- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்அட! இவ்வளவு நாள் இது நமக்குத் தெரியாமல் போயிற்றே என்று நீங்கள் அசந்து போகும் அளவிற்கு...

அட! இவ்வளவு நாள் இது நமக்குத் தெரியாமல் போயிற்றே என்று நீங்கள் அசந்து போகும் அளவிற்கு சப்பாத்திக்கு ஏற்ற ஒரு சுவையான சைடிஷ்

- Advertisement -

சப்பாத்தி, பூரி என்றால் வழக்கமாக அனைவரும் செய்வது உருளைக்கிழங்கு மசாலா அல்லது சென்னா மசாலா தான். அதிலும் ஒரு சிலர் அவசர நேரத்திற்கு சட்னி, தக்காளி தொக்கு போன்றவற்றையும் சைட் டிஷ்ஷாக சேர்த்துக் கொள்கின்றனர். என்ன தான் வேறு விதமான டிஷ்களை தொட்டுக்கொண்டு சாப்பிட்டாலும் பூரி மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற சரியான ஒரு டிஷ் இருந்தால் மட்டும் தான் அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். அதிலும் குழந்தைகளுக்கு பூரி, சப்பாத்தி என்றால் அலாதி இன்பமாக இருக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் சுவை புளிப்பு, காரம், இனிப்பு என மூன்று சுவைகளும் பக்குவமாக சேர்க்கப்பட்ட இந்த பச்சை மிளகாய் கிரேவியை ஒரு முறை செய்து பாருங்கள். நீங்களே அசந்து போகும் அளவிற்க்கு சப்பாத்தி, பூரிக்கு ஏற்ற ஒரு டிஷ்ஷாக இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
பச்சை மிளகாய் – 150 கிராம், எண்ணெய் – 150 கிராம், புளித்த தயிர் – ஒரு கப், வெல்லம் – 2 ஸ்பூன், வெங்காயம் – 2, கறிவேப்பிலை – ஒரு கொத்து, இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன், காஷ்மீரி சில்லி பவுடர் – அரை ஸ்பூன், கரம் மசாலா தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒன்றரை ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சோம்பு – அரை ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் 150 கிராம் பச்சை மிளகாயைக் காம்பு கிள்ளி, சுத்தமாக கழுவிக் கொண்டு, ஒரு கிண்ணத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும். காரம் அதிகமாக விரும்புவார்கள் பச்சை மிளகாயை இரண்டாக கீறி சேர்த்துக் கொள்ளலாம். அல்லது மிதமான காரம் வேண்டும் என்பவர்கள் பச்சை மிளகாயை கீறி அதில் உள்ள விதைகளை மட்டும் நீக்கி விட்டு சேர்க்கலாம்.

அல்லது குழந்தைகளுக்கு ஏற்ற காரம் இருந்தால் போதும் என்று நினைப்பவர்கள் இந்த பச்சை மிளகாயை டூத் பிக் வைத்து சிறு சிறு ஓட்டை போட்டு சேர்த்துக் கொள்ளலாம். பிறகு இதனுடன் ஒரு கப் புளித்த தயிர் மற்றும் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து 15 நிமிடம் நன்றாக ஊற வைக்க வேண்டும். பின்னர் வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு அடுப்பை பற்ற வைத்து, ஒரு கடாயை வைத்து, எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு மற்றும் சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

பிறகு இவற்றுடன் காஷ்மீரி சில்லி பவுடர், உப்பு மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு ஊற வைத்துள்ள பச்சை மிளகாயை இதனுடன் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இவை அனைத்தும் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை சிம்மில் வைத்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பிறகு இறுதியாக இரண்டு ஸ்பூன் வெல்லம் சேர்த்து கலந்து விட்டால் போதும். சுவையான சில்லி கிரேவி தயாராகிவிடும்.

சற்று முன்