இதெல்லாம் உங்களுடைய வாழ்வில் நடந்தால், சிவனின் பரிபூரண ஆசீர்வாதம் உங்களுக்கு இருக்கிறது என்று அர்த்தம். அந்த சிவபெருமான் உங்களுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதும் அர்த்தம்.

sivalingam
- Advertisement -

தாயும் அவன் தான், தந்தையும் அவன் தான். இந்த ஈரேழு உலகத்திற்கும் சொந்தக்காரன் சிவபெருமான். சிவன் இல்லையே நாம் எல்லோரும் சமம். நம்முடைய உடம்புக்குள் இருக்கக்கூடிய உயிர்தான் சிவபெருமான். நாம் இன்று உயிரோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்றால் அதற்கு காரணம் அந்த சிவன். மறுபிறவியே இருக்கக் கூடாது, முத்தியடைய வேண்டும் என்றால் அதற்கு சிவ வழிபாடு ஒன்றுதான் வழிகாட்டும்.

இந்த உலகத்தில் இருக்கக்கூடிய புழு பூச்சி ஊண் உயிர் அனைத்துமே அந்த சிவபெருமானின் படைப்புதான். ஆக எல்லா இடத்திலும் சிவபெருமான் இருக்கின்றான். எல்லா உயிரிலும் சிவபெருமான் கலந்து இருக்கின்றான். இந்த உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு உயிருக்கும் அந்த சிவபெருமானின் ஆசிர்வாதம் இருக்கிறது.

- Advertisement -

சிவபெருமான் உங்களுடன் தான் இருக்கிறார் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்:
எல்லாம் சிவமயம் என்று சொன்னாலும், எல்லோரும் சிவபெருமானை மனம் உருகி வழிபாடு செய்வதில்லை. சில பேருக்கு சிவபெருமான் பிடிக்கும். சில பேருக்கு விநாயகர், சில பேருக்கு பெருமாள், சில பேருக்கு அம்மன் சாமி, பிடிக்கும் அல்லவா. அந்த வரிசையில் சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தவர்கள், என்று இந்த பூலோகத்தில் ஒரு பட்டியல் போடலாம். இவர்களை எல்லாம் சிவபெருமானுக்கு ரொம்ப பிடிக்கும். இவர்களுடன் தான் சிவபெருமான் வாழ்கின்றார் என்றே சொல்லலாம்.

அப்படிப்பட்ட சிவபெருமானின் ஆசீர்வாதம் பெற்றவர்கள் யார் யார் என்பதை நாமும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் அல்லவா. தெரிந்து வைத்துக் கொண்டால் அந்த பட்டியலில் நம்மையும் சேர்த்துக் கொள்ள முடியும், அதற்காகத்தான் இந்த பதிவு.

- Advertisement -

உதாரணத்துக்கு நம் வீட்டு பக்கத்திலேயே பழமையான சிவன் கோவில் இருக்கும். அங்கு நாம் நினைத்தால் தினம் தினம் போய் சிவபெருமானை பார்க்கலாம். ஆனால் வீட்டில் வேலை இருக்கிறது, என்று நம்மால் போய் அந்த சிவபெருமானை தரிசனம் செய்ய முடியாத சூழ்நிலை ஆகிவிடும். இப்படி இருந்தாலும் சில பேருக்கு சிவன் பிரசாதம் வீடு தேடி வரும். இன்னைக்காவது கோவிலுக்கு வா, என்று பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் உங்களை கோவிலுக்கு கூட்டிக் கொண்டு செல்வார்கள். அதுதான் சிவன் செயல். அப்போ உங்களுக்கு அந்த சிவனின் ஆசிர்வாதம் கிடைத்துவிட்டது என்று அர்த்தம்.

