ஞாயிற்றுக்கிழமை நாளில் சூப்பரான ஸ்நாக்ஸ் சாப்பிட மாலை வேளையில் இந்த மசாலா முட்டை போண்டாவை செய்து கொடுங்கள். அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள்

egg
- Advertisement -

இப்போது பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் திறந்து விட்ட நேரத்தில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை அனைவரும் வெளியில் சென்றுவிட்டு, ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டுமே வீட்டில் ஒன்றாக நேரத்தைக் கழிக்கின்றனர். அன்றைய தினம் அசைவ உணவுகளை சமைத்து சாப்பிட்டும், பலகாரங்கள் செய்து சாப்பிட்டோம் வீட்டில் உள்ள அனைவரும் சந்தோஷமாக இருப்பார்கள். அவ்வாறு உங்கள் ஞாயிற்றுக் கிழமை தினத்தை மிகவும் அருமையானதாக மாற்ற சுவையாகவும், சீக்கிரமாக செய்யக்கூடியதும் மற்றும் உடம்ற்க்கு ஆரோக்கியம் கொடுக்கும் புரதச் சத்து நிறைந்த இந்த முட்டை போண்டாவை இப்படி ஒரு முறை செய்து கொடுத்து பாருங்கள். இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு சமைக்க வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

eating-1

தேவையான பொருட்கள்:
முட்டை – 5, கடலை மாவு – அரை கப், அரிசி மாவு – 2 ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன், மிளகுத் தூள் – அரை ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், மிளகாய் தூள் – ஒன்றரை ஸ்பூன், எண்ணெய் – கால் லிட்டர்.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஐந்து முட்டைகளை ஒரு பாத்திரத்தில் வைத்து, அதனுடன் மூன்று டம்ளர் தண்ணீர் சேர்த்து, அடுப்பின் மீது வைத்து நன்றாக வேகவைக்க வேண்டும். பிறகு இவற்றை வெளியே எடுத்து, முட்டைகள் நன்றாக ஆறியதும் தோல் உரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

egg

பின்னர் ஒரு சிறிய கிண்ணத்தில் அரை ஸ்பூன் மிளகாய்த் தூள், அரை ஸ்பூன் உப்பு, கால் ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் கால் ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு முட்டைகளை கத்தியை பயன்படுத்தி இரண்டு, மூன்று இடத்தில் முட்டைகளின் மீது லேசாக கீறி விட வேண்டும். பின்னர் இந்த முட்டைகளை ஒவ்வொன்றாக மசாலாவுடன் பிரட்டி எடுக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு ஒரு வாயகன்ற பாத்திரத்தில் அரை கப் கடலைமாவு, 2 ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து நன்றாக கலந்து விட்டு, இவற்றுடன் அரை ஸ்பூன் உப்பு,கால் ஸ்பூன் மிளகுத்தூள், கால் ஸ்பூன் மஞ்சள்தூள் மற்றும் ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு இவற்றுடன் லேசாக தண்ணீர் சேர்த்து கட்டிகளில்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும். மிகவும் தண்ணீராக கரைத்துக் கொள்ளாமல் பஜ்ஜி மாவு பதத்திற்கு சரியாக கலந்து கொள்ள வேண்டும்.

bonda

பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, கால் லிட்டர் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும், மசாலாவுடன் சேர்த்து பிரட்டி வைத்துள்ள முட்டைகளை ஒவ்வொன்றாக, கலந்து வைத்துள்ள பஜ்ஜி மாவில் முழுவதுமாக உருட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பொறிக்க வேண்டும். சிறிது நேரத்தில் இந்த முட்டை போண்டா சிவந்து வந்ததும் வெளியே எடுத்து ஒரு தட்டில் வைத்து பரிமாறி கொடுக்க வேண்டும்.

- Advertisement -