அடுத்தடுத்து பல முட்டைகளை கக்கிய நாகம் – வீடியோ

Snake egg

பொதுவாக பாம்புகள் என்றாலே முட்டையும் பாலும் கொடுத்து அதை தெய்வமாக வழிபடுவது நமது வழக்கம். ஆனால் நாகம் ஒன்று பல முட்டைகளை அப்படியே விழுங்கி அதை கக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது. அந்த பாம்பு அத்தனை முட்டைகளையும் உடனுக்குடன் கக்கும் காட்சி பதிவு இதோ உங்களுக்காக.

பாம்புகளில் பல விதங்கள் இருந்தாலும் நாக பாம்பு என்றால் பலருக்கும் ஒருவித அச்சம் இருக்கும். அதோடு நாக பாம்பையே நாம் தெய்வமாக வழிபடுகிறோம். நாக பாம்பை அடித்தால் கூட அதற்கு பால் ஊற்றிய பிறகு தான் நாம் அடுத்த வேலையையே செய்ய துவங்குகிறோம். அந்த அளவிற்கு ஆன்மீக ரீதியாக பாம்புகள் நமக்கு நெருக்கமாக உள்ளன.

பாம்பு புற்றை கண்டால் பால் ஊற்றுவதும் முட்டை வைப்பதும் நமது வழக்கம். ஆனால் நவீன விஞ்ஞானம் கூறுவது யாதெனில், பாம்பு பாலையும் முட்டையையும் சாப்பிடாது என்பதே. அதை மெய்ப்பிப்பது போன்ற ஒரு நிகழ்வை தான் மேலே உள்ள வீடியோவில் நாம் கண்டோம். பிறகு எதற்காக நாம் காலம் காலமாக பாம்பிற்கு முட்டையும் பாலையும் வைக்கிறோம் என்று ஆராய்ந்து பார்த்தால் அதில் ஒரு அறிவியல் அடங்கி உள்ளது.

பழங்காலத்தில் பாம்புகளின் தொல்லை அதிக அளவில் இருந்துள்ளது. இதனால் சில உயிர் பலிகளும் கூட ஏற்பட்டுள்ள. ஆனால் பாம்புகளை கொள்ளும் நோக்கம் நமது முன்னோர்களுக்கு இல்லை. ஆகையால் அதற்கு மாற்றாக பாம்புகளை ஊருக்குள் உள்ள புற்றுகளில் ஆண்ட விடமால் செய்ய பாலையும் முட்டையையும் புற்றில் ஊற்றுள்ளனர். அவை இரண்டின் கலவையால் ஏற்படும் நாற்றமானது பாம்பிற்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியதோடு அதன் இனப்பெருக்கத்தையும் இது பாதிக்க வைத்துள்ளது. அதனாலே இந்த வழக்கம் நம்மிடம் வந்துள்ளது.