சிவனுக்கு எந்த பூவை வைத்து வழிபட்டால் வாழும் பொழுதே சொர்க்கத்தை காணமுடியும் என்று புராணங்கள் கூறுகிறது தெரியுமா?

sivan-sembaruthi-poo

ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு விதமான பூக்கள் உகந்ததாக ஆன்மிக சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. அந்தந்த கடவுளுக்கு உகந்த மலர்களை சாற்றி வழிபடும் பொழுது அதற்குரிய பலன்களும் நமக்குக் அபரிமிதமானவையாக இருக்கும். அந்த வகையில் சிவனுக்கு உரிய பூக்கள் எது? சிவபெருமானுக்கு இந்த பூக்களை சாற்றும் பொழுது கிடைக்கும் பலன்கள் என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

lingam-vilva-archanai

எந்த ஒரு சிவவழிபாடு செய்யும் பொழுதும் வில்வ இலை இல்லாமல் அந்த வழிபாடு முழுமை அடையாது என்று புராணங்கள் குறிப்பிடுகிறது. பிரம்மனால் வில்வமரம், லக்ஷ்மியின் வலது திருக்கரத்தில் இருந்து உருவாக்கப்பட்டது என்று கூறுவது உண்டு. சிவ வழிபாட்டில் வில்வ இலை இடம் பெற்றால் சகல, சவுபாக்கியங்களும் உண்டாகும்.

அனைத்து பிரசித்தி பெற்ற சிவாலயங்களிலும் சிவனுக்கு உகந்த தும்பை பூ விற்பனை செய்வது உண்டு. தும்பைப் பூ என்பது சிவபெருமானை வழிபடுவதற்கு மிகவும் உகந்த பூ ஆகும். மிக சிறிய அளவில் வெண்மை நிறத்தில் இருக்கும் தும்பைப் பூ சிவனுக்கு படைத்து வழிபட்டால் நம் துன்பங்களை உடனே போக்கும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

thumbai-poo

அனைவரும் நாம் இறந்த பிறகு சொர்க்கத்தை அடைய வேண்டும் என்று நினைக்கிறோம் ஆனால் வாழும் காலத்திலேயே மகிழ்ச்சியான வாழ்வை அமைத்துக் கொள்ள எந்த ஒரு முயற்சியும் செய்வதில்லை. ஆயிரம் என்ற எண்ணிக்கையில் செம்பருத்தி மலர்களை மாலையாக கோர்த்து சிவனுக்கு சாற்றி வழிபட்டால் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்கால வாழ்க்கையிலேயே பேரின்பத்தை அடையலாம்.

- Advertisement -

நம் அனைவருக்கும் மிகவும் பிடித்த ரோஜா பூ வைத்து சிவனுக்கு வழிபடுவது வழக்கம். எந்த வகையான ரோஜாவாக இருந்தாலும் சரி பத்து ரோஜா பூக்களை சிவனுக்கு வைத்து வழிபட்டால் அதே எண்ணிக்கையிலான குதிரைகளை வைத்து யாகம் செய்த பலன் கிடைக்குமாம். மேலும் 8 என்ற எண்ணிக்கையில் ரோஜா மலரை கொண்டு சிவனுக்கு வழிபாடு செய்தால் நேரடியாக மோட்சம் உண்டு என்றும் சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது.

paneer-rose-plant

சிவனின் அருள் பெற ஊமத்தம் பூ வைத்து வழிபடுவது உண்டு. வெண்மை நிறத்தில் ஊது குழல் போல இருக்கும் இவ்வகையான பூக்கள் சாதாரணமாக எல்லா இடங்களிலும் கிடைக்கக் கூடியது தான். ஊமத்தம் பூவை வைத்து சிவனை வழிபட்டால் சகல சம்பத்துகளும் உண்டாகும்.

oomatham-poo

விநாயகருக்கு உகந்த எருக்கம்பூ, சிவபெருமானுக்கும் உகந்தது ஆகும். எருக்கம் பூ மாலை செய்து சிவபெருமானுக்கு சாற்றி வழிபாடு செய்தால் நீங்கள் மனதாலும், உடலாலும் தெரியாமல் செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தம் செய்வது போல் அமையுமாம். தெரிந்தோ, தெரியாமலோ இவ்வகையான பாவங்களுக்கு விமோசனம் பெற எருக்கம்பூ மாலை சாற்றி சிவனை வழிபடுங்கள்.

பல்வேறு நிறங்களில் பூக்கும் பூவாக இருக்கும் சக்தி வாய்ந்த தாமரை பூவானது பல்வேறு தெய்வங்களுக்கு உகந்ததாக உள்ளது அவ்வகையில் சிவபெருமானுக்கு உகந்த தாமரை நீல நிறத் தாமரை ஆகும். நீல நிறத்தில் பூக்கின்ற தாமரை மலரை சிவபெருமானுக்கு சாற்றி வழிபட்டால் அனைத்து செல்வங்களையும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

blue-lotus-thamarai

சிவனுக்கு வில்வ இலை எவ்வளவு முக்கியமோ! அதே அளவிற்கு நாகலிங்க பூவும் விசேஷமானதாகும். சிவபெருமானுடைய அம்சமாகவே விளங்கும் நாகலிங்கப்பூ கோவில்களில் இருந்து வீட்டிற்கு கொண்டு வந்து பூஜை அறையில் வைத்து வழிபட்டால் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் அனைத்தும் நீங்கி நல்ல ஒரு அதிர்வலைகள் உண்டாகி செல்வமானது பெருகும். மனதளவில் இருக்கும் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியான வாழ்வு அமையும் என்பது சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.