உங்களுக்கு சொந்தமான நிலத்தில் சீக்கிரமே வீடு கட்ட வேண்டுமா? அதற்கு 1 கைப்பிடி மண் போதுமே.

kuladheivam1

எலி வளையானாலும் தனி வலை வேண்டும் என்பது தான் நம்முடைய முன்னோர்களின் கூற்று. எவ்வளவு தான் ஒருவருக்கு வாழ்க்கையில் கஷ்டம் இருந்தாலும் அவருக்கு என்று சொந்தமாக சிறிய நிலம் இருந்தால் கூட, அதில் ஒரு குடிசையை கட்டிக் கொண்டு போய் நிம்மதியாக வாழலாம் என்று சொல்லுவார்கள். மூன்று வேளை சாப்பிட வெறும் கஞ்சி இருந்தாலும் போதும். ஆனால், நாம் வசிப்பதற்கு என்று சொந்தமாக ஒரு நிலம் நமக்கு இருப்பது தான் என்றைக்குமே கௌரவத்தை தேடித்தரும். வாடகை வீட்டில் இருந்து அவதிப்பட்டு வருபவர்களுக்கு தான் இந்த கஷ்டம் தெரியும்.

உங்களுக்கு சொந்தமாக நிலம் உள்ளதா? எவ்வளவுதான் முயற்சி செய்தும் அந்த நிலத்தில் வீடு கட்ட முடியவில்லையா? அப்படி இல்லை என்றால் அந்த நிலத்தில் வீடு கட்டி பாதியிலேயே நிற்கும் சூழ்நிலை உள்ளதா? அதை விரைவாக கட்டி முடிக்க வேண்டுமா? உங்களுக்காக சொல்லப்பட்டுள்ள, உங்களுக்கு சொந்தமான ஒரு கைப்பிடி மண்ணை எடுத்து குலதெய்வத்தை வேண்டி செய்யக்கூடிய பரிகாரம் தான் இது.

உங்களுடைய சொந்த நிலத்தில் வீடு கட்ட வேண்டும் என்றாலும் சரி, அல்லது நீங்கள் வீடு கட்ட தொடங்கி விட்டீர்கள், அது ஏதோ ஒரு காரணத்தால் பாதியிலேயே நிற்கின்றது எனும் பட்சத்தில், உங்களுடைய நிலத்தின் வடகிழக்கு மூளையில் இருக்கக்கூடிய பகுதியிலிருந்து ஒரு கைப்பிடி மண்ணை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த மண்ணை அந்த வீட்டின் குடும்பத் தலைவி அல்லது குடும்பத் தலைவன் தான் எடுக்க வேண்டும். இந்த பரிகாரத்தையும் அவர்களில் யாராவது ஒருவர் தான் செய்ய வேண்டும்.

உங்களுடைய நிலத்திலிருந்து எடுக்கப்பட்ட அந்த கைப்பிடி மண்ணை ஒரு மஞ்சள் துணியில் போட்டு முடிந்து உங்களுடைய வீட்டிற்கு எடுத்து வாருங்கள். அதாவது நீங்கள் வாடகை வீட்டில் வசித்து கொண்டு இருந்தாலும் சரி, அல்லது வேறு ஒரு சொந்த வீட்டில் வசித்து கொண்டிருந்தாலும் சரி, கட்டி முடிக்கப்படாத அல்லது பாதியிலேயே கட்டி நிறுத்தப்பட்ட நிலத்திலிருந்து எடுத்து வந்த அந்த மண்முடிச்சினை தற்போது வசிக்கும் பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

ஒரு நாள் இரவு முழுவதும் அது நீங்கள் வசிக்கும் வீட்டின் பூஜை அறையிலேயே இருக்கட்டும். அதன் பின்பு அதற்கு அடுத்த நாளே உங்களால் முடிந்தால் குலதெய்வ கோவிலுக்கு செல்லலாம். அப்படி இல்லை என்றால், எப்போது முடியுமோ 48 நாட்களுக்குள் உங்களது குலதெய்வ கோவிலுக்கு செல்ல வேண்டும். குலதெய்வ கோவிலுக்கு சென்று உங்களுடைய பிரச்சனை தீர வேண்டும் என்று மனதார வேண்டிக்கொள்ளுங்கள். முடிந்தால் குல தெய்வத்திற்கு அபிஷேகம் செய்வது மேலும் நல்ல பலனைக் கொடுக்கும்.

kuladheivam

குல தெய்வத்தை வழிபாடு செய்யும் போது, உங்களுடைய உள்ளங்கைகளில் உங்களது நிலத்திலிருந்து எடுக்கப்பட்ட மண் முடிச்சு கட்டாயம் இருக்க வேண்டும். அதன் பின்பு நீங்கள் வீடு திரும்பும் வழியில் ஏதாவது ஒரு ஏரி குளம் கிணறு அல்லது கடல் எந்த நீர்நிலைகள் ஆக இருந்தாலும் அதில் இந்த முறை சேர்த்துவிடுங்கள். கட்டாயம் தண்ணீரில் தான் இந்த முடிச்சு போட வேண்டும். அப்போது தான் உங்களுக்கு இருக்கக் கூடிய பிரச்சனைகள் படிப்படியாக குறைந்து சீக்கிரமே வீடு கட்டும் யோகம் கிடைக்கும்.

manjal-mudichu

குல தெய்வத்திடம் வேண்டுதல் வைக்கும்போது, மனமுருகி நம்பிக்கையோடு வேண்டுதல் வைக்கும் பட்சத்தில் நிச்சயம் உங்களுடைய நிலத்தில் இருக்கும் தோஷம் நீங்கி, உங்கள் ஜாதக கட்டத்தில் இருக்கும் தோஷம் நீங்கி சீக்கிரமே வீடு கட்டி முடிக்கும் யோகம் உங்களுக்கு கிடைக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது.

pray

வீடு கட்டி முடித்த பின்பு மீண்டும் ஒருமுறை குலதெய்வ கோவிலுக்கு சென்று வந்து, உங்களால் முடிந்த காணிக்கையை குலதெய்வ கோவிலுக்கு செலுத்திவிட்டு, அதன் பின்பு கிரகப் பிரவேசத்தை வைத்துக் கொள்வது உங்களுடைய குடும்பத்திற்கும் மேலும் சிறப்பினை தேடித்தரும் இந்த கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
எதிர்காலத்தில் வரப்போகும், எதிர்பாராத கஷ்டங்களை கூட தடுத்து நிறுத்தும் சக்தி இந்த இறைவனுக்கும், இந்த 1 பொருளுக்கும் உண்டு. அது என்ன பொருள்? அதை எப்படி வழிபாடு செய்ய வேண்டும்?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.