இந்த முட்டை மசாலா குழம்பை ஒருமுறை செய்து விட்டால் போதும், நீங்கள் சட்டி நிறைய சாதம் செய்தாலும் ஒரு பருக்கை சாதம் கூட மிச்சம் இல்லாமல் முழுவதும் காலியாகி விடும்

egg-gravy
- Advertisement -

முட்டை மசாலா ஒரு சுவையான  மற்றும் மிகவும் சுலபமான குழம்பு வகை.  இது இட்லி, தோசை, சப்பாத்தி, ரொட்டி, சாதம், சிக்கன் பிரியாணி, வெஜிடபிள் பிரியாணி, சீரக சாதம், ஆகியவற்றுடன் மிகவும் சுவையாக இருக்கும்.  முட்டை குழம்பு சுவையுடன் கூடிய ஆரோக்கியம் மிகுந்த உணவு வகை. இந்த குழம்பில் முட்டை தவிர உருளைக்கிழங்கு, கேரட், பட்டாணி, காலிஃப்ளவர் போன்ற காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம், அல்லது சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய பன்னீர் சேர்த்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
ஏலக்காய் – 3, லவங்கம் – 2, சிறிய துண்டு பட்டை – 1, பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 2, கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு, மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், மல்லித்தூள் – 1 ஸ்பூன், கரம் மசாலா தூள் – 1/2 ஸ்பூன், மிளகாய் தூள் – 1 1/2 ஸ்பூன், சிவப்பு மிளகாய் தூள் – 1ஸ்பூன், தக்காளி – 2, துருவிய தேங்காய் – 1/4 கப், இஞ்சி பூண்டு விழுது – 1ஸ்பூன், உப்பு – 1 ஸ்பூன்,

- Advertisement -

செய்முறை:
முட்டையை வேக வைக்க, பாத்திரத்தில் தேவையான அளவு முட்டைகளைச் சேர்த்து மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றவும். அதனை அடுப்பில் வைத்து சூடாக்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் பாத்திரத்தை மூடி வைத்து அடுப்பை அணைத்து விடவும் 10 – 12 நிமிடங்களுக்கு விட்டுவிடவும் பின்னர் தோலுரித்து பயன்படுத்த பயன்படுத்த வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும், 1 தேக்கரண்டி மிளகாய் தூள், 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.பின்னர் 5 முட்டைகளை பாதியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.முட்டைகளின் 2 பக்கமும் 1-2 நிமிடங்களுக்கு பிரட்டி எடுத்து தனியே வைக்கவும்.

- Advertisement -

ஒரு கடாயில் 3 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் 3 ஏலக்காய்,  3 லவங்கம்,  1 சிறிய துண்டு பட்டை, ஆகியவற்றை சேர்க்கவும்.அதனுடன் 1 பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். வெங்காயம் ஓரளவு வதங்கிய பிறகு, 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, 2 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள், ஆகியவற்றை சேர்த்து இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இப்பொழுது தேவையான அளவு உப்பு,  1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், 1 ஸ்பூன் மல்லித்தூள், 1/2 ஸ்பூன் கரம் மசாலா, 1.5 ஸ்பூன் மிளகாய் தூள், 1 ஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.அதனுடன் 2 தக்காளி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

தக்காளி மென்மையாக வெந்த பிறகு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து 2-3 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து, அதன் பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் 1/4 கப் துருவிய தேங்காய் சேர்த்து, அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். இப்பொழுது தேங்காய் விழுது சேர்த்து 2-3 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும். பிறகு இறுதியாக வறுத்து வைத்துள்ள முட்டைகளை சேர்த்து சிறிதளவு கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து விட்டால் சுவையான முட்டை குழம்பு தயாராகிவிடும்.

- Advertisement -