காலை, மாலை இந்தப் பாடல்கள் கேட்கும் வீட்டில் கஷ்டம் என்பதே எப்போதும் வராதாம்! அது எப்படி? என்ன பாடல் அது என்று நீங்களும் தெரிஞ்சிக்கணுமா?

perumal-lakshmi

தினமும் வீடுகளில் விளக்கேற்றி வைப்பது, இறைவன் பாடல்களை கேட்பது சுபீட்சத்தை கொடுக்கும். இறைவனுடைய திருநாமங்களை உச்சரிக்கும் பொழுது அந்த இடத்தில் நல்ல அதிர்வலைகள் உருவாகும். அப்படி இருக்க தினசரி வீடுகளில் இப்பாடல்கள் கேட்கும் பொழுது எந்த அளவிற்கு நல்ல விஷயங்கள் நடைபெறும் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். ஒருவருடைய மனதில் நேர்மறை எண்ணங்கள் எளதாக குடி கொள்வதற்கு நல்ல ஒரு வழியாக இருப்பது இந்த விஷயங்கள் தான். ஒருவருடைய வீட்டில் தினமும் காலையிலும், மாலையிலும் இந்த பாடலைக் கேட்கும் பொழுது அந்த வீட்டில் எந்த கஷ்டமும் வராது என்று கூறப்படுகிறது. அப்படியான பாடல்கள் என்ன? ஏன்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

mahalakshmi3

ஒருவருடைய இல்லத்தில் மகாலட்சுமியை வரவழைக்க அந்த இல்லம் சுத்தமாகவும், நறுமணமும் மிக்கதாகவும் இருக்க வேண்டும் என்பது நியதி. இப்படி இருக்கும் வீட்டில் தான் மகாலட்சுமி நிரந்தரமாக குடி இருப்பாள். காலையில் எழுந்ததும் வாசலில் கூட்டி பெருக்கி, தண்ணீர் தெளித்து கோலம் இடும் பொழுது தான் மகா லட்சுமி அவர்கள் வீட்டிற்குள் நுழைகிறாள் என்று சாஸ்திரம் கூறுகிறது. உள்ளே வருகின்ற மகாலட்சுமிக்கு இந்த பாடலின் ஒலி கேட்கும் பொழுது அங்கேயே நிரந்தரமாக தங்கி விடுவாளாம்.

திருமகளின் மணாளனாகிய வெங்கடேச பெருமாள் உடைய புகழை போற்றி பாடப்படும் சுப்ரபாதம் தான் அந்த பாடல் ஆகும். வைணவ திருத்தலங்களில் காலையில் எழுந்ததும் சுப்ரபாதம் ஒலிப்பது அனைவரும் அறிந்தது தான். அதே போல பலருடைய வீடுகளிலும் காலையில் எழுந்ததும் சுப்ரபாதம் ஒலிக்கும். வெங்கடேச பெருமாள் உடைய சுப்ரபாதம் ஒலிக்கும் வீடுகளில் திருமகள் தானாகவே வந்து சேர்ந்து விடுவாள் என்கிற காரணத்தினால் தான் இவ்வாறு ஒலிக்கப்படுகிறது.

perumal1

புதிதாக வரும் மணமகள் காலையில் எழுந்ததும் குளித்து முழுகி பூஜையறையில் விளக்கேற்றி சுப்பிரபாதம் தன் திருநாவால் பாடும் பொழுது அந்த வீட்டில் செல்வ வளத்திற்கு என்றுமே குறைவிருக்காது. அள்ள அள்ள குறையாத செல்வமும், செல்வாக்கும் மிகுந்த இல்லமாக அந்த இல்லம் மாறும். ஆனால் இப்போதெல்லாம் இவற்றை யாரும் பின்பற்றுவது கிடையாது. அதே போல வேண்டிய வரங்களை பெறவும், ஐயம் இல்லாத பகைவர்களை எதிர்த்து நிற்கக்கூடிய தைரியமுள்ள ஆற்றல் பெறவும், ஹனுமன் அருள் வேண்டும்.

ராமனுடைய திருமந்திரத்தை உச்சரித்தாலே போதும்! ஹனுமன் தானாகவே அங்கு வந்து சேர்ந்து விடுகிறார். எனவே ஒருவருடைய வீட்டில் மாலை வேளையில் விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒலித்தால் விஷ்ணுவின் அருளும், அனுமனின் அருளும் ஒரு சேர கிடைக்கும். விஷ்ணு சஹஸ்ரநாமம் படிப்பவர்கள் உடைய மனத்தில் எவ்விதமான தீய எண்ணங்களும் ஆட் கொள்வதில்லை. அவர்களுடைய பாவங்கள் அனைத்தும் நீங்கி புண்ணிய கணக்குகள் பெருகும் என்பது நம்பிக்கை.

hanuman-heart

எனவே காலையில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலையில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிக்கும் இல்லத்தில் அனைத்து தோஷங்களும் நீங்கி, சுபீட்சம் பெருகும். அவர்கள் வேண்டியது வேண்டியபடி கிடைக்கும். வறுமை இன்றி ஒவ்வொரு சந்ததியினரும் தன, தானியத்தோடு, செல்வாக்கோடு, மதிப்பும் மரியாதையும் பெற்று சிறப்புற்று வாழ்வார்கள். விஷ்ணுவின் அருளாசி பரிபூரணமாக கிடைக்க பெற்றவர்களுக்கு எத்தகைய கஷ்டங்களும், துன்பங்களும் ஒருபொழுதும் நேர்வதில்லை. எனவே இந்த இரண்டு பாடல்களை தவறாமல் உங்கள் வீடுகளில் ஒலிக்க செய்து நேர்மறை ஆற்றல்களை பெருக்கி சுபீட்சம் பெறலாம்.