இந்த தெய்வத்தை மனதார வழிபட்டாலே போதும் நீங்கள் இதுவரை இழந்தவை எல்லாம் உங்கள் இல்லம் தேடி தானாகவே வந்து சேரும்.

- Advertisement -

ஒவ்வொரு பொருளையும் சேர்க்க எவ்வளவு பாடுபடுகிறோம். நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் ஒவ்வொரு பொருளும் நமக்கு பொக்கிஷமே. அப்படிப்பட்ட பொருட்கள் காணாமல் போகும் பொழுது அதனை தேடியும் கிடைக்கவில்லை என்றால் எந்த அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாவோம் என்று சொல்லவே முடியாது. எவ்வளவு காலமாக தேடியும் கிடைக்காத பொருளை இந்த தெய்வத்தை வழிபடுவதன் மூலம் கிடைக்கும். அது என்ன தெய்வம் எப்படி வழிபட வேண்டும் என்று இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இழந்தவை எல்லாம் மீண்டும் பெற:
அனைத்து சிவாலயங்களிலும் சிவன் சொத்துக்களை பாதுகாக்கும் பொறுப்பில் இருப்பவர் சண்டிகேஸ்வரர். இவருடைய உண்மையான பெயர் விசாரசர்மன். இவர் சிறுவயதிலேயே சிறந்த சிவபக்தராக கருதப்பட்டார். மண்ணை வைத்து சிவலிங்கம் செய்து, அருகில் இருக்கும் மலர்களை சிவலிங்கத்திற்கு அர்ச்சனை செய்து தியானத்தில் ஈடுபடுவார்.

- Advertisement -

அவ்வாறு அவர் தியானத்தில் ஈடுபடும் பொழுது அருகில் இருக்கும் பசுக்கள் அந்த சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்யும். ஒரு நாள் இதனைக் கண்ட அவருடைய தந்தை கோபத்தால் சிவலிங்கத்தை தன் காலால் எட்டி உதைத்தார். கோபம் கொண்ட விசாரசர்மன் அருகில் இருக்கும் குச்சியை எடுத்து தந்தையின் காலை அடித்தார். அப்பொழுது அந்த குச்சியானது கோடாரியாக மாறி தந்தையின் கால் வெட்டுப்பட்டது.

தன் மேல் இருக்கும் பக்தியை கண்டு மெய் சிலிர்த்த சிவபெருமான் விசாரசர்மன் முன்பு தோன்றி, தன்னுடைய சொத்துக்கள் அனைத்திற்கும் பொறுப்பாக இருக்க வேண்டும் என்றும், அதனை காவல் காக்க வேண்டும் என்றும் கூறினார். அன்று முதல் விசாரசர்மனுக்கு சண்டிகேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. மேலும் சிவபெருமானுக்கு செய்யக் கூடிய அனைத்து விதமான அபிஷேகங்களையும் சண்டிகேஸ்வரருக்கும் செய்யப்படும் என்று கூறினார்.

- Advertisement -

அன்று முதல் சண்டிகேஸ்வரர் அனைத்து சிவாலயங்களிலும் காவல் தெய்வமாக திகழ்கிறார். அப்படிப்பட்ட சண்டிகேஸ்வரர் முன்பு நாம் கைகளை தட்டி அல்லது சுடக்கு போட்டோ வழிபடக் கூடாது. அவ்வாறு செய்வதன் மூலம் அவருடைய தியானம் கலைந்து விடும். அதனால் நமக்கு பாவங்கள் ஏற்படும்.
சண்டிகேஸ்வரர் முன்பாக நாம் நின்று நம்முடைய கைகள் இரண்டையும் விரித்து சிவனுடைய சொத்துக்கள் எதையும் நான் எடுத்துச் செல்லவில்லை என்று காட்டி விட்டு பிறகு வீடு திரும்ப வேண்டும்.

சண்டிகேஸ்வரருக்கு ஒரு நெய் தீபம் ஏற்றி வைத்து, அவருடைய காயத்ரி மந்திரத்தை குறைந்த பட்சம் 27 முறையும் அதிகபட்சம் 108 முறையும் கூற வேண்டும். பிறகு அவருடைய 108 போற்றிகளை சொல்ல வேண்டும். இவ்வாறு கூறிய பிறகு நாம் தொலைத்த பொருட்கள் திரும்பி கிடைக்க வேண்டும் என்று மனதார அவரிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். இவ்வாறு நாம் தொடர்ந்து பதினோரு வாரங்கள் செய்து வரும் பொழுது நாம் தொலைத்த அந்த பொருட்கள் நமக்கு திரும்ப கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேற சிவபெருமானை நினைத்து இந்த வழிபாட்டை மட்டும் தவறால் செய்தால் போதும். எண்ணங்கள் யாவும் ஈடேற சிவ வழிபாடு செய்யும் முறை.

சண்டிகேஸ்வரர் நம்முடைய உடைமைகள் காணாமல் போகாமல் பார்த்துக் கொள்வார். மேலும் பாதுகாவலராகவும் திகழ்வார். அவரை வணங்குவதால் சிவனின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

- Advertisement -