- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசொந்த வீட்டில் சந்தோஷமாக வாழ பரிகாரம்

சொந்த வீட்டில் சந்தோஷமாக வாழ பரிகாரம்

- Advertisement -

சில பேர் வாடகை வீட்டில் இருந்தவரை சந்தோஷமாகத்தான் இருந்திருப்பார்கள். சொந்த வீட்டிற்கு குடி பெயர்ந்த பிறகு அவர்களுடைய வாழ்க்கை சூழ்நிலையே தலைகீழாக மாறி இருக்கும். ஏன் தான் இந்த வீட்டை வாங்கினோமோ என்று சொல்லும் அளவுக்கு படாத கஷ்டங்கள் பட்டிருப்பார்கள். நன்றாக இருந்த கணவர் தீய பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பார்.

நோய் நொடி இல்லாமல் வாழ்ந்த குடும்பம் மருந்து மாத்திரையோடு இருக்கும். சொந்த பந்தங்களோடு கூடியிருந்த குடும்பம், சொந்த பந்தங்களை எல்லாம் இழந்து சண்டை சச்சரவோடு வாழும். இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் உங்களுக்கும் இருந்தால் இந்த பரிகாரத்தை பின்பற்றி பாருங்கள். நிச்சயமாக வீட்டில் இருக்கும் கஷ்டத்திற்கு ஒரு முடிவு காலம் பிறக்கும்.

- Advertisement -

சொந்த வீட்டில் நிம்மதியாக வாழ பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருள் வசம்பு, வெண்கடுகு. இரண்டையும் வாங்கி நன்றாக இடித்து தூள் செய்து கொள்ளுங்கள். சுத்தமான தண்ணீரில் இந்த பொடியை கலந்து கொள்ளவும். இந்த தண்ணீரை வைத்து வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். வியாழக்கிழமை திங்கட்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை உங்களுடைய வீட்டை எப்போது சுத்தம் செய்வீர்களோ அப்போது வீடு முழுவதும் சுத்தமாக மாப் போட்டு விடுங்கள்.

மாப்போடும் தண்ணீரில் இந்த தண்ணீரை கொஞ்சம் கலந்து கொள்ளவும். பிறகு இறுதியாக இந்த தண்ணீரை வீட்டின் மூளை முடுக்குகளில் எல்லாம் தெளித்துவிடவும். உங்களுடைய வீட்டின் வாஸ்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் விலகும். கண் திருஷ்டி விலகும். கெட்ட சக்தி விலகும். இதனால் வீட்டில் தேவையில்லாத சண்டை சச்சரவுகள் குறையும் மன நிம்மதி பிறக்கும்.

- Advertisement -

ரொம்பவும் பிரச்சினையில் சிக்கி இருந்தால் தொடர்ந்து 48 நாட்கள் இந்த தண்ணீரை வீட்டின் மூளை முடுக்குகளில் தெளித்து வாருங்கள். நிச்சயமாக உங்கள் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும். குடும்பத்தோடு ஒரு முறை வீட்டில் குலதெய்வதற்காக பூஜை செய்யுங்கள்.

அதே கையோடு குடும்பத்தோடு ஒரு முறை குலதெய்வ கோவிலுக்கும் சென்று வாருங்கள். உங்கள் கஷ்டத்திற்கு உண்டான விடிவுகாலம் பிறக்கும். மாதம் தோறும் வரக்கூடிய அமாவாசை தினத்தில் ஒரு எலுமிச்சம் பழத்தை அறுத்து ஒரு பக்கம் மஞ்சள், ஒரு பக்கம் குங்குமத்தை வைத்து நிலை வாசலில் இரண்டு பக்கமும் வைத்து வாருங்கள்.

இதையும் படிக்கலாமே: பண வரவு அதிகரிக்க சர்க்கரை பரிகாரம்

மேல் சொன்ன விஷயங்களை எல்லாம் முறையாக பின்பற்றினாலே கஷ்டங்களுக்கு விடிவுகாலம் பிறக்கும். சொந்த வீடு வாங்குவது என்பது எவ்வளவு கஷ்டமான விஷயம் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த வீட்டை வாங்கி, விற்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படாதீர்கள். ஆன்மீகம் சொன்ன இந்த எளிய வழிபாட்டை நம்பிக்கையோடு செய்யுங்கள் நல்லது நடக்கும்.

சற்று முன்