- Advertisement -

சரஸ்வதி தேவி மந்திரம்

- Advertisement -

திறமை என்பது எல்லா பிள்ளைகளுக்கும் ஒரே மாதிரி இருக்காது. ஒரு வகுப்பில் படிக்கும் அத்தனை மாணவர்களும் முதல் ரேங்க் எடுப்பது சாத்தியமில்லை. அவர் அவருடைய அறிவிப்பு திறனுக்கு ஏற்ப தான் அவரவருக்கு கல்வி செல்வம் என்பது கிடைக்கும். அதனால் அடுத்த பிள்ளைகளை ஒப்பிட்டு, தன்னுடைய பிள்ளைகளும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்க வேண்டும் என்று சொல்லி அவர்களை படிப்பில் போட்டு திணிக்காதீர்கள்.

அவர்களுக்கு படிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தை தூண்டி விடுங்கள். படித்தால் தான் எதிர்காலத்தில் நன்றாக இருக்க முடியும் என்பதை அவர்களுக்கு புரிய வைத்தாலே போதும் படிப்பில் தானாக ஆர்வம் வந்துவிடும். சுட்டு போட்டாலும் படிப்பில் ஆர்வம் வரவில்லை என்றால் படிப்போடு சேர்த்து அவர்களுக்கு விருப்பமான விஷயங்களை கற்றுக் கொடுங்கள் சரஸ்வதி என்பது வெறும் புத்தகத்தில் மட்டுமல்ல.

- Advertisement -

இந்த பூமியில் இருக்கும் அத்தனை கலைகளுக்கும் சரஸ்வதி தேவி தான் மூலாதாரம். உங்களுடைய பிள்ளைகளும் கல்வியில் சிறந்த விளங்க வேண்டும் என்று நினைத்தால், இன்றைய தினம் நவராத்திரியின் நிறைவு நாளான விஜயதசமி தினதில், அவர்களை சிறிது நேரமாவது புத்தகத்தை எடுத்து படிக்க சொல்ல வேண்டும்.

புதுசா படிப்பை துவங்குவதற்கு பள்ளிக்கூடங்களில் இன்று அட்மிஷன் நடைபெறும். சரஸ்வதி தேவியை நினைத்து நேற்று பூஜை அறையில் வைத்த புத்தகங்களை எடுத்து மாணவர்கள் கட்டாயம் இன்றைய தினம் ஐந்து நிமிடமாவது படிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த விஜயதசமி நன்னாளில் மாணவர்கள் படித்தால் இந்த வருடம் முழுவதும் அவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வம் அதிகரிக்கும். படிப்பில் அவர்கள் சிறந்து விளங்குவார்கள். அந்த கலை மகளின் அருட்கடாட்சம் பிள்ளைகளுக்கு கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.

சரஸ்வதி மந்திரம்

ஒரு வெள்ளை காகிதத்தை எடுத்து அந்த காகிதத்தில் நான்கு பக்கத்திலும் மஞ்சள் தடவி சரஸ்வதி தேவியின் இந்த மந்திரத்தை உங்களுடைய பிள்ளைகளை 11 முறை எழுதச் சொல்லுங்கள். ‘ஓம் ஆத்ம வித்யா பிரம்ம சரஸ்வதி’. உங்களுடைய பிள்ளைகள் ரொம்பவும் சின்ன பிள்ளைகள் இந்த எழுத்துக்களை அவர்களால் எழுத முடியாது என்றால் நீங்கள் சொல்ல சொல்ல, இந்த மந்திரத்தை அவர்கள் மீண்டும் உச்சரிக்கலாம். 11 முறை இந்த மந்திரத்தை இன்று படிக்கும் பிள்ளைகள், உச்சரித்தால் அவர்களுடைய நாவில் சரஸ்வதி வந்து அமர்ந்து கொள்வாள்.

- Advertisement -

உங்களுடைய பிள்ளைக்கு ரொம்பவும் சிறு வயது. இரண்டு வயது தான் ஆகிறது, ஒரு வயது தான் ஆகிறது  ஆனால் பெற்றவர்களுக்கு பெரிய கனவு இருக்கிறது. இந்த குழந்தை எதிர்காலத்தில் படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என்று. நாங்கள் என்ன செய்வது. பெற்றவர்கள் இந்த மந்திரத்தை பிள்ளைகளுடைய காதில் மெதுவாக சொல்ல வேண்டும்.

இதையும் படிக்கலாமே: பணவரவு அதிகரிக்க விஜயதசமி பரிகாரம்

குழந்தைகள் இந்த மந்திரத்தை காதால் கேட்டாலே அவர்களுக்கு சரஸ்வதியின் அருள் ஆசி கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். அதி அற்புதம் வாய்ந்த இந்த விஜயதசமி நாளில் இந்த எளிமையான மந்திரம் அனைவருக்கும் பயனுள்ளபடி அமையும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்