தை செய்யும் போது சிவன் அருளை முழுவதுமாக பெற்று நம் குடும்பம் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழலாம் என்பதுடன், சிவபெருமானே நம் இல்லம் வந்து தங்கி நம்மை ஆசிர்வதிப்பார் என்றும் சொல்லப்படுகிறது. அத்தகைய ஒரு சூட்சும பரிகாரத்தை இப்போது தெரிந்து கொள்ளலாம். இதற்கு நமக்கு தேவையான ஒரே ஒரு பொருள் பச்சைக் கற்பூரம்.
இந்த பச்சை கற்பூரத்தை நீங்கள் முதல் நாளே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். சனி பிரதோஷத்தன்று காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து பூஜை அறையில் குளித்து முடித்து விட்டு தீபம் ஏற்றி சிவபெருமானை நினைத்து சிவபுராணம் படியுங்கள் அல்லது கேளுங்கள். அதன் பிறகு சிறிதளவு பச்சை கற்பூரத்தை எடுத்து நன்றாக தூள் செய்து கொள்ளுங்கள்.
அதில் தண்ணீரை ஊற்றி குழைத்து அந்த கலவையை ஒரு சொம்பில் கொஞ்சமாக தண்ணீர் எடுத்து அதில் கலந்து விடுங்கள். இப்போது சிவபெருமானின் நாமத்தை (ஓம் நமசிவாய) சொல்லியவாறு வீடு முழுவதும் இந்த பச்சை கற்பூரம் கலந்த தண்ணீரை கொஞ்சமாக தெளித்து விடுங்கள். இதை தெளிப்பதற்கு கையை பயன்படுத்தாமல் அரச இலை மாவிலை வேப்ப இலை போன்ற ஏதேனும் ஒன்றாய் தெளித்து விடுங்கள்.
இப்படி செய்யும் பொழுது சிவபெருமானுடைய முழு அருள் நமக்கு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அதன்பிறகு அன்றைய நாளில் மாலை வேளையில் சிவாலயத்திற்கு சென்று சிவ தரிசனத்தை செய்து இந்த பரிகாரத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே: வீடு சுபிக்ஷமாக இருக்க சிவ வழிபாடு
இந்த முறையில் சிவபெருமானை நினைத்து நாம் செய்யும் இந்த பரிகாரம் நம் வாழ்க்கை சிறப்புடன் அமைதி வதுடன் தொடர்ந்து பல நல்ல விஷயங்கள் உங்கள் இல்லத்தில் நடைபெறும் என்றும் சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்யலாம்.