இன்ஸ்டன்ட்டாக ஒரே நாளில் முகம், கழுத்து பகுதி வெள்ளையாக வீட்டில் இருக்கக்கூடிய இந்த 3 பொருள் போதுமே!

face-white-katralai
- Advertisement -

முகம் மற்றும் கழுத்து பகுதியில் இருக்கக்கூடிய அழுக்குகள், கருமைகள் நீங்கி முகம் கண்ணாடி மாதிரி ஜொலிப்பதற்கு, வெள்ளை வெளேர் என ஆவதற்கு இன்ஸ்டன்ட் ஆக செய்யக்கூடிய ஒரு மசாஜ் ஸ்க்ரப்பர் தான் இது! இந்த பொருட்களை வைத்து மசாஜ் செய்யும் பொழுது, நல்ல ஒரு ரிசல்ட் கிடைக்கும். இன்ஸ்டன்ட் ஒயிட்னிங் பெறுவதற்கு நாம் தொடர்ந்து என்ன செய்யப் போகிறோம்? என்பதை இந்த அழகு குறிப்பு பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

சிலருக்கு அதிக அளவு வெயில் காரணமாக முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் கருமை வருகிறது. ஆனால் சிலருக்கு எங்கும் சுற்றாமலேயே கூட இந்த கருமையை உணர முடிகிறது. இத்தகையவர்கள் செய்ய வேண்டியது இது தான். இதை நீங்கள் ஒரு பத்து நிமிடம் செய்தாலே சூப்பரான ரிசல்ட் கிடைக்கும்.

- Advertisement -

முதலில் இதற்கு ஒரு கற்றாழை மடல் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். மடலை நன்கு அலசி விட்டு அதன் தோல் பகுதிகளில் முனை மற்றும் வாய் பகுதியை வெட்டிக் கொள்ளவும். நடுவில் இருக்கக்கூடிய பகுதியை இரண்டாக சரி பாதியாக கத்தியால் வெட்டிக் கொள்ளுங்கள். இப்போது ஒரு பகுதியில் இருக்கக்கூடிய ஜெல்லை கத்தியை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக அதில் கீறல் போட்டுக் கொள்ளுங்கள்.

கற்றாழை ஜெல்லை விட ஜெல்லிலிருந்து வரக்கூடிய பசை போன்ற ஒரு திரவம் தான் நம்முடைய முகத்திற்கு நல்ல ஒரு பொலிவை ஏற்படுத்துகிறது. இந்த பசை இல்லை என்றால் கற்றாழை ஜெல் பயன்படுத்தாமலேயே இருக்கலாம். இந்த கற்றாழை ஜெல்லின் பசையில் இப்பொழுது சிறிதளவு மஞ்சள் தூளை தூவிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

நீங்கள் தேர்ந்தெடுக்கும் மஞ்சள் தூள் சுத்தமானதாகவும், தரமானதாகவும் இருக்க வேண்டும். எனவே வீட்டில் அரைத்த மஞ்சள் தூள் பயன்படுத்துவது நல்லது. இதனுடன் கொஞ்சமாக வெள்ளை சர்க்கரையை தூவுங்கள். பிறகு அதை அப்படியே கொண்டு போய் முகம் மற்றும் கழுத்து, கழுத்தை சுற்றி உள்ள பகுதிகளில் எங்கெல்லாம் உங்களுக்கு கருமை இருக்கிறதோ, அங்கெல்லாம் நீங்கள் மசாஜ் செய்வது போல செய்ய வேண்டும்.

முகத்தில் மிகவும் மென்மையாக மசாஜ் செய்யுங்கள். மற்ற இடங்களில் சாதாரணமாக மசாஜ் செய்யலாம். ரொட்டேட் செய்வது போல சுற்றி சுற்றி மசாஜ் செய்யுங்கள். இப்படி செய்யும் பொழுது இறந்த செல்கள் அனைத்தும் வெளியேற ஆரம்பிக்கும். சர்க்கரையில் இருக்கக்கூடிய அந்த சொரசொரப்பு தன்மையுடன், இந்த ஜெல் சேரும் பொழுது நமக்கு எரிச்சல் ஏற்படாது. மேலும் வெண் புள்ளிகள், கரும்புள்ளிகள் ஏதேனும் இருந்தாலும் அவை வெளியில் வந்து விடும்.

இதையும் படிக்கலாமே:
முடி உதிர்வு பிரச்சனைக்கு உடனடியா ஒரு முடிவு கட்டலாமா? கையில் தொட்டாலே உங்க முடி, கையோடு வருதா? இந்த டிப்ஸ் உங்களுக்காக மட்டுமே.

மஞ்சளில் இருக்கக்கூடிய கிருமி நாசினி, பாக்டீரியா கிருமிகளை சரும துளைகளுக்குள் சென்று அடியோடு வேரறுக்கும். இதனால் முகப்பருக்கள் அல்லது கட்டிகள் எதுவும் தோன்றாமல் இருக்கும். கற்றாழை ஜெல்லின் உடைய இந்த பசை, கருமையை நீக்கி வெள்ளையான நம்முடைய இயல்பான நிறத்தை நமக்கு வெளியில் கொண்டு வருவதற்கு உதவுகிறது. ஒரு பத்து நிமிடம் இது போல மசாஜ் செய்த பிறகு, அப்படியே உலர விட்டு விடுங்கள். நன்கு உலர்ந்ததும் ஈரத் துணியை வைத்து துடைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதுபோல வாரம் ஒரு முறை செய்து பாருங்கள். நம்ம முகமா இது? என்று நீங்களே ஆச்சரியப்படுவீங்க.

- Advertisement -