நீங்கள் இழந்த சொத்துகள் மீண்டும் பெற இம்மந்திரம் துதியுங்கள்

perumal

அனைவருமே கடினமாக உழைத்து தங்களுக்கான பொருளை ஈட்டுகின்றனர். அப்படி ஈட்டிய பொருளை கொண்டு தங்களின் எதிர்கால சந்ததிகளுக்கு சொத்துக்களை சேர்க்கின்றனர். ஆனால் சில தீய நபர்களின் சூழ்ச்சியால் அப்படியான பூர்வீக சொத்துகளை சிலர் இழக்க நேரிடுகிறது. வேறு சிலரோ உடல் மற்றும் மனநலன் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கும் ஒரு “ஸ்ரீமன் நாராயணனன் மந்திரம்” இதோ.

Lord Perumal

ஸ்ரீமன் நாராயணனன் மந்திரம்

ஆர்த்தா விஷண்ணா சிதிலாச்ச பீதா
கோரேஷு ச வ்யாதிஷு வர்த்தமானா
ஸங்கீர்த்ய நாராயண சப்தமாத்ரம்

விமுக்தது கா ஸுகினோ பவந்து
கூரேசர் அருளிய நாராயணாஷ்டகம்

perumal

வைகுண்டத்தில் வாசம் செய்யும் ஸ்ரீமன் நாராயணன் மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் துதிப்பவர்களுக்கு மிகுந்த நன்மைகளை உண்டாக்கும். மாத ஏகாதசி மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று மகாவிஷ்ணுவை மனதில் நினைத்தவாறு இந்த மந்திரத்தை 108 முறை துதிப்பதால் பிறரின் வஞ்சகத்தால் நீங்கள் இழந்த சொத்துக்கள் உங்களுக்கு திரும்ப கிடைக்கும். மனக்கவலைகள் மற்றும் நோய்கள் நீங்கும்.மனோதைரியம் உண்டாகும்.

- Advertisement -

Perumal

மனக்கவலை கொண்டவர்கள், துக்கத்தால் வருந்துபவர்கள், சொத்துகளை இழந்தவர்கள், பயம் கொண்டவர்கள், தீராத நோயினால் வேதனையுறுபவர்கள் என அனைவரும் ‘நாராயண’ எனும் திருநாமத்தை உச்சரித்தபோதே அந்த துன்பங்களிலிருந்து விடுபட்டு சுகமடைவார்கள். அப்படியொரு அமைதியை எங்களுக்கு அளிப்பாய் நாராயணா என்பதே இந்த மந்திரத்தின் பொதுவான பொருளாகும். ஸ்ரீமன் நாராயணனின் இந்த மந்திரத்தை துதிப்பதால் நமக்கு பல விதமான நன்மைகள் உண்டாகிறது.

இதையும் படிக்கலாமே:
குடும்ப வளம் பெருக ஸ்தோத்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Sriman narayana mantra in Tamil. It is also called as Perumal manthiram in Tamil or Narayana slokam in Tamil or Vishnu mantras in Tamil.