முன்னோர்களால் ஏற்படக்கூடிய தோஷம் முதல் பலவகையான தோஷங்கள் தீர இதை எல்லாம் செய்தாலே போதும்

pasu
- Advertisement -

இந்த உலகில் இருக்கின்ற எத்தனையோ வகையான விலங்குகளில் ஒரு சில விலங்குகள் மட்டும் மனிதனுக்கு பலவகைகளில் பயனளிக்கின்றன. அதில் இன்றியமையாத ஒரு விலங்காக மாடுகள் இருக்கின்றன. எருதுகள் விவசாயம் மற்றும் வண்டி இழுக்க பயன்படுகின்றது. அதே நேரம் நமக்கு அருந்துவதற்கு பால் சுரக்கின்ற பசுமாடுகள் தெய்வங்களுக்கு நிகராக போற்றப்படுகின்றன. அந்தவகையில் பண்டைய சாஸ்திரங்களில் பசு மாடுகளுக்கு நாம் என்னென்ன செய்தால் எத்தகைய பலன்களை பெறலாம் என கூறப்பட்டுள்ள சில செயல்களை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

முன்னோர்களுக்கு பித்ரு காரியங்களை செய்யாமல் விடுதல், பிற மனிதர்களை அழிப்பதால் ஏற்படும் “பிரம்மஹத்தி” தோஷம், பொருட்களை திருடுதல் போன்ற செயல்களை நம் முன்னோர்கள் செய்திருந்தால் அதற்கான கர்ம வினைகளை நாம் அனுபவிக்க வேண்டி வரும். மேற்சொன்ன தோஷங்கள் நீங்கி நற்பலன்கள் உண்டாக, ஏதாவது ஒரு பசு மாட்டிற்கு 16 கட்டு அகத்திக்கீரை கொடுப்பதால் மேற்சொன்ன தோஷங்கள் விலகி நன்மைகள் ஏற்படும்.

- Advertisement -

பசுமாட்டை நாம் ஒரு முறை வலம் வந்து வழிபட்டால் இந்த பூமியை ஒரு முறை வலம் வந்து வழிபட்ட புண்ணிய பலன் கிடைக்கும் என சாஸ்திரம் கூறுகிறது. மேலும் பசுமாட்டை தினந்தோறும் பூஜிப்பவர்களுக்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள் அருட்கடாட்சம் முழுமையாக கிடைக்கின்றது.

மாடுகள் உண்பதற்கு பச்சை புற்களை கொடுத்தாலும், பசு மாடுகளின் கழுத்து பகுதியை தடவி விடுவதாலும் நாம் செய்த கொடிய பாவங்களுக்கான கர்மபலன் குறையும் எனவும் சாஸ்திரம் கூறுகிறது.

- Advertisement -

பசுமாடுகள் நடக்கின்ற பொழுது ஏற்படுகின்ற புழுதி நம் உடலில் படுவது 8 வகையான புண்ணிய ஸ்னாநங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. எனவே தான் மிகப் பழங்காலத்தில் மன்னர்கள் பசுமாடுகளின் கால் பட்ட தூசியை புனிதமானதாகக் கருதி, தங்கள் மீது பூசிக் கொள்ளும் வழக்கத்தை கொண்டிருந்தனர் என கூறப்படுகின்றது.

ஓரிடத்தில் பசுமாடு “மா”என கத்தம் பொழுது அந்த இடத்தில், மங்கலமான அதிர்வலைகள் ஏற்படுவதாக முன்னோர்கள் கருதியுள்ளனர். கோயில்களில் இருக்கின்ற கோசாலைகள் அருகில் அமர்ந்து மந்திர ஜபம் செய்தாலோ அல்லது தான, தர்ம காரியங்களில் ஈடுபட்டாலும் 100 மடங்கு புண்ணிய பலனை தரும் என சாஸ்திரங்கள் அறிவுறுத்துகின்றன.

பொதுவாக பசு மாடுகள் அதிகம் வசிக்கும் ஒரு பகுதியில் தீய சக்திகள் நெருங்காது. எதிர்பாராத துர்சம்பவங்கள் நிகழாது என கூறப்படுகின்றது.

ஒரு மனிதன் இறந்த பிறகு அவனது உயிர் எமலோகத்திற்கு அழைத்து செல்லப்படுகின்ற பொழுது, ஜீவன் அசிபத்திரம் வனம் எனும் இடத்தில் மலம், சிறுநீர், சளி, சுடுநீர் ஆகியவைகளின் கலவையாக இருக்கின்ற வைதாரண நதியை கடக்க முடியாமல் போகின்றது எனவும், அதே நேரம் பூலோகத்தில் வாழ்ந்த சமயத்தில் அந்த உயிர் பசு தானம் செய்திருப்பின், அவரின் உயிர் இந்த வைதாரண நதியை கடக்க முயற்சிக்கும் பொழுது, அவர் தானம் செய்த பசுமாடு அங்கு தோன்றும் எனவும், அதன் வாலைப் பிடித்துக் கொண்டே அந்த உயிர் இந்த வைதாரண நதியை கடந்து எமலோகம் சென்று சேரும் என கருட புராணம் கூறுகின்றது.

- Advertisement -