சிவன் சிலை மீதேறி படமெடுத்து ஆடிய நாகம் வீடியோ

Lord siva statue snake

இந்து மதம் உயிரினங்களையும் தெய்வத்தின் அம்சமாக கருதுகிறது. ஒவ்வொரு தெய்வமும் ஒரு விலங்கை வாகனமாக வைத்திருப்பதை நம்மில் பலர் அறிந்திருப்போம். அதிலும் பிற உயிர்களை கொள்ளக்கூடிய விஷம் கொண்ட நாக பாம்பு சிவபெருமானின் கழுத்தை அலங்கரிக்கும் படி ஓவியங்கள் மற்றும் சிலைகளில் சித்தரிக்கப்பட்டிருக்கும். ஆனால் சிவபெருமானின் சிலை மீது உயிருள்ள ஒரு நாகம் படமெடுத்து காட்சி தந்த காணொளி தான் இது.

இந்த காணொளி தெலங்கானா மாநிலத்தில் கரீம்நகர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் பதிவு செய்யப்பட்டது. இக்காணொளியில் இங்கிருக்கும் ஒரு கோவிலின் வெளியே இருக்கும் ஒரு உயரமான சிவன் சிலை நிறுவப்பட்டுள்ளதை காணலாம். சற்று கூர்ந்து பார்த்தோமேயென்றால் சிவன் சிலையின் தலை மீது நிஜமான ஒரு நாக பாம்பு தனது படத்தை விரித்தபடி நிலைகொண்டிருப்பதை காணமுடிகிறது.

இச்செய்தியை கேள்விப்பட்ட அக்கிராம மக்களும் மற்றும் கோவிலுக்கு வந்த பல பக்தர்களும் உயிருள்ள ஒரு நாக பாம்பு சிவனின் மீது அமர்ந்திருக்கும் அந்த காட்சியை பக்தியுடன் பார்த்துக்கொண்டிருந்தனர். ஒரு சிலர் இந்த காட்சியை தங்களது செல்போனில் படமெடுத்துக்கொண்டிருந்தனர். இந்த காணொளி சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டது.

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்று ஒரு பழமொழி உண்டு. ஆனால் கடும் விஷமுள்ள நாகபாம்பு மக்களுக்கு இவ்வளவு அருகில் இருந்தும் அப்பாம்பு யாரையும் தீண்டவில்லை. பக்தர்களும் அதை துன்புறுத்தவில்லை. சிவபெருமானின் பிரியத்திற்குரிய உயிரினமான பாம்பு, அந்த சிவனுக்கு நிகரான பக்தியுடன் இந்துக்களால் வழிபடப்படுகிறது.