ஆறு கிரக சேர்க்கையினால் நிகழவிருப்பது என்ன?

6-gragaserkkai
- Advertisement -

தற்போது பரவலாக பேசப்பட்டு வரும் 6 கிரக சேர்க்கை எதனால் நிகழவிருக்கிறது என்றும், அதனால் பாதிக்கப்படப் போகிற ராசிகள் எவை? எவை? என்பதனையும், அன்றைய தினம் என்ன செய்ய வேண்டும் என்ற வழிமுறைகளையும் இந்த பதிவில் நாம் விரிவாக காண்போம் வாருங்கள்.

இந்த பிரபஞ்சத்தில் பூமி சூரியனை சுற்றிக் கொண்டிருக்கிறது. அதுபோல் சந்திரன் பூமியை சுற்றிக் கொண்டிருக்கிறது. இந்த கிரகங்கள் இவ்வாறு சுற்றிக் கொண்டிருக்கும் பொழுது சில சமயத்தில் ஒரே நேர்கோட்டில் சந்திக்கக்கூடிய காலம் ஏற்படும். அப்போது ஒரு கிரகத்தின் நிழல் இன்னொரு கிரகத்தின் மீது பதியும். இந்த நிகழ்விற்கு பெயர் கிரகணம் என்று கூறப்படுகிறது. சூரியனுக்கும் – பூமிக்கும் ஒரே நேர்கோட்டில் சந்திரன் வரும்பொழுது சூரியன் மறைக்கப்படுகிறது அதை சூரிய கிரகணம் என்கிறோம். அதுபோல சூரியனுக்கும் – சந்திரனுக்கும் இடையே பூமி ஒரே நேர்கோட்டில் வரும் பொழுது பூமியின் நிழல் சந்திரனில் பதிவதால் சந்திரகிரகணம் நிகழ்கிறது. இதனை நாம் சந்திர கிரகணம் என்கிறோம்.

- Advertisement -

இருபத்தைந்தாம் நாள் மாலை 5 மணிக்கு மேல் தான் அமாவாசை தொடங்குகிறது. எனவே 26ஆம் நாள் அமாவாசை தினமாக கணக்கிட்டு கொள்ளப்படுகிறது. 26/12/2019 மார்கழி மாதம் பத்தாம் நாள் சூரிய கிரகணம் நிகழவிருக்கிறது. காலை 8 மணி முதல் 1.35 வரை கிரகணம் நீடிக்க உள்ளது. அன்றைய தினத்தில் மூல நட்சத்திரத்தில் தனுசு ராசியில் சூரியன், சந்திரன், கேது, குரு, சனி, புதன் முதலான ஆறு கிரகங்களின் சேர்க்கை நடக்கவிருக்கிறது. ராகுவின் பார்வையில் இந்த ஆறு கிரகங்களும் நீள்வட்டப்பாதையில் இயங்க இருப்பதால் இந்த கிரக சேர்க்கையின் தாக்கம் பூமியின் மீது விழப்போகிறது. இதனால் நுண்ணுயிர்களின் அழிவு மனிதர்களுக்கு பிரச்சனையை உண்டாக்குகிறது. மற்றபடி சுனாமி வருமோ? பேரழிவு வருமோ? என்ற அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் ஏதுமில்லை.

சூரிய கிரகணத்தின் தாக்கத்தினால் தோஷம் ஏற்படக்கூடிய நட்சத்திரக்காரர்கள் யார்? யார்? என்று இப்பொழுது பார்க்கலாம். கேட்டை, மூலம், பூராடம், மகம், அஸ்வினி இந்த ஐந்து நட்சத்திரக்காரர்களும் கிரகணத்தன்று பரிகாரம் செய்யவேண்டிய நட்சத்திரங்களாகும்.

