வெள்ளிக்கிழமை அன்று எந்த வீட்டில் இந்த சத்தம் அதிகமாக கேட்டுக் கொண்டே இருக்கின்றதோ அந்த வீட்டிற்குள் மகாலட்சுமி கூப்பிடாமலேயே வந்துவிடுவார்கள்.

mahalakshmi-selvam-gold-coins
- Advertisement -

மகாலட்சுமிக்கு பிடித்தமான மகாலட்சுமிக்கு சொந்தமான ஒரு பொருளைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த ஒரு பொருள், வீட்டில் இருந்தால் அந்த வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் இருக்கும். இந்த பொருள் எழுப்பக்கூடிய சத்தமானது எந்த இடத்தில் ஒலிக்கின்றதோ, அந்த இடத்தில் எல்லாம் மகாலட்சுமியின் சிரிப்பொலியும் கேட்டுக்கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட சத்தம் என்ன சத்தம். மகாலட்சுமிக்கு பிடித்த அப்பேர்ப்பட்ட அந்த ஒரு பொருள் என்னவாக இருக்கும். உங்களுக்கும் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளதா. சரி, வாங்க அது என்ன சத்தம், அது என்ன பொருள் அப்படின்னு இப்பவே தெரிஞ்சிக்கலாம்.

sozhi3

மகாலட்சுமி பிறந்த பாற்கடலில் உருவாகக்கூடிய சோழி தான் அந்தப் பொருள். சோழிகள் எழுப்பக்கூடிய சத்தம் தான் மகாலட்சுமிக்கு விருப்பமான சத்தம். அந்த காலத்தில் எல்லாம் பல்லாங்குழியில் தோழியை வைத்து பெண்கள் விளையாடுவார்கள். இந்த விளையாட்டு வீட்டிற்கு ஒரு மங்கலகரத்தை கொடுத்தது, வீட்டிற்கு ஐஸ்வர்யத்தையும் கொடுத்தது.

- Advertisement -

ஆனால் காலப்போக்கில் பல்லாங்குழி என்ற விளையாட்டே மறைந்து போய்விட்டது. அப்படியே பல்லாங்குழி விளையாடினால் கூட நிறைய பேர் அதை சோழியில் விளையாடுவது இல்லை. புளியில் இருந்து எடுக்கப்பட்ட கொட்டையில் தான் விளையாடுகிறார்கள். வீடுகளில் பல்லாங்குழி விளையாடுவது வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

sozhi

பல்லாங்குழியை எல்லாம் எங்களால் விளையாட முடியாது என்று நினைப்பவர்கள், சோழியை 11, 21 என்ற கணக்கில் வாங்கி ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். நேரம் கிடைக்கும்போது அந்த சோழிகளை கையிலெடுத்து சத்தத்தை எழுப்பலாம். முடியாதவர்கள் அந்த டப்பாவை எடுத்து எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் குலுக்கி வைத்து விடுங்கள். குறிப்பாக வெள்ளிக்கிழமையில் இந்த சோழி சத்தத்தை வீட்டில் எழுப்புவது மிக மிக நல்லது. இந்த சத்தத்திற்கு மகாலட்சுமி தேவி அழைக்காமலே வீட்டிற்குள் வருகை தருவார்கள்.

- Advertisement -

இதேபோல் வெள்ளிக்கிழமை அன்று எக்காரணத்தைக் கொண்டும் பெண்கள் அழவே கூடாது. வீட்டில் வெள்ளிக்கிழமை அன்று அழுகை சத்தம் கேட்கும் பட்சத்தில் வீட்டில் இருக்கும் மகாலட்சுமி வெளியேற்றப்படுவாள் என்பது நிதர்சனமான ஒரு உண்மை.

women8

எந்த வீட்டில் பெண்கள் வெள்ளிக்கிழமை அன்று மகிழ்ச்சியாக மகாலட்சுமி அலங்காரத்தோடு இருக்கின்றார்களோ, எந்த வீட்டில் கொலுசு சத்தம் வளையல் சத்தம் பெண்களின் சிரிப்பு சத்தம், கேட்டுக் கொண்டே இருக்கின்றதோ அந்த வீட்டில் மகாலட்சுமி நிலைத்து நிற்பாள் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -