கோவிலிற்குள் சென்று கதவை சாத்திய பாம்பு – வீடியோ

Snake in temple
- Advertisement -

உலகத்தில் உயிருள்ளதும் உயிரற்றதும் என எல்லாமே இறைவனின் அம்சமாகவே உள்ளது. அதுவும் “சனாதன தர்மமாகிய” இந்து மதத்தில் மனிதர்களைத் தாண்டி அநேகமாக எல்லா உயிர்களுக்குமே இறைவனின் அம்சமாகவே கருதி வழிபடக்கூடிய ஒரு நிலையை ஏற்படுத்தியிருக்கின்றனர். அதிலும் கடும் விஷம் கொண்ட, சிவ பெருமானின் விருப்பத்திற்குரிய நாகப் பாம்பை பயம் கலந்த மரியாதையுடன் இந்துக்கள் அனைவருமே வழிபடுகின்றனர். அந்த வகையில் ஒரு அபூர்வ நாகம் ஒரு கோவிலில் பல நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு தரிசனம் தந்த காணொளி இது.

- Advertisement -

இந்த காணொளி இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான “வவுனியா” மாகாணத்திலுள்ள ஒரு முருகன் கோவிலில், அங்கு வழக்கமாக வருகை புரியும் ஒரு தமிழரால் தனது கைபேசியில் பதிவு செய்யப்பட்டதாகும். இதில் மனிதர்கள் பார்வைக்கு மிக அரிதாகவே காணக்கிடைக்கும் “வெள்ளை நிற நாகப்” பாம்பொன்று அந்த முருகன் கோவிலில், முருகன் மூலவர் சிலை இருக்கும் அறையின் கதவின் மீது வேகமாக ஏறி அந்த அறைக்குள்ளே எங்கோ சென்று மறைந்தது. அந்த வெள்ளை நிற நாகம் மிக வேகமாக சென்றதால், அதன் முழு உருவத்தையும் இந்த பக்தரால் தனது கைபேசி கேமராவில் பதிவு செய்ய முடியவில்லை.

இந்த வெள்ளை நிற நாகத்தின் தரிசனம் தற்செயலானது அல்ல என்பது சில தீவிர முருக பக்தர்களின் கருத்தாக உள்ளது. ஏனெனில் இந்த காணொளி படம்பிடிக்கப்பட்ட இலங்கையில் “பௌத்த” மதத்தை பின்பற்றும் சிங்களர்கள் பெரும்பான்மையாகவும், “தமிழ் சைவ” வழிபாட்டை பின்பற்றும் தமிழர்களும் வாழ்கின்றனர். இந்த இரண்டு மதங்களுமே, வெள்ளைநிற நாகத்தை தெய்வத் தன்மை பொருந்தியதாக கருதுகின்றன. எனவே பௌத்தர்களும், சைவத் தமிழர்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற எல்லாம் வல்ல இறைவனின் விருப்பத்தை இந்நிகழ்வு உணர்த்துவதாக அந்த பக்தர்கள் கருதுகிறார்கள்.

மேலும் இந்த வெள்ளை நிற நாக தரிசனம் முருகனுக்குரிய “வைகாசி” மாதத்தில் அவரின் தந்தையான “சிவ பெருமானுக்குரிய” “பிரதோஷ’ தினத்தில் அந்த பக்தர்களுக்கு கிடைத்திருப்பது, உலகில் தமிழர்கள் எங்கிருந்தாலும், அவர்களுக்கு அந்த சிவ பெருமான் மற்றும் அவரின் மைந்தனான முருகப்பெருமானின் ஆசி எப்போதுமுண்டு என்பதை உணர்த்துகிறது. மொத்தத்தில் இந்த தெய்வீக வெள்ளை நிற நாகப்பாம்பின் தரிசனம் அந்த பக்தர்களுக்கு மெய்சிலிர்க்கும் அனுபவமாக இருந்தது.

- Advertisement -