- Advertisement -

இந்த சூரிய கிரகணம் நிகழ்வதற்கு முன்னாள் ஒரு முறை குளித்து விடுங்கள். சூரிய கிரகணம் முடியும் வரை எதுவும் சாப்பிடக்கூடாது. சமைத்த பொருட்களை மூடி வைக்க வேண்டும். வெளியில் செல்லாமல் இருப்பது நலம் தரும். சூரியகிரகண சமயத்தில் எந்த வேலையும் செய்யாமல் இறைவழிபாட்டில் கவனம் செலுத்துவது எந்த அளவிற்கு சிறப்பான பலனை பெற்றுத்தரும் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. கிரகண நேரத்தில் உச்சரிக்கப்படும் மந்திரம் சாதாரண நேரங்களில் நீங்கள் உச்சரிப்பதை விட லட்சம் மடங்கு பலன் தரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதனால்தான் அந்த நேரத்தில் இறைவனை வழிபடுவது மிகவும் அவசியமான ஒன்றாக கூறப்படுகிறது.

கிரக சேர்க்கையினால் ஏற்படும் தீமைகள்:-
இந்த கிரக சேர்க்கையினால் டிசம்பர் 25, 26, 27 அன்று பிறக்கும் குழந்தைகளின் உடல்நலனில் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதனால் அந்தப் பெற்றோர்கள் அதற்குரிய சரியான பரிகாரங்களை செய்வது அவர்களது குடும்பத்திற்கு நல்லது.

- Advertisement -

குரு – சனி இவர்கள் இருவரின் சேர்க்கை இருப்பதால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்படும். அதனால் நம் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்யாது இருப்பவர்களுக்கு பாதிப்புகள் உருவாகலாம். அதனால் அவர்கள் முறைப்படி தர்ப்பணம் செய்வது நற்பலன்களை நல்கும்.

அதுபோல் குல தெய்வ வழிபாடுகளை மேற்கொள்ளதவர்களுக்கு பாதிப்புகள் உண்டாகும். அவர்கள் தங்கள் குல தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது நன்மை தரும்.

வாயு மற்றும் நீரின் அதிபதிகளின் சேர்க்கை இருப்பதால் அவற்றின் தாக்கம் அதிகம் இருக்கும் இடத்தில் மட்டும் பிரச்சனைகள் உருவாக வாய்ப்புகள் இருக்கும்.

கிரகணத்தின் போதும் கிரகங்களின் சேர்க்கையின் போதும் பூமியின் மீது ஏற்படும் கதிர்வீச்சின் தாக்கம் கெடு பலன்களை தரவல்லது. இந்த அறிவியலின் காரணமாகத்தான் நம் முன்னோர்கள் அந்த சமயத்தில் எதையும் சாப்பிடக்கூடாது என்று கூறியுள்ளனர். அந்த கதிர்வீச்சின் தாக்கம் பூமியில் உள்ள கண்ணிற்கு புலப்படாத பல நுண்ணுயிர்களை அழிக்க வல்லது. புழு பூச்சிகளின் அழிவானது நம் மீதும், நம் வீட்டின் உள்ளும், நாம் சமைக்கும் உணவுகளிலும் படிந்து இருக்கலாம். அதனால்தான் கிரகணம் முடிந்த பின்பு குளிக்க வேண்டும் என்றும், சமைத்த பொருட்களை மூடி வைக்க வேண்டும் என்றும், எதுவும் சாப்பிடக்கூடாது என்றும் கூறுகிறார்கள்.

கிரகணம் முடிந்த பின்பு வீட்டையும் கழுவி விட்டு சுத்தம் செய்திட வேண்டும். பின்பு கடலிலோ அல்லது வீட்டில் சிறிது கல் உப்பை நீரில் போட்டு குளித்துவிட வேண்டும். பின்பு விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். அதன் பிறகு கோயிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும். இதனை பின்பற்றுவதன் மூலம் ஏராளமான நற்பலன்களை நீங்கள் பெற முடியும்.

எந்த ஒரு பிரச்சனைக்கும் பயம் தீர்வாகாது. அந்த பிரச்சனையை நமக்கு சாதகமாக பயன்படுத்துவதில் தான் நம்முடைய புத்திசாலித்தனம் இருக்கிறது. ஆகவே இந்த கிரக சேர்க்கையை பற்றி அச்சம் கொள்ளாமல் அதனை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு நற்பலன்களை அடையுங்கள்.

இதையும் படிக்கலாமே
சுண்டு விரல் சொல்லும் ரகசியம்

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Surya grahanam and 6 planet combinations. graha serkkai palangal. Surya graha palangal Tamil.

- Advertisement -