பிரதோஷ வழிபாடு அன்று தவறாமல் நீங்கள் போய் சிவபெருமானை தரிசனம் செய்து வழிபாடு செய்தால் உங்களுக்கு சிவபெருமானின் அனுகிரகம் ஆசீர்வாதம் முழுமையாக இருக்கிறது என்று அர்த்தம். தினந்தோறும் நெற்றியில் விபூதி பூசி ‘சிவசிவ’ என்று சொன்னால் சிவபெருமான் உங்களுடன் தான் இருக்கிறார் என்று அர்த்தம்.

- Advertisement -

விஷ ஜந்துக்கள், விஷ பூச்சிகள் அல்லது நாய் குரங்கு பாம்பு என்று ஏதோ மிருகம், ஏதோ ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில் உங்களை கடிக்க வருகிறது, நம் கதை இன்றோடு முடிந்தது என்று நினைத்திருப்போம். ஆனால் அந்த விஷ ஜந்து நம் அருகில் வந்து, கடிக்காமல் விட்டுவிட்டு சென்று இருக்கும். கடைசி நேரத்தில் தப்பி இருப்போம். இந்த அதிசயத்தை சிவபெருமானால் மட்டும் தான் நிகழ்த்த முடியும். சிவன் கோவிலுக்கு யாரெல்லாம் அடிக்கடி சென்று சிவலிங்கத்தை வழிபாடு செய்து விட்டு வருகிறாரோ அவர்களுக்கெல்லாம் சிவபெருமானின் அனுகிரகம் இருப்பதாகத்தான் அர்த்தம்.

ருத்ராட்சத்தை அணிந்து கொண்டு சிவ சிவ என்ற வார்த்தையை உச்சரித்தால் நீங்கள் தான் இந்த உலகத்தில் செல்வந்தர்கள். சிவன் வழிபாடு செய்பவர்களுக்கு இறப்பு உண்டு. நீங்கள் இறந்த பின்பு உங்களை அந்த எமன் வந்து அழைத்துச் செல்ல மாட்டான். தேவர்கள் வந்து அழைத்துச் செல்வார்கள் என்று சொல்கிறது புராணம்.

இந்த உலகத்தில் எந்த இடத்தை தோண்டி எடுத்தாலும் அந்த இடத்திலிருந்து கிடைக்கக்கூடிய பொருள்தான் இந்த சிவலிங்கம். இந்த உலகம் முழுவதும் லிங்க வழிபாடு தான் ஆதி காலத்தில் இருந்தே செய்யப்பட்டு வருகிறது. எல்லாம் சிவமயம். உலகமே சிவமயம். சிவன் சிவன் சிவன் சிவன் சிவன் என்று இப்படி சொல்லிக் கொண்டே இருக்கலாம். சில பேருக்கு சிவசிவா என்று சொன்னாலே கண்முன் லிங்கம் தோன்றி, கண்களில் இருந்து கண்ணீர் பெருகும். அப்படியெல்லாம் சிவன் வழிபாடு செய்யக்கூடிய பக்தர்கள் இந்த பூமியில் வாழ்கிறார்கள். சில பேருக்கு இந்தப் பதிவை படித்தால் கூட சிவபெருமானின் நினைப்பு கண்களை கலங்க வைக்கும்.

இதையும் படிக்கலாமே: இனி வேலை தேடி செல்லும் போது இதை மட்டும் மறக்காமல் கையில் கொண்டு செல்லுங்கள். வீட்டிற்கு திரும்பி வரும் போது நிச்சயம் வேலையுடன் தான் வருவீர்கள்.

சிவனைப் பற்றி சொல்லி, உங்களுக்கு புரிவதை விட, சிவ வழிபாடு செய்து பாருங்கள். உணரும் போது தான் சிவ பக்தி என்ன என்பது தெரியும். அந்த சிவபெருமானின் அனுக்கிரகமும் ஆசீர்வாதமும் அனைவருக்கும் கிடைக்க எம்பெருமானை வேண்டிக் கொண்டு, சிவ சிவ என்று சொல்லி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -