பத்து பேர் துணியைக் கூட பத்தே நிமிஷத்துல சுலபமா துவைக்க ஒரு சூப்பர் ஐடியா. இதுக்கு வாஷிங் மெஷின் தான் இருக்கணும்னு அவசியம் கூட இல்ல. வாங்க அந்த ட்ரிக்ஸ் என்னவென்று பார்ப்போம்.

washing cloth
- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் எல்லோர் வீட்டிலும் வாஷிங் மெஷின் இருக்கத் தான் செய்கிறது. இது இருந்தாலுமே கூட அதிலும் துணி துவைப்பதில் சில சிக்கல்கள் இருக்கிறது. இந்த ஒரு ஐடியா மட்டும் உங்களுக்கு தெரிஞ்சா போதும் வாஷிங் மெஷின் இருந்தாலும் இல்லை நாளும் பத்து நிமிஷத்துல எல்லா துணியும் சட்டுனு துவைச்சு எடுத்திடலாம். அது என்ன என்பதை இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

துணிகளை பொறுத்த வரையில் வெள்ளை துணிகளை தனியாக துவைக்க வேண்டும். அழுக்கு அதிகமான துணிகளை தனியாக ஊறவைத்து துவைக்க வேண்டும். சாயம் போகும் துணிகளை தனியாக இப்படி ஒவ்வொரு துணியையும் தனித்தனியாக தான் துவைக்க வேண்டி இருக்கிறது. வாஷிங் மெஷினில் துவைத்தாலும் இதே பிரச்சினை தான் கைகளில் துவைத்தாலும் இதே போலத் தனித் தனியாக தான் துவைக்க வேண்டும். இந்த வேலையை சுலபமாகத் தான் இப்போது ஒரு ஐடியாவை நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

நீங்கள் வாஷிங் மெஷினில் துணி துவைப்பதாக இருந்தால் முதலில் எல்லா துணிகளையும் மிஷினில் நன்றாக உதறி போட்டு விடுங்கள். அதன் பிறகு நீங்கள் எப்போதும் துணிகளுக்கு ஊற்றும் லிக்விட், சோப்பு பவுடர் எதுவாக இருந்தாலும் அதை போட்டுக் கொள்ளுங்கள். வாஷிங் மெஷினை பொருத்த வரையில் சோப்பு பவுடரை பயன்படுத்துவதை விட லிக்விட் பயன்படுத்தும் பொழுது மிஷின் அதிக நாட்கள் பழுதாகாமல் இருக்கும் இதை கவனத்தில் கொள்ளுங்கள்.

அடுத்ததாக ஒரு அலுமினியம் காயில் பேப்பரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 2 டேபிள் ஸ்பூன் கல் உப்பை சேர்த்துக் கொள்ளுங்கள். அத்துடனே ரெண்டு டேபிள் ஸ்பூன் கம்போர்ட்டையும் ஊற்றிய பிறகு பேப்பரை நன்றாக சுருட்டினால் இது ஒரு பால் போல உங்களுக்கு தயாராகி விடும். அதன் மேலே பின் வைத்து லேசாக சின்ன சின்ன ஓட்டைகளாக குத்தி விடுங்கள். இப்போது இந்த உருண்டையை மிஷினில் துணிகளுக்கு இடையே போட்டு விடுங்கள்.

- Advertisement -

இதன் பிறகு நீங்கள் சாதாரணமாக துணி துவைப்பது போல துவைத்து எடுத்து விடுங்கள். இப்படி போடும் போது நீங்கள் வெள்ளை துணி, அழுக்கு அதிகமான துணி என அனைத்தையும் ஒன்றாக போடலாம். இதை சேர்த்து இருப்பதால் அழுக்குகள் சுலபமாக நீங்குவதும் துணிகளில் இருந்து சாயக்கறைகள் வெளியேறாது. அதுமட்டுமின்றி துணிகளும் மிஷினில் போடுவதால் ஏற்படும் எந்த பாதிப்பும் இல்லாமல் துணி புதிது போல நீண்ட நாட்களுக்கு உழைக்கும்.

இதையும் படிக்கலாமே: பூஜை பாத்திரங்களை இப்படி மட்டும் சுத்தம் செய்து பாருங்க. இனி அடிக்கடி பூஜை பாத்திரம் தேய்க்க வேண்டுமே என்ற கவலையே வராது. ஒரு மாதம் ஆனால் கூட பூஜை பாத்திரங்கள் தகதகவென்று ஜொலிக்க அருமையான டிப்ஸ்.

நீங்கள் கைகளில் துணி துவைப்பதாக இருந்தாலும் துணியை ஊற வைக்கும் போது இந்த ஒரு உருண்டையை அதில் போட்டு ஊற வைத்து விடுங்கள். அதன் பிறகு நீங்கள் அதிக நேரம் வைத்து தேய்க்க வேண்டிய அவசியமே இருக்காது. துணியை எடுத்து லேசாக தேய்த்து அலசி போட்டு விட்டாலே போதும் துணிகள் எல்லாம் பளிச்சென்று மாறி விடும். வீட்டில் இருக்கும் பெண்கள் அனைவருக்கும் இந்த குறிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இனி துணி அதிகமாக சேர்ந்து விட்டது எப்படி துவைப்பது என்ற கவலை எல்லாம் இருக்கவே இருக்காது. எவ்வளவு துணி இருந்தாலும் சட்டுன்னு துவைத்து முடித்து விடலாம் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -