பிரட் சாண்ட்விச், பிரட் டோஸ்ட் இவற்றைத் தவிர பிரட்டில் செய்யக்கூடிய இந்த சுவையான சில்லி பிரட்டையும் ஒரு முறை செய்து தான் பாருங்கள், அவ்வளவு அட்டகாசமாக இருக்கும்

bread
- Advertisement -

பிரட் சில்லி  என்பது பிரட், மசாலா வகைகள், ஆகியவற்றை கொண்டு செய்யப்படும் சுவையான சிற்றுண்டி.  இது காலை, மதியம், மற்றும் மாலை நேரங்களில் உணவாக பயன்படுத்திக் கொள்ளலாம்.  குழந்தைகளுக்கு மதிய உணவாக செய்து கொடுத்து அனுப்பலாம். இதனை 10 – 15 நிமிடங்களில் மிகவும்  சுலபமான முறையில் செய்யலாம்.  இதுவரை பலரும் செய்து சாப்பிடும் பிரட் டோஸ்ட், பிரட் அல்வா பிரட் சாண்ட்விச் இவற்றை விட மிகவும் அதிகமான சுவையில் இந்த பிரெட் சில்லி இருக்கும். வாருங்கள் இந்த சுவையான பிரட் சில்லியை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
பிரெட் துண்டுகள் – 8, வெண்ணை – 3 ஸ்பூன், சமையல் எண்ணெய் – 2 ஸ்பூன், சீரகம் –  1/4 ஸ்பூன், பெரிய வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 3, இஞ்சி பூண்டு விழுது – 1/2  ஸ்பூன், தக்காளி – 2, கொத்தமல்லி இலைகள் –  சிறிதளவு, குடைமிளகாய் – 1/4 கப், மஞ்சள் தூள் –  1/4 ஸ்பூன், கரம் மசாலா –  1/2 ஸ்பூன்,
மிளகாய்த்தூள் –  1 ஸ்பூன், சிகப்பு மிளகாய் தூள் –  1 ஸ்பூன், உப்பு – 1 ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
பிரட் சில்லி செய்வதற்கு 8 பிரட் துண்டுகளை எடுத்துக் கொள்ளவும். அதனை 4 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் 3 மேஜைக்கரண்டி  வெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும் .வெண்ணெய் சூடானதும் நறுக்கி வைத்துள்ள பிரட் துண்டுகளை சேர்த்து டோஸ்ட் செய்து கொள்ளவும். அதனை தனியே ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.

ஒரு கடாயில் 2 ஸ்பூன் சமையல் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். எண்ணெய் சூடானதும் 1/4 ஸ்பூன் சீரகம் சேர்த்துக் கொள்ளவும். சீரகம் பொரிந்த பிறகு 2 பெரிய வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் அதனுடன் 1/2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது  சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

- Advertisement -

பின்னர் இரண்டு தக்காளி பழங்களை சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். தக்காளி மென்மையாக வதங்கிய பிறகு, கொத்தமல்லி தழை மற்றும் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். அதனுடன் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்,  1/2  தேக்கரண்டி கரம் மசாலா,  தலா 1 கரண்டி மிளகாய் தூள் மற்றும் சிவப்பு மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளவும்.

ஓரளவு வதங்கிய பின்னர்  1/4 கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். இப்பொழுது பிரெட் துண்டுகளை சேர்த்து கலக்கவும். மசாலா நன்கு கலக்கும் வரை கிளறவும். பிறகு இறுதியாக சிறிதளவு கொத்தமல்லி தூவி அடுப்பை அனைத்து விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான சில்லி பிரட் தயாராகிவிடும்.

- Advertisement -