மனம் கலங்காமல் மனோபலத்தோடு இருக்க, வெற்றியை வசப்படுத்த மந்திரம்

hanuman-and-perumal-1

வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்காத மனிதர்கள் அநேகமாக இந்த உலகில் இல்லை என்றே கூறலாம். அதே நேரத்தில் அந்த பிரச்சனைகளை சவாலாக ஏற்று அதை வென்று காட்டும் மனதிடம் பெரும்பாலானோரிடம் இல்லை. ஒரு சிலர் இப்பிரச்னைகளால் அவதிப்பட்டு சில விபரீத முடிவுகளை எடுத்து விடுகின்றனர். இப்படிப்பட்ட மனநிலை கொண்டவர்கள் மனோதிடத்துக்கு உதாரண புருஷரான “ஸ்ரீ ராமரை” போற்றும் இம் மந்திரம் அதை கூற வேண்டும்.

ramayanam

ஸ்ரீ ராமர் மந்திரம்:

ஸ்ரீ ராம் ஜெய ராம் சுந்தர ராம்

இம்மந்திரத்தை வாரத்தின் எல்லா நாளும் கூறி “ஸ்ரீ ராமரை” வழிபடலாம் என்றாலும், சனிக்கிழமைகளில் வழிபடுவது சிறப்பானதாகும். இந்நாளில் குளித்து முடித்த பின்பு, அருகிலுள்ள ஸ்ரீ ராமரின் கோவிலுக்கோ அல்லது பெருமாள் கோவிலுள்ள ஸ்ரீ ராமரின் சந்நிதியில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, இம்மந்திரத்தை 108 முறையோ அல்லது 1008 முறையோ கூறி வழிபடுவதால் மிகுந்த மனோபலம் மற்றும் எந்த ஒரு சூழ்நிலையிலும் மனம் கலங்காமல் வாழ்க்கையை எதிர் கொள்ளும் பலத்தை ஸ்ரீ ராமர் வழங்குவார். மேலும் இம்மந்திரத்தில் “சுந்தர” என்ற வார்த்தை ஸ்ரீ ஆஞ்சநேயரை குறிப்பதால் சனி பகவானின் கெடுபலன்களை நீக்கும்.

அதே போல ஸ்ரீ ராம ஜெயம் என்னும் ராம மந்திரத்தை எழுதுவோருக்கு தங்கள் செய்யும் அனைத்திலும் வெற்றி உண்டாகும். ஸ்ரீ ராம ஜெயம் மந்திரத்தை சொன்னாலும் அதே பலன் உண்டு.

இதையும் படிக்கலாமே:
தோஷம் நீக்கி வெற்றி தரும் மந்திரம்

- Advertisement -

அண்டங்கள் அனைத்தையும் கட்டிகாப்பவர் பாற்கடலில் வீற்றிருக்கும் “ஸ்ரீமன் நாராயணனாகிய” “மகாவிஷ்ணு”. இந்த பூமியில் அக்கிரமங்கள் அதிகரித்து கொண்டிருக்கும் போது ஒவ்வொரு முறையும் மகாவிஷ்ணு ஒரு அவதாரம் எடுத்து தீயவற்றை அழித்து, தர்மத்தை நிலைநாட்டச் செய்தார். அப்படி என்றென்றும் நிலைத்து இருக்கும் தர்மத்தை காக்க, அதன் மனித உருவாக, அயோத்தியின் அரசன் தசரதனின் மகனாக மகாவிஷ்ணு எடுத்த ஏழாவது அவதாரம் தான் “ஸ்ரீ ராமச்சந்திரன்” அவதாரம்.

ramar palam

அரசன் குலத்தில் பிறந்தாலும் எல்லோரும் விரும்பும் மானிட பண்புகளைக் கொண்டிருந்தார் ஸ்ரீ ராமர். தனக்கு எவ்வளவு துன்பங்கள் நேரினும் தான் கொண்ட கொள்கையில் இருந்து சிறிதும் வழுவாமல் இருந்தார். மேலும் அப்படிப்பட்ட ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கு, அவரது நிழல் போலிருந்து அவருக்கு தன்னால் இயன்ற அனைத்து வகையான சேவை செய்து என்றென்றும் ஸ்ரீ ராமரின் அன்புக்குரியவரானவர் “ஸ்ரீ ஆஞ்சநேயர்” இந்த இரு உதாரண புருஷர்களை போற்றும் இம்மந்திரத்தை ஜெபிப்பதால், இந்த இருவரின் நல்லாசிகள் நமக்கு எப்போதும் இருக்கும்.

English Overview:
Here we have Sri Rama Jayam mantra in Tamil. This mantra also includes the mantra for Lord Hanuman in Tami. So if we chant the above mantra then he can get the grace of Rama and Hanuman.