மதியம் லஞ்ச் பாக்ஸிற்க்கு இந்த சுவையான புலாவ் ரெசிபியை செய்து கட்டிக் கொடுங்கள். வீட்டிற்கு திரும்பி வரும்பொழுது லஞ்ச் பாக்ஸில் ஒரு பருக்கை சாதம் கூட மிஞ்சாது

veg-biriyani
- Advertisement -

காலையில் வேலைக்கு புறப்படும் பெண்கள் தங்களுக்கும், தங்கள் குழந்தைகளுக்கும் மதிய உணவை தயார் செய்ய அவசர அவசரமாக வேலை செய்து கொண்டிருப்பார்கள். இந்த அவசர வேலையில் காலை உணவு மற்றும் மதிய உணவிற்காக சாதம், குழம்பு, பொரியல் என்று அனைத்தையும் செய்ய வேண்டி இருக்கும். ஒரு சில நேரங்களில் இவற்றில் என்ன செய்வது என்பதை யோசிப்பதற்கே குழப்பமாக இருக்கும். அப்பொழுது வீட்டில் காய்கறி மட்டும் இருந்தால் போதும். அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த வெஜிடபிள் பிரியாணியை மிகவும் சிம்பிளாக செய்துவிடலாம். நீங்கள் குழம்பு, பொரியல், சாதம் என்று தனித்தனியாக செய்வதை விட இதனை செய்வதற்கு நேரமும் குறைவுதான் வேலையும் குறைவாகதான் இருக்கும். அதிலும் இதனை நீங்கள் லஞ்ச் பாக்சில் கொடுத்து அனுப்பினால் மதியம் சாப்பிடுவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். வாருங்கள் இந்த சுவையான வெஜிடபிள் பிரியாணியை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
பிரியாணி அரிசி – 2 டம்ளர், கேரட் – 2, உருளைக்கிழங்கு – 2, வெங்காயம் – 3, தக்காளி – 2, இஞ்சி பூண்டு விழுது – ஒன்றரை ஸ்பூன், பீன்ஸ் – 50 கிராம், முந்திரி – 10, சோம்பு – ஒரு ஸ்பூன், பட்டை சிறிய துண்டு – 1, ஏலக்காய் – 2, ஜாதிப்பத்திரி – 1, கிராம்பு – 2, பிரியாணி இலை – 2, எண்ணெய் – 5 ஸ்பூன், நெய் – ஒரு ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 100 கிராம், கொத்தமல்லி – ஒரு கைப்பிடி, புதினா – ஒரு கைப்பிடி.

- Advertisement -

செய்முறை:
முதலில் 2 டம்ளர் பிரியாணி அரிசியை ஒரு கிண்ணத்தில் சேர்த்து சுத்தமாக கழுவி தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவேண்டும் பின்னர் வெங்காயம் தக்காளியை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவேண்டும் பின்னர் கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு போன்றவற்றை பொடியாக நறுக்கிக் வைக்க வேண்டும்.

பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் சோம்பு, பட்டை, பிரியாணி இலை, கிராம்பு, ஜாதிபத்ரி மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொண்டு, நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் இவற்றுடன் நறுக்கி வைத்துள்ள காய்கறி மற்றும் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். இவற்றுடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து விடவேண்டும். பிறகு இவற்றுடன் கொத்தமல்லி மற்றும் புதினா தழை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். காய்கறிகள் நன்றாக வதங்கிய பின்னர் இவற்றுடன் முக்கால் ஸ்பூன் தனி மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து விட வேண்டும்.

பிறகு இவற்றுடன் அரிசியை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். பின்னர் இரண்டு டம்ளர் அரிசிக்கு 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி கலந்து விட வேண்டும். இந்த நேரத்தில் உப்பு சரியாக உள்ளதா என்று பார்த்துக் கொண்டு, இறுதியாக ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து விட்டு, மூடி போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும். குக்கரில் பிரஷர் வந்ததும் விசில் போட்டு, அடுப்பை சிம்மில் வைத்து ஏழு நிமிடத்திற்கு பிறகு அனைத்துவிட வேண்டும். அவ்வளவுதான் சுவையான வெஜிடபிள் பிரியாணி தயாராகிவிடும்

- Advertisement -