தினமும் செய்யும் பூஜையில் இந்த பொருட்களை மட்டும் தவறாமல் வைத்தால், சிவன் அருளை முழுமையாக பெற்று நோய் நொடி துன்பம் இன்றி குடும்பத்துடன் வசதியாக வாழ்வது உறுதி.

sivalinga happy family
- Advertisement -

தெய்வங்களின் அருளை பெறுவதற்கு அவர்களுக்கு பிடித்தமான பொருட்களை படைப்பது வழக்கம். அவ்வாறு செய்வதன் மூலம் அந்த தெய்வங்களின் பரிபூரணமான அருளை நம்மால் பெற முடியும். இந்த பதிவில் சிவபெருமானுக்கு பிடித்த பொருட்கள் என்ன என்றும் அதனால் நமக்கு ஏற்படக்கூடிய பலன்கள் என்ன என்று ஆன்மிகம் குறித்த இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

வீட்டில் சிவபெருமானை வழிபடும் முறை
அகில உலகத்தை காத்து ரட்சிக்கும் தெய்வமாக திகழ்பவர் சிவபெருமானே. அப்படிப்பட்ட சிவபெருமானின் அருளை பெறுவதற்காக அவருக்கு மிகவும் பிடித்தமான பொருட்களை தெரிந்து கொண்டு, அதனால் ஏற்படக் கூடிய நன்மைகளை அறிந்து செயல்பட்டால் நம் வாழ்க்கையில் பல நன்மைகள் கிடைக்கும். அந்த வகையில் முதலில் சிவபெருமானுக்கு பிடித்தமான பொருளாக கருதப்படுகிறது வில்வ இலை. பல வகையான வாசனை மிகுந்த மலர்களை படைப்பதை விட வில்வ இலையை நாம் சிவபெருமானுக்கு படைப்பதால் அவர் பல மடங்கு சந்தோஷம் அடைவார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அப்படிப்பட்ட இந்த வில்வ இலையை நாம் மூன்று இலைகள் கொண்ட காம்பு இருப்பது போல் படைக்க வேண்டும். வில்வ இலை வாடினாலும் அதன் மகத்துவம் குறையாது என்பதால் ஒருமுறை படைத்த அதே வில்வ இலையை மறுநாளும் நாம் படைக்கலாம். அதில் எந்த தவறும் இல்லை. படைப்பதற்கு முன்பாக அந்த இலையை சுத்தமான தண்ணீரில் கழுவி விட்டு படைக்க வேண்டும். இவ்வாறு நாம் செய்வதன் மூலம் நம் வீட்டில் இருக்கக் கூடிய தீய சக்திகள் அனைத்தும் விலகும்.

சிவபெருமானுக்கு பிடித்த நெய்வேத்தியங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது தேன். சுத்தமான தேனை சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதால் நம் மனதில் இருக்கக் கூடிய கெட்ட எண்ணங்கள் அனைத்தும் மாறும் என்ற கருத்து நிலவுகிறது. ஒரு ஸ்பூன் தேனை சிவபெருமானுக்கு நெய்வேத்தியமாக படைப்பதன் மூலம் நம்முடைய மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்கள் நீங்கி தூய மனம் பெறுவோம். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் ஏற்படும். இந்த தேனை பூஜை முடிந்த பிறகு அனைவருக்கும் பிரசாதமாக வழங்க வேண்டும்.

- Advertisement -

மூன்றாவதாக சுத்தமான பசும்பாலால் தயாரிக்கப்படும் நெய்யை சிவபெருமானுக்கு படைத்து பூஜை செய்யலாம். பூஜை முடிந்த பிறகு இந்த நெய்யை சாப்பாட்டில் போட்டு சாப்பிடலாம். இவ்வாறு நெய்யை நெய்வேத்தியமாக படைப்பதன் மூலம் எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். நமக்கு ஏற்பட்டிருக்கும் கஷ்டங்கள் நீங்கும். நீண்ட ஆயுள் கிடைக்கும்.

நான்காவதாக காய்ச்சாத சுத்தமான பசும்பாலை சிவபெருமானுக்கு நெய்வேத்தியமாக படிக்க வேண்டும். பூஜை முடிந்த பிறகு அந்தப் பாலை அப்படியே பிரசாதமாக வழங்க வேண்டும். மாறாக அதை காய்ச்ச கூடாது. இவ்வாறு பச்சை பசும் பாலை நாம் நெய்வேத்தியமாக படைப்பதன் மூலம் நமக்கு ஏற்பட்டிருக்கும் நோய்கள் அனைத்தும் நீங்கி, தீர்க்கமான ஆயுள் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதையும் படிக்கலாமே: இந்த தெய்வத்தை மனதார வழிபட்டாலே போதும் நீங்கள் இதுவரை இழந்தவை எல்லாம் உங்கள் இல்லம் தேடி தானாகவே வந்து சேரும்.

ஐந்தாவதாக பசும்பாலில் தயாரிக்கப்படும் தயிரை நாம் சிவபெருமானுக்கு நெய்வேத்தியமாக படைக்க வேண்டும். பூஜை முடிந்த பிறகு அந்த தயிரை நாம் சாப்பிட உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இந்த தயிரை நாம் படைப்பதால் நமக்கு ஏற்பட்டிருக்கும் துரதிஷ்டம் அனைத்தும் நீங்கும். மன அமைதி கிடைக்கும். வாழ்க்கையில் நிம்மதி ஏற்படும். இந்த எளிமையான நெய்வேத்தியங்களை தினமும் நாம் சிவபெருமானுக்கு படைத்து வாழ்க்கையில் சிவபெருமானின் பரிபூரணமான அருளைப் பெற்று நல்லதொரு வாழ்வை வாழலாம்.

- Advertisement -