நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேற சிவபெருமானை நினைத்து இந்த வழிபாட்டை மட்டும் தவறால் செய்தால் போதும். எண்ணங்கள் யாவும் ஈடேற சிவ வழிபாடு செய்யும் முறை.

sivan-vilakku
- Advertisement -

உலகைக் காக்கும் ஈசனுக்குரிய அஷ்ட விரதங்களில் முதன்மையாக திகழ்வது சோம வார விரதம் ஆகும். இந்த சோமவார விரதத்தை நாம் முறையாக அனுஷ்டித்தால், நம்முடைய கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் சோமவார விரத முறையை பற்றியும் அதனால் நமக்கு ஏற்படக்கூடிய பலன்களைப் பற்றியும் பார்க்கப் போகிறோம்.

சோமவாரம் என்பது திங்கட்கிழமையை குறிப்பதாகும். திங்கட்கிழமை சிவபெருமானுக்குரிய கிழமையாக கருதப்படுகிறது. அன்று நாம் சிவபெருமானை நினைத்து வழிபட்டு விரதம் இருப்பதன் மூலம் நமக்கு எண்ணிலடங்கா பல நன்மைகள் கிடைக்கின்றன. சோமவார விரதம் என்றதும் அனைவரும் கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமை அன்று விரதம் இருப்பது என்று நினைப்பார்கள். ஆனால் இந்த சோமவார விரதத்தை நாம் எந்த மாதத்தில் வேண்டுமானாலும் தொடங்கலாம்.

- Advertisement -

நினைத்தது நடக்க சோமவார விரதம்:
ஏதாவது ஒரு வேண்டுதலை மனதில் நிறுத்தி தொடர்ந்து 21 திங்கட்கிழமை சோமவார விரதத்தை மேற்கொள்ளும் பொழுது நம்முடைய வேண்டுதல் நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது. திங்கட்கிழமை அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு, நம் வீட்டில் இருக்கும் பூஜை அறையில் சிவலிங்கத்தையோ அல்லது சிவபெருமானின் புகைப்படத்தையோ சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

சிவலிங்கமாக இருப்பின் அதற்கு சுத்தமான தண்ணீர் மற்றும் பசும்பாலால் அபிஷேகம் செய்ய வேண்டும். சிவபெருமானின் புகைப்படம் என்றால் கண்டிப்பான முறையில் சிவனும் பார்வதியும் சேர்ந்தார் போல் இருக்கும் புகைப்படத்தை வைத்துக் கொள்ள வேண்டும். அந்தப் புகைப்படத்தை சுத்தம் செய்து அதற்கு சந்தனம் குங்குமம் இட்டு, மலர்கள் சாற்றி, வில்வத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

- Advertisement -

அதன் பிறகு நமக்குத் தெரிந்த ஏதாவது ஒரு பதிகத்தை மனதார படிக்க வேண்டும். சிவபுராணம் தெரிந்தால் சிவபுராணத்தை கூறலாம். முழு நாளும் உபவாசம் இருந்து, மாலை நேரத்தில் விளக்கேற்றி கற்பூர தீபாராதனை காட்டிய பிறகே உணவருந்தி விரதத்தை முடிக்க வேண்டும். உடல் நலம் சரியில்லாமல் இருப்பவர்கள் எளிமையான உணவுகளை எடுத்து கொள்ளுங்கள். இவ்வாறு தொடர்ந்து 21 திங்கட்கிழமை விரதம் இருந்து ஒரே வேண்டுதலை நாம் வைப்பதன் மூலம் அந்த வேண்டுதலை சிவபெருமான் கண்டிப்பாக முறையில் நிறைவேற்றுவார்.

திருமணத்தடைகள் அகலவும், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும், கணவன் மனைவி கடைசி வரை மகிழ்ச்சியுடன் வாழவும் இந்த விரதத்தை மேற்கொண்டால் விரதம் முடிப்பதற்கு முன்பாக ஏதாவது ஒரு வயதான தம்பதிகளிடம் ஆசீர்வாதம் பெற்று தங்களால் இயன்ற ஏதாவது ஒரு தானத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும். நோய்கள் விலக வேண்டும் என்று விரதம் இருப்பவர்கள் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் இயன்ற தானத்தை வழங்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நம்முடைய பிரார்த்தனைகள் எந்த தடைகளும் இன்றி விரைவில் நிறைவேறும்.

இதையும் படிக்கலாமே: இவையெல்லாம் உங்கள் வாழ்வில் தொடர்ச்சியாக நடந்தால், பெரிய துன்பங்கள் உங்களுக்கு நேர போகிறது என்று அர்த்தம். எதிர்மறை ஆற்றல் உங்களை சூழ்ந்துள்ளதை உணர்த்தும் அறிகுறிகள்

இந்த சோமவார விரதத்தை மேற்கொள்வதால் திருமண தடைகள் அகலும். தம்பதிகளிடையே ஒற்றுமை மேலோங்கும், கடன் பிரச்சனைகள் தீரும், செல்வ செழிப்பு ஏற்படும், நோய்கள் அகலும், மனநிம்மதி கிடைப்பதோடு, சிவ பெருமானின் பரிபூரண அருள் கிட்டும். நினைத்த காரியம் நினைத்தபடி நடந்தேறும் இந்த சோமவார விரதத்தை மேற்கொள்ளலாம் என்ற தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -