சாஃப்டான சப்பாத்தி செய்ய இந்த ஒரு சின்ன டிப்ஸ் தெரிந்தாலே போதும். இதுக்கு போய் இவ்வளவு நாள் கஷ்டப்பட்டுடீங்களே!

chapathi5
- Advertisement -

நிறைய பேருக்கு கறி குழம்பு, மீன் குழம்பு வைப்பது கூட சுலபமாக இருக்கும். ஆனால், இந்த சாப்ட் சப்பாத்தி செய்வது ரொம்ப ரொம்ப கஷ்டம். எப்படி தான் சப்பாத்தி சுட்டு வைத்தாலும் அது வரட்டி போல மொரப்பாகத்தான் இருக்கும். வீட்டில் இருப்பவர்கள் அந்த சப்பாத்தியை விரும்பி சாப்பிடவே மாட்டார்கள். சாஃப்ட் சப்பாத்தி செய்ய எளிமையான குறிப்பு ஏதாவது இருக்கா. இருக்குங்க, சப்பாத்தி மாவை கஷ்டப்பட்டு பிசைந்து, ஊறவைத்து சிரமப்பட தேவையே இல்லை. எப்போதும் போல மாவை பிசைந்து சப்பாத்தி சுட்டாலும் சப்பாத்தி உப்பி சூப்பராக வரும். அது எப்படி என்பதை பற்றிய சின்ன சின்ன குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ள போகின்றோம்.

செய்முறை

ஒரு அகலமான பவுல் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 3 டம்ளர் அளவு கோதுமை மாவு போட்டுக்கொள்ள வேண்டும். கடையில் வாங்கிய கோதுமை மாவாக இருந்தாலும் சரி, வீட்டில் அரைத்த கோதுமை மாவாக இருந்தாலும் சரி, இந்த மாவுக்கு தேவையான அளவு உப்பு போட்டுக் கொள்ளவும். 3 கப் கோதுமை மாவுக்கு, 1 1/2 கப் அளவு தண்ணீர் சரியாக இருக்கும். ஒரு சில மாவுகளில் தண்ணீரின் அளவு கூட, குறைய தேவைப்படும். ஆகவே 1 1/2 கப் அளவு தண்ணீரில் கொஞ்சம் தண்ணீரை மட்டும் மிச்சம் வைத்துக் கொள்ளுங்கள். மாவை பிசைந்து பாருங்கள். இறுதியில் தண்ணீர் லேசாக தேவைப்பட்டால் மிச்சம் எடுத்து வைத்திருக்கும் தண்ணீரை தெளித்து பிசைந்து கொள்ளலாம். தவறொன்றும் கிடையாது.

- Advertisement -

இப்போது மாவு பிசைந்து தயாராக உள்ளது. இந்த மாவை எடுத்து சமையலறை மேடை மேலே போட்டு உங்கள் உள்ளங்கையின் சூடு படும் படி, அந்த மாவை இழுத்து இழுத்து தேய்த்து பிசைந்து கொள்ளுங்கள். வெறும் ஐந்து நிமிடங்கள் இப்படி தேய்த்து பிசைந்தால் போதும்.

அதன் பிறகு அந்த மாவிலிருந்து உங்களுக்கு தேவையான சைஸில் உருண்டைகளை பிடித்துக் கொள்ளுங்கள். மீண்டும் ஒவ்வொரு உருண்டைகளாக எடுத்து உங்களுடைய உள்ளங்கை சூடு படும்படி அந்தத் திண்ணையின் மேலே தேய்க்க வேண்டும். பிடித்து வைத்த உருண்டைகளை 30 செகண்ட் வரை தேய்த்தால் போதும். அதிக நேரம் எடுக்காது. ஒவ்வொரு உருண்டையாக எடுத்து உள்ளங்கை சூடு அதில் படும்படி மசாஜ் செய்து பிசைந்து உருண்டைகளை தயார் செய்து வைத்துக் கொள்ளவும். (உங்கள் உள்ளங்கை சூடு சப்பாத்தி மாவில் பட்டாலே போதும். சப்பாத்தி சூப்பராக வரும்)

- Advertisement -

பிறகு எப்போதும் போல இந்த உருண்டைகளை மாவு தொட்டு திரட்டிக் கொள்ளுங்கள். சப்பாத்திகல் நன்றாக சூடானதும் சப்பாத்தியை போட்டு ஐந்து செகண்ட் கழித்து மீண்டும் திரும்பிப் போடவும். மீண்டும் ஐந்து செகண்ட் கழித்து திருப்பி போட்டால் சப்பாத்தி அப்படியே உப்பி மேலே எழும். சப்பாத்தி வெந்து வந்தவுடன் தவாவில் இருந்து எடுத்து விடுங்கள். எண்ணெய் எதுவும் ஊற்ற வேண்டும் என்ற அவசியம் இருக்காது.

இதையும் படிக்கலாமே: 5 நிமிடத்தில் மீந்து போன சப்பாத்தியை எப்படி சுவையான கொத்து சப்பாத்தியாக மாற்றுவது? இது தெரிஞ்சா சப்பாத்தி மீந்து போனா இனி தூக்கி போடவே மாட்டீங்க!

எல்லா சப்பாத்தியையும் ஹாட் பேக்கில் போட்டு உடனடியாக மூடி விடவும். அப்போது சப்பாத்தி நீண்ட நேரம் ஆனாலும் சாப்டாக இருக்கும். சுட்டு எடுத்த பிறகு, இந்த சப்பாத்திக்கு மேலே, தேவைப்பட்டால் நெய் அல்லது எண்ணெய் தடவி பரிமாறிக் கொள்ளுங்கள். சாப்பிடும் போது இந்த நெய் எண்ணெயை தடவுங்கள். முன்கூட்டியே தடவி விட்டாலும் சப்பாத்தி சாப்பிடும் போது கொஞ்சம் மொறப்பாக தெரியும். இவ்வளவுதாங்க. சப்பாத்தியை ரொம்ப ரொம்ப சுலபமா சுடலாம். அது பெரிய கம்பு சுத்துற வேலை எல்லாம் கிடையாது. எளிமையான இந்த சமையல் குறிப்பு உங்களுக்கு பிடிச்சிருந்தா உங்க வீட்ல ஒரு முறை இப்படி சப்பாத்தி செஞ்சு பாருங்க. வீட்டில் இருப்பவர்கள் விரும்பி விரும்பி சாப்பிடுவார்கள்.

- Advertisement -