வீட்டில் செல்வம் சேர இந்த பொருட்களை வீட்டில் வையுங்கள்

ways to increase money in home

பொதுவாக ஒரு வீட்டிற்கு வாஸ்து என்பது மிக முக்கியமான ஒன்று. ஒரு நிலத்தில் எப்படி கட்டிடம் கட்டினால் அந்த கட்டிடத்தில் வாழ்பவர்கள் நிம்மதியோடும் மன நிறைவோடும் வாழ்வார்கள் என்ற குறிப்புகளை கொண்ட வேதம் சார்ந்த ஒரு அற்புதமான தொகுப்பே வாஸ்து. மனிதர்கள் பிரபஞ்ச அமைப்பிற்கு ஏற்றவாறு ஒழுங்குடன் வாழ வழி செய்கிறது வாஸ்து சாஸ்திரம். பொதுவாக வீடு கட்டும் முன்பே வாஸ்து பார்த்து அதற்கு ஏற்றவாறு கட்டுவது அவசியம். கட்டிய வீட்டில் வாஸ்து குறைபாடு இருந்தால் அதற்கு சில பரிகாரங்களும் உள்ளன. அதே போல ஒரு வீட்டில் எந்த பொருளை எங்கு வைத்தால் நமக்கு நன்மைகள் பெருகும் என்ற குறிப்புகளையும் வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களை வீட்டில் வைப்பதன் மூலம் வீட்டில் லட்சுமி கடாட்சம் வீசும்.

Vastu

சங்கு :

எப்போதும் 100 % வாஸ்துவுடன் வீடு கட்டுவதென்பது மிக மிக கடினம். ஆகையால் எல்லா வீடுகளிலும் சில வாஸ்து குறைபாடுகள் இருக்கவே செய்யும். அத்தகைய வாஸ்து குறைபாடுகளை போக்க உதவுகிறது சங்கு. வலம்புரி சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் வாஸ்து தோஷம் நீங்கும். அதோடு பிரதி வெள்ளிக்கிழமைகளில் துளசி தீர்த்தத்தை சங்கில் இட்டு வீடு முழுக்க தெளித்தால் அந்த வீட்டில் உள்ள சகல தோஷங்களும் விலகும். வீட்டில் சங்கு இல்லாதவர்கள் சங்கை கையில் ஏந்தியவாறு உள்ள மகா லட்சுமியின் படத்தையோ அல்லது சிலையையோ வீட்டில் வைப்பதன் பலனாக வாஸ்து தோஷம் நீங்கும்.

புல்லாங்குழல் :

Flute காற்றை தன்னுள் வாக்கில் அதை இனியதொரு இசையாய் மாற்றும் தன்மை புல்லாங்குழலுக்கு உரியது. மாதவனையே மெய் மறந்து வாசிக்க செய்யும் சக்தி புல்லாங்குழலும் உண்டு. இப்படி பல சிறப்புக்கள் பெற்ற புல்லாங்குழலை வீட்டில் வைப்பதன் மூலம் அதிஷ்டம் பெருகும், பணக்கஷ்டங்கள் நீங்கும். அதோடு வீட்டில் இருக்கும் சில வாஸ்து குறைபாடுகள் நீங்கி இதமான மனநிலை உருவாகும்.

- Advertisement -

ஒற்றைக்கண் தேங்காய் :

coconut

ஆன்மிக ரீதியாக தேங்காய்க்கு எப்போதும் ஒரு தனி சிறப்பு உண்டு. அதனாலேயே கடவுளுக்கு இதை படைக்கிறோம். அதிலும் ஒற்றைக்கண் தேங்காய்க்கு சில அற்புதமான சக்தி உண்டு. ஒரு துணியில் மஞ்சள் தடவி வீட்டின் முன் புறம் ஒற்றை கண்கொண்ட தேங்காயை கட்டி தினமும் அதை பூஜித்து வருவது நல்லது. இதன் மூலம் வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகள் குறைந்து நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். அதனால் வீட்டில் நிம்மதி பெருகும், பண வரவு அதிகரிக்கும்.

நாட்டிய கணபதி :

அதிகப்படியானை கடன் தொல்லை, பண கஷ்டம் போன்ற பிரச்சனைகள் உள்ளவர் நாட்டிய கணபதி சிலையை வீட்டில் வைப்பது சிறந்தது. வீட்டு வாசலை பார்த்தவாறு வாசலுக்கு எதிராக வீட்டிற்குள் நாட்டிய கணபதி சிலையை வைத்து தினமும் பூஜிப்பதன் பலனாக வீட்டில் பணவரவு அதிகரிக்கும்.

குபேரன் சிலை :

kubera

தற்போது பலர் சிரிக்கும் புத்தர் சிலையை குபேரன் சிலை என்று நினைத்து வழிபடுகின்றனர். ஆகையால் உண்மையான குபேரன் சிலையை கண்டறிந்து அதை வீட்டின் வடக்கு திசையை பார்த்தவாறு வைத்து வழிபடுவதன் மூலம் செல்வம் சேரும். தொழில் செய்வோர் தங்கள் தொழில் செய்யும் இடங்களிலும் குபேரன் சிலையை வைத்து வழிபடுவதன் பலனாக தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே:
குபேர பொம்மையை எங்கு வைத்தால் வீட்டில் அதிஷ்டம் பெருகும்

இது போன்ற மேலும் பல வாஸ்து சாஸ்திரம் சார்ந்த தகவல்கள், ஜோதிடம் மற்றும் ஆன்மீக தகவல்களை ஒரே இடத்தில் பெற தெய்வீகம் மொபைல் APP – ஐ டவுன்லோட் செய்யுங்கள்.