சூரசம்ஹாரம் அன்று விரதம் இருக்கும் முறை.

thirukalyanam
- Advertisement -

முருகனுக்கு உரிய விரத நாட்களில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது கந்த சஷ்டி விரதம். தீபாவளி முடிந்து வரக்கூடிய இந்த விரதம் தொடர்ந்து ஏழு நாட்கள் கடைபிடிக்க வேண்டும். உடல்நிலை காரணமாகவோ அல்லது வேலை நிமித்தமாகவோ 7 நாட்களும் விரதம் இருக்க முடியாதவர்கள் சூரசமஹார நாளில் மட்டும் எப்படி விரதம் இருந்து முருகனின் அருளை பெற வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

சூரனை வதம் செய்வதற்காக முருகப்பெருமான் நடத்திய போரே கந்தசஷ்டி விரதமாக நாம் கடைபிடிக்கிறோம். ஆறு நாட்களும் விரதம் இருக்க முடியாதவர்கள் ஆறாம் நாளான சூரசம்கார நாள் அன்று விரதம் இருப்பதன் மூலம் முருகனின் அருளை பரிபூரணமாக பெற முடியும். குழந்தை பாக்கியம் வேண்டி கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது அந்த சூழ்நிலையில் சூரசம்ஹார நாளிலும் மறுநாள் திருக்கல்யாண நாளிலும் கணவனும் மனைவியும் இணைந்து இந்த விரதத்தை மேற்கொள்ளும் பொழுது அவர்களால் முழுமையான பலனை பெற முடியும்.

- Advertisement -

சூரசம்கார நாள் அன்று காலையில் எழுந்து நீராடி விட்டு பூஜை அறையில் இருக்கும் முருகன் புகைப்படத்திற்கு சந்தனம் குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரித்து வெற்றிலை பாக்கு வாழைப்பழம் நெய்வேத்தியமாக வைத்து எந்த நோக்கத்திற்காக விரதம் இருக்கிறீர்களோ அந்த நோக்கத்தை கூறி விரதம் இருப்பதாக வழிப்பட வேண்டும். அன்று முழுவதும் நீராகாரத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு முருகனுக்கு உரிய பாடல்களையும் ஓம் சரவணபவ என்னும் மந்திரத்தையும் உச்சரித்தவாறு விரதம் இருக்க வேண்டும்.

மாலையில் சூரசம்காரம் முடிந்த பிறகு குளித்துவிட்டு பூஜை அறைக்கு வந்து ஆறு அகலில் நெய் தீபம் ஏற்ற வேண்டும். பிறகு முருகப்பெருமானுக்கு ஆறு வகையான சாதங்களை நெய்வேத்தியமாக படைக்கலாம். ஆறு வகை சாதங்கள் செய்ய இயலாதவர்கள் ஆறு வகை பழங்களை நெய்வேத்தியமாக வைக்கலாம். மேலும் சர்க்கரை பொங்கல், பால் பாயாசம் போன்றவற்றையும் நெய்வேத்தியமாக வைத்து வழிபடலாம்.

- Advertisement -

மறுநாள் திருக்கல்யாண நாளன்றும் விரதம் இருந்து முருகப்பெருமானிடம் நம்முடைய வேண்டுதலை கூறினோம் என்றால் புது மாப்பிள்ளையான முருகப்பெருமான் நம்முடைய வேண்டுதலுக்கு எந்த வித மறுப்பும் தெரிவிக்காமல் அதை நிறைவேற்றுவார். முருகனின் திருக்கல்யாண நாள் அன்றும் விரதம் இருந்து திருக்கல்யாணம் முடிந்த பிறகு முருகனுக்கு கல்யாண விருந்து சாப்பாடு நெய்வேத்தியமாக வைத்து ஓம் சரவணபவ என்னும் மந்திரத்தை 108 முறை உச்சரித்து வழிபட்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.

விருந்து சாப்பாடு செய்ய இயலாதவர்கள் தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், பால் பாயாசம் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை நெய்வேத்தியமாக படைத்து வழிபடலாம். இயன்றவர்கள் திருக்கல்யாணம் நடக்கும் முருகன் கோவிலுக்கு சென்று திருக்கல்யாணம் நடக்கும் பொழுது நம்முடைய வேண்டுதலை மனதார நினைத்து முருகனிடம் வேண்ட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: தீராத உடல் வலி மற்றும் திடீர் துன்பத்தால் அவதிப்படுபவர்கள் செய்ய வேண்டிய வழிபாடு

இப்படி செய்வதன் மூலம் முருகப்பெருமானின் பரிபூரணமான அருளை பெற்று நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ள முடியும். அதோடு மட்டுமல்லாமல் கந்த சஷ்டி விரதத்தின் பலனையும் முழுமையாக அடைய முடியும். குழந்தை பாக்கியம் மட்டுமின்றி நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய துன்பங்கள் அனைத்தையும் சம்காரம் செய்து வாழ்வில் இன்பத்தை அருள்வார் முருகப்பெருமான்.

- Advertisement -