ஒருவருடைய தகுதியை பணம் எந்த அளவுக்கு நிர்ணயிக்கிறதோ அதே அளவிற்கு தான் தங்க நகைகளும் நிர்ணயிக்கிறது. விசேஷமான நாட்களில் வெளியில் செல்லும்போது வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் எந்த அளவிற்கு தங்க நகைகளை அணிந்து கொண்டு வருகிறார்களோ அந்த அளவிற்கு அந்த குடும்பத்துக்கே மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இன்றைய காலத்தில் பலரது வாழ்க்கையில் தங்க நகையை தொட்டுப் பார்க்க கூட முடியாத அளவிற்கு பொருளாதார சிக்கலில் மாட்டிக் கொண்டு தவிக்கிறார்கள்.
எவ்வளவுதான் கஷ்டப்பட்டு பணத்தை சம்பாதித்து சிறிது சிறிதாக நகையை வாங்கி சேர்த்தாலும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் நகை அடமானக் கடைக்கு சென்று விடுகிறது. அப்படி இருப்பவர்களும் புதிதாக நகையை வாங்குவதற்கு எவ்வளவு முயற்சிகள் செய்தாலும் அந்த முயற்சிகள் எதுவுமே வெற்றி அடையவில்லை என்று புலம்புவர்களும் என்ன அபிஷேகம் செய்து தெய்வத்தை வழிபட்டால் அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
அபிஷேக முறை சொர்ண தோஷம் நீங்க
ஒருவருக்கு நகை சேரவில்லை என்றாலோ நகை அடகு கடைக்கு செல்கிறது என்றாலோ அவர்களுக்கு சுவர்ண தோஷம் இருப்பதாக பொருள்படும். அப்படிப்பட்ட ஸ்வர்ண தோஷம் ஏற்பட்டு விட்டால் அதனால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை பற்றியும் அதை நீக்குவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பொதுவாக ஒருவருக்கு ஸ்வர்ண தோஷம் ஏற்பட்டுவிட்டது என்றால் அவருக்கு தங்க நகை என்பது சேராது அல்லது நகை அடகு கடைக்கு சென்று கொண்டே இருக்கும். இப்படி அதிக அளவில் நகை சேர்க்க முடியாமல் கஷ்டப்படுபவர்களுக்கு உடல் ரீதியான சில பிரச்சினைகள் ஏற்படும். அவர்களுக்கு அதிக அளவில் கோபம் ஏற்படும். அவர்களுடைய கால் மூட்டுகளில் வீக்கம் ஏற்பட்டு இருக்கும். நரம்பு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். பல்லில் சொத்தை உண்டாகும். ஸ்வர்ண தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த உடல் உபாதைகள் கண்டிப்பான முறையில் இருக்கும்.
இதற்கு காரணம் இவர்களின் முன் ஜென்ம கர்மவினைகளே. முன் ஜென்ம கர்ம வினைகளை தீர்க்க வேண்டும் என்றால் வாயில்லாத ஜீவராசிகளிடமிருந்து ஆசிர்வாதத்தை பெற வேண்டும். அதற்கு முதலில் மாமிசம் உண்பதை முற்றிலும் நிறுத்திவிட்டு தங்களால் இயன்ற அளவு வாயில்லா ஜீவன்களுக்கு உணவுப்பொருட்களை வாங்கிக் கொடுப்பதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
இதோடு மட்டுமல்லாமல் அருகில் இருக்கக் கூடிய சாந்தரூபமிகுந்த தெய்வங்களில் யாராவது ஒருவருக்கோ அல்லது விநாயகருக்கோ ஸ்வர்ணாபிஷேகம் செய்து வழிபாடு செய்ய வேண்டும். அடகு கடையில் இருந்து திருப்பிய நகையை கொண்டு சென்று அந்த தெய்வத்திற்கு கொடுத்து ஸ்வர்ணாபிஷேகம் செய்து முடித்த பிறகு அந்த நகையை வாங்கி வந்து வீட்டில் வைப்பது மூலம் நகை திரும்பவும் அடகு கடைக்கு செல்லாமல் இருக்கும்.
சரி அடகு கடையில் இருக்கும் நகை திரும்ப செல்லாமல் இருப்பதற்கு சொர்ணாபிஷேகம் செய்யலாம். ஆனால் நகையே வாங்க முடியவில்லை என்று கவலைப்படுபவர்கள் என்ன செய்ய வேண்டும்? அவர்கள் அருகில் இருக்கக்கூடிய சாந்தரூபமான தெய்வத்திற்கு சந்தன அபிஷேகம் செய்ய வேண்டும். சந்தனம் என்பது குருபகவானுக்குரியதாக திகழ்கிறது. மேலும் சந்தனத்திற்கு குளிர்ச்சியை தரக்கூடிய தன்மையும் இருக்கிறது.
நாம் சாந்தரூபமாக இருக்கும் தெய்வத்திற்கு இப்படி குரு அம்சம் பொருந்திய குளிர்ச்சி மிகுந்த சந்தனத்தால் அபிஷேகமோ அல்லது சந்தன காப்போ செய்து வழிபடும் பொழுது அவர்களின் மனம் மகிழ்ந்து நமக்கு நகை சேர்வதற்குரிய வாய்ப்பை அருள்வார்கள். இந்த அபிஷேகத்தை முடிந்த அளவிற்கு வியாழக்கிழமை அல்லது புதன்கிழமையில் செய்வது சிறப்பு.
இதையும் படிக்கலாமே: பாவம் நீங்க தானம்
எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும் தெய்வத்தின் அருள் இருந்தால் மட்டும் தான் நம்மால் எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்ய முடியும். முழு நம்பிக்கையுடன் தெய்வத்திடம் சரணாகதி அடைந்து விட்டு நம்முடைய முயற்சிகளை நாம் செய்தோம் என்றால் கண்டிப்பான முறையில் நமக்கு ஏற்பட்டிருக்கும் ஸ்வர்ண தோஷம் நீங்கி நகை அதிகளவில் சேர ஆரம்பிக்கும